Monday, April 30, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 4 ப்ரப்த்தி செய்துகொண்ட ஜீவன் ஜீவன் சரீரத்தை விட்டு வெளியேறியதும் இவனுடைய ஸ்தூல் சரீரம்- அதாவது பதினொன்று த்வாரங்கள் கொன்டது--ப்ரஹ்மரந்தரம் அதையும் சேர்த்து -இது தலையின் வாசல்- அதை திறந்துகொண்டு ப்ரப்ந்நனை புறப்பட செய்கிறான் பகவான்-ஸ்தூல சரீரம் கழிகிறது- ஸூக்ஷ்ம சரீரம் ஆரம்பமாகிறது. அதை வைகுண்டம் போகும் பாதையில் அர்ச்சாதி மார்க்கம் வழியாக அழைத்து செல்லுகிறான். இவன் ஸ்தூல சரீரத்தில் இருந்தபோது இவனிடம் பெற்றுகொண்ட காணிக்கைகளால் மகிழ்ந்த தேவர்கள் இவனை வணங்கி ஸேவித்து செல்லுகிறார்கள். இவனை வழி நடத்தி செல்பவர்கள் ஆதிவாஹீகள்- அவர்களில் முதலில் வருபவன்- அக்னி தேவன். இவனுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து, ஆடல் பாடல்களுடன் அவன் எல்லை வரை கொண்டு சேர்கிறான். பின் சுக்ல, உத்தராயண தேவதைகள் வரிசையாக நின்றுகொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அமாநவன்- மின்னலுக்கு தேவதை- இவனை அழைத்துசென்று-வழியில் இந்திரன், வருணன் இவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ப்ரக்ருதி மண்டலத்தை கடந்து விரஜா நதிக்கரைக்கு வருகிறான். ( அன்பர்களை! இந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தை நினைவில் வைத்துகொள்ளுமாறு அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஸ்ரீரங்கம் வேறு-வைகுண்டம் வேறல்ல-காவேரி விரஜா தேயம், வைகுண்டம் ரங்கமந்திரம் என்பார்கள் ) விரஜா நதி எப்போதும் ஒரே விதமாக பகவானின் காலடியில் பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு அமுத ஆறு ) இது இரண்டு விபூதிகளுக்கும் எல்லை. ஸம்ஸாரத்திற்கு முடிவு எல்லையாகவும் பரமபதத்திற்கு தொடக்க எல்லையாகவும் அமைந்திருக்கிறது. இந்த நதியை பகவான் ஸங்கல்பித்து தன் மனத்தால் கடக்கிறான் என்பது ச்ருதி சொல்லுகிறது. அதில் மூழ்கி எழுந்தவுடம் அவனுடைய ஸூக்ஷ்ம சரீரம் விலகி- அமாநவன் இவனை தடவிக்கொடுக்க முக்தன் ஆகின்றான். இப்போது இவனும் பகவானும் ஒரே லோகத்தில் இருக்கிறார்கள்-அதாவது வைகுண்ட லோகத்தில். இனி வைகுண்ட லோகத்தில் இவனுக்கு நடக்கும் மரியாதைகளை பார்க்கலாம். அங்கே நித்ய சூரிகள் பகவானிடம் முன் நின்று கை கூப்பி அருளப்பாடு பாடுகிறார்கள். சிலர் பகவானின் திவ்ய மங்கள ரூபத்தை இமை கொட்டாது சேவித்துகொண்டே இருக்கிறார்கள். பகவான் ஐந்நூறு அப்ஸரஸ்குளை இவனை வரவேற்று அழைத்துவரும்படி செய்கிறான். அவர்கள் மாலைகள், மை, வாசனை பொடி, உடைகள் போன்ற உபசார பொருட்களுடன் இவனை அழித்து செல்கிறார்கள். அவனுக்கு வலம்புரி சங்கு, திருச்சின்னம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நித்ய சூரிகள் இவனுக்கு சிறந்த அலங்காரங்களை செய்வித்து திவ்யம் என்ற மரத்தின் வழியாக, ஸாலஜ்யம் என்ற ஆஸ்தான மண்டபத்தை அடைந்து, பின் இந்திரன், ப்ரஜாபதி என்ற த்வாரபாலகர்களை அணுகுகிறான்.அவர்கள் இன்முகத்தோடு இவனை திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பகவானை காண அநுமதிக்கிறார்கள். அங்கே சபையின் அதிகாரிகளான குமுதர், சண்டர் இவர்கள் இவனை கண்குளிர கடாக்ஷிக்கிறார்கள். விஷ்வக்சேநர் இவனுக்கு அருளப்பாடு சொல்லி கைங்க்கர்யத்தில் கல்ந்து கொள்ள சொல்லுகிறார். அவனும் பெரிய திருவடியை சேவித்து, பூர்வாச்சாரியர்களை அணுகி நன்றியுடன் வணங்கி எம்பெருமானது திவ்ய சிம்ஹாஸனத்தை அணுகுகிறான் அங்கே ஆதிசேஷன் மீது எம்பெருமானையும், பிராட்டிமார்களையும் தரிசனம் செய்கிறான். என்ன ஆனந்தம்! கண்களில் பாஷ்பவாரி சொறிகின்றது பகவானோ-அகில ஹேய கல்யாணகதாந ஸ்வேதர ஸம்ஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப: ! ஸ்வாமிமதாநுரூப ஏகரூப அசிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய ஓளஜ்வல்ய ஸொந்த்தர்ய ஸொகந்த்ய ஸொகுமார்ய லாவந்ய யொவனாதி அநந்தகுணநிதி திவ்யரூப ! ஸ்வாபிவிக அநவதிக அதிசய ஜ்ஞாந பல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: ஸொசீல்ய வாத்ஸல்ய மார்த்தவ ஆர்ஜ்ஜவ ஸொஹார்த்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர்ய ஓளதார்ய சாதுர்ய ஸ்த்தைர்ய தைர்ய சொர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞாதி அஸங்கேய கல்யாண குண களொக மஹார்ணவ // ஸ்வோசித விவித விசித்ராநந்த ஆச்சர்ய ப்ஹித்ய நிரவத்ய நிரதிசய ஸுகந்த நிரதிசய ஸுகஸ்பர்ச நிரதிசய ஓஓள்ஜ்வல்ய கிரீட மகுடசூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தா தாமோதர பந்தந பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண:/ ஸ்வாநுரூபா சிந்த்ய சக்தி சங்க்க சக்ர கதா அஸி சார்ங்காதி அஸங்க்யேய நித்ய நிரவத்ய கல்யாண திவ்யாயுத:/ ஸ்வாபிமத நித்ய நிரவத்ய அநுரூப வரூப ரூபமுண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிகாதிசய அஸங்யேய கல்யாண குணகண ஸ்ரீவல்லப : / கண்ணா உன்னை காண எத்தனை ஜன்மங்கள் கழித்தேன். நான் செய்த பாபங்களுக்காக புழுவாய் பிறந்தேன். நாயாய் அலைந்தேன், பலபிறவிகள் கடந்து மாநிட பிறவி பெற்றேன், மறுபடியும் பிறவியில் விழப்போன என்னை ஆசார்யன் மூலம் சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக உன் முன்ணே நிற்க வைத்து கண்குளிர காண வைத்து உன் கல்யாண குணங்களான- ஸொசீல்யம் = பெரியவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றர கலப்பது வாத்ஸல்யம்= பசு எப்படி கன்றுடன் தாயன்பு காட்டுகிறதோ அப்படி மார்த்வம் = தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்குவது ஸொஹார்த்தம் = எப்போதும் நன்மையே சிந்திப்பது ஸாம்யம் = ஜாதி மத பேதம் காட்டாது எல்லோருக்கும் ஆச்ரியனாக இருப்பது காருண்யம் = துக்கமடைந்திருப்பவரை பார்த்து இரக்கப்படல் மாதுர்யம் = தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருப்பது காம்பீர்யம் = ஆச்ரிதற்கு செய்யும் பேருதவிகள் வெளியில் தெரியாமல் அருள் பாலிப்பது ஓள்தார்யம் = கைமாறு கருதாது வேண்டியவற்றை அள்ளி கொடுப்பது. சாதுர்யம் = ப்ரதிகூலரையும் அநுகூலராக்கும் சாமர்த்யம் ஸ்தைர்யம் = அடியார்களை ஒருபோதும் கைவிடாதவன் தைர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் வென்று தன் பக்கம் இழுத்தல் சௌர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் தான் ஒருவனே சமாளிப்பது பராகரமம் = போர்களத்தில் எதிரிகளை அழிப்பது இப்படி அநந்த கோடி கல்யாண குணங்களை அடியவன் நேரில் காண வைத்து கிரீடம் = ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, தொப்பாரம், துராய் ஆகிய மூன்று முடிகள் கொண்டது மகர குண்டலம்= மகரவடிவான தோடுகள் க்ரைவேயக = திருகழுத்தில் சாத்துபவை ஹார = திருமார்பில் அணியும் முத்துவடங்கள் கேயூர = தோள்வளைகள் கடக் = முன் கையில் சாத்தும் வளையள்கள் ஸ்ரீவத்ஸ = திருமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிப்பூண் முக்தாதாம = ஏகாவளி த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள் உதரப்ந்தந= - திருவாயிறுபட்டை பீதாமபர = பட்டாடை காஞ்சீகுண = மேல் ப்ட்டாடை நூபுரம் = திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். உனது அருகில் த்வம், சௌலப்யம், உபாயத்வம், பிரயோஜனம், காருண்யம், பொறுமை, சாந்தம், அநுகூலமாயிருத்தல் போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மி அதி அத்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு. எம்பெருமானுக்கு ஏற்ற ஸ்வரூபம், திருமேனி, அவனோடு ஒத்து இருப்பது, அட்யார்களை ரக்ஷித்து காப்பவள். இப்படி பரமபதநாதனை ஸேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான். அவரிடம் அவர் திருவடிகளை யாஜிக்கிறான். பெருமாளும் அபார கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைத்து பூமாலை அணிவிக்கிறான். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வந்து அமரும் உகப்பில் இவனை தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறான். இந்த ஆனந்தத்தை அநுபவிக்கும் இவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறூபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அநுபவித்துக்கொண்டிருக்கிறான். என்னே! பரந்யாஸத்தின் சிறப்பு! என்னே! பகவான் காட்டிய சுலமான வழி. வாருங்கள் நாம் ஆசாரியரிடம் செல்வோம், இனி கால தாமதம் வேண்டாம். ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே கோபால தேசிக மஹாதேசிகாய நம: ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே // மாடபூசி ஜகன்னாதன்.

Monday, April 23, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3


ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3 ப்ரப்த்தி, பரந்யாஸம் பகவான் அல்லல் படும் சாதாரண நம் போன்றவர்களுக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை பெற சுலபமான மருந்து, -ஆசாரியர் மூலம் காட்டும் மார்க்கம்- ப்ரப்த்தி மார்க்கம்.-இதற்கு ஐந்து அங்கங்கள்- மிக எளிதானவை-ஆநுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம், கோப்த்ருத்வ வரணம், கார்ப்பண்யம் என்ற ஐந்து அங்கங்கள். பகவானையே உபாயமாக நிற்கும்படி ப்ரார்த்தித்து, அவனிடமே தன்னை காக்கும் பொறுப்பை ஒரே முறை சம்ர்ப்பிவிப்பது ப்ரப்த்தியாகும். பகவான் இதை ஆசாரியர் மூலம் அணுக சொல்லுகிறார். சிஷ்யன் தன் ஆசாரியரிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கிறான். ஆசாரியரும் மனம் மகிழ்ந்து அவனை மனைவியோடு ஒரு நல்ல நாளில் இதை செய்விக்கிறார். ப்ரப்த்தி செய்துகொண்டவன் நிலையை இனி பார்க்கலாம்:- கைமுதல் ஒன்றும் இல்லாத சிஷ்யன் தன்னை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பித்து ப்ரபத்தி செய்த பின் மறுபடியும் அந்த பயனுக்காக செய்யவேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரப்த்தியும் ஒருமுறைதான், பகவான் மோக்ஷம் தருவதாக சங்கல்பித்துவிட்டால் அதுவும் ஒறுமுறைதான்.ஒரு தடவை ஆசார்யன் தன் சிஷ்யனை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பிவித்துவிட்டால் சிஷ்யன் அந்த பலனுக்காக மறுபடியும் ப்ரப்த்தி செய்யக்கூடாது. ஆசார்யன் செய்த ப்ரப்த்திதான் அவனை காக்கும்-ஒருவேளை சிஷ்யன் மனம் வேறு மார்க்கத்தில் சென்றாலும்- இந்த ப்ரப்த்தி தான் அவனுக்கு பலன் தரும் ( இது என்னுடைய வாழ்க்கையிலேயே கண்கூடாக பார்த்திருக்கிறேன் ) பகவான் எல்லா கர்மங்களுக்கும் சரீரமாக கொண்டு எல்லா சொற்களும் அவனிடமே சேர்ந்து எல்லா தேவதைகளுக்கும் மேற்ப்பட்டவன் என்று வேதம் சொல்லுகிறது. சரணமடைவதற்கு முதல் ஆசார்யன்.ஜீவாத்மா மோக்ஷம் பெறுவதற்கு பகவானே உபாயமாய் நிற்கின்றான். ஆசாரியரிடத்தில் பெற்ற அறிவால் ஜீவன் உன்னையே தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் உன்னை சரண் அடைந்து பின் மோக்ஷம் என்னும் அழியா செலவத்தை பெறுகிறான்-இந்த ப்ரப்த்தி மூலம். ப்ரப்த்தி நால்வகையானது: 1. ஸ்வநிஷ்டை- விசேஷ ஞானமுடையவர்கள் எம்பெருமானிடம் தாமே ப்ரப்த்தி செய்தல். 2. உக்தி நிஷ்டை: ஆசார்யன் சொல்லும் வாக்கியத்தை தாமும் உச்சரித்தல். 3.ஆசார்ய நிஷ்டை- ஆசார்யன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். 4. பாகவத நிஷ்டை: ஆசார்யன் அல்லாத பாகவதன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். பக்தி யோகம், ஞான யோகம் இவை மிக கடினமானவை. சிறிது தவறு நேர்ந்தாலும் எதிர்பார்த்த பலன் சித்திக்காது. ப்ரப்த்தி மார்க்கம் மிக எளிதானது. நான்கு ஜாதியினரும் இதை செய்து கொள்ளலாம்.அந்த க்ஷணமே நிறைவேறிவிடுவதால் தடைக ளுக்கும், அவற்றால் வரும் அச்சத்திற்கும் இடமே இல்லை. இதை சற்று விரிவாக பார்க்கலாம். ப்ரப்த்தி செய்துகொண்ட சிஷ்யன் தான் இதுவரை செய்த பாபங்கள் அனைத்தையும் கழித்துவிடுகிறான். பின் அறியாமல் செய்யும் பாபங்கல் ஒட்டமாட்டா.சில தவறுகள் நேர்ந்தாலும் அவை உரிய ப்ராயசித்தங்க்களால் உடனேயே மறைந்துவிடுகின்றன. இவனுக்கு யமனுக்கு வசப்படுதல், நரக வேதனை முதலியவை கிடையாது. தன்னை காக்கும் பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்துவிட்டதால் பயமில்லாமல் எஞ்சிய நாட்களை கழிக்கலாம். இங்கிருக்கும் நாள் வரை அவன் தன் மனம், வாக்கு, காயம் எல்லாம் பகவானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே செலவிடுகிறான்.சம்ஸார பந்தத்த்லிருந்து விடுதலை பெற்று பகவானிடம் சேரும் நாளை ஆவலோடு எத்ர்பார்த்துகொண்டு-தன்னுடைய நித்ய, நைமித்ய கர்மாக்களை செய்து கொண்டு-பகவானுடைய லீலைகளை காலட்க்ஷேபம் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவும் எஞ்சிய நாட்களை கழிக்கிறான் . அதோ அந்த நாள் வந்துவிட்டது. இவனை வெளியேற்ற பகவானே உபாயம் செய்கிறான்.வாக்கு, கை, கால், மல்த்வாரம், ஜலத்வாரம் ஆகிய கர்மேந்திரியங்களையும், செவி, வாய், கண், மூக்கு, ஸ்பர்சேந்திரியம் ஆகிய ஜ்ஞாநேந்திரியங்களையும் மனத்தோடு சேர்த்து அதை ப்ராணவாயுவோடு சேர்க்கின்றான். அந்த ப்ராணவாயுவை ஜீவனோடு சேர்க்கின்றான். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவனுடைய் சரீரத்தில்-பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்ம பகுதிகளுடன் சேர்த்து அவனுடைய ஹ்ருதய கமலத்தில் வீற்றிருக்கும் பகவான் தன்னுடன் இவைகளை அணத்துகொண்டு உடலை விட்டு பிரியம் வேதனை, களைப்பு ஒன்றும் இல்லாமல் இட்டு செல்கிறான். இனி வெளியேறிய ஜீவனுக்கு பகவான் செய்யும் விசேஷ உபகாரங்க ளை பார்க்கலாம். மாடபூசி ஜகன்னாதன்.

Saturday, April 21, 2012

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல் மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26. 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும். 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது. 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான். 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது. 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது. 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது. 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல். 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக. 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது. 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து. 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும். 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல். 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன். 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல். 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல். 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல். 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல். 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல். 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல். 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை. 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி- மாடபூசி ஜகந்நாதன்

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல்


மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். 


முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26.


 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும்.


 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது.


 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான்.


 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது.


 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது.


 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது.


 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல்.


 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக.


 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது.


 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 


 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து.


 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும்.


 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல்.


 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 


 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 


17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 


18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன்.


 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல்.


 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல்.


 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல்.


 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல்.


 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல்.


 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல்.


 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை.


 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் 


 ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) 


நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி-


 மாடபூசி ஜகந்நாதன்

Tuesday, April 17, 2012

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள் ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள்

ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

சில காலங்ககளுக்கு முன்பு அடியேனுடைய பிளாக்கில் மரணத்திற்கு பிறகு ஜீவன் எங்கே போகிறது என்பதை விளக்கியிருந்தேன். அவை பொதுவானவை. அதற்கு பலர் பாராட்டி எனக்கு எழுதியிருந்தார்கள். 50-வயதை தாண்டிய பல பெரியவர்கள்- தனக்கு அடிக்கடி மரண பயம் வந்துகொண்டே இருக்கிறது- இதற்கு என்ன செய்யலாம் என்று எனக்கு எழுதி இருந்தார்கள். இதே நிலையில் தான் நானும் சில வருஷங்களுக்கு முன் இருந்தேன். ஆனால் நம் பௌண்டரீகபுரம் ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிக ஸ்வாமியிடம் பரந்யாஸம் செய்துகொண்ட பின் அந்த பயம் போய்விட்டது. இது எதனால் என்று சற்று பார்க்கலாம்.

சாதாரணமாக பெருமாள் கோயிலில் கர்பகிரஹத்திற்கு போகும் முன் நாம் 8-அல்லது 9- படிகளை தாண்டுகிறோம். பிறகு பெருமாளின் தெய்வ மங்கள அர்ச்சா மூர்த்தியை கண் குளிர சேவிக்கிறோம்.ஸ்வாமி தேசிகன் சில்லரை ரஹஸ்யங்கள் என்ற தலைப்பிலும் பரம பத சோபானம் என்ற ஸ்லோகங்களின் மூலம் நம்க்கு ஆசாரியன் மூலம் பகவானிடம் சரணாகதி செய்து கொண்ட ஜீவன் அடையும் உபகாரங்களை பற்றி விளக்கியிருக்கிறார்கள்.

அடியேனும் பல உபதேசங்களை கேட்டு இருக்கிறேன். அவைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை. மேற்படி 8- அல்லது 9- படிகள் மோக்ஷமாகிர உயர்ந்த ஸ்தானத்திற்கு பரந்யாஸம் செய்துகொண்ட ஜீவனுக்கு பகவான் செய்யும் உப்காரங்கள்.

படி-1

1. நமக்கு ஆசாரியரிடம் சென்று உபதேசம் செய்துகொள்ள எண்ணத்தை தோற்றுவித்தல்.
2. அதற்கு தகுதி பெற சிஷ்யன் செய்ய வேண்டிய கடமைகள்.
3. ஆசாரிய உபதேசத்தால் சிஷ்யன் பெறும் அறிவு.
4. சரணாகதியின் அங்கங்கள் திருமந்திர விளக்கம்

படி -2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யன் இப்போது சிந்திக்க ஆரம்பித்தல்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்.

படி-4

பழைய நிலை கழிதல்

படி -5

ப்ரப்த்தியை பற்றி விவரமாக அறிந்துகொள்ளுதல். சம்ஸார பந்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுதல், ஜபம் செய்தல்.

படி-6.

இங்கிருக்கும் நாள்வரை சிஷ்யன் செய்யவேண்டியது.

படி-7

அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்.

படி-8

ஸ்ரீவைகுண்டத்தை அடைதல்.

படி- 9

பெருமாளை நேருக்கு நேராக காணுதல்.

இந்த 9- படிகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்


படி-1

ஆசாரியரிடம் உபதேசம்.

இந்த ஜீவன் தாயின் கர்ப்ப வாசத்தில் இருக்கும்போது அநுபவிக்கும் வேதனை சொல்லமுடியாது. உடலை சுருக்கிக்கொண்டு பல மாதம் அவஸ்தை படுகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாஸனை நன்றாக தெரியும். மல மூத்ராதிகளில் உழன்று நரக வேதனை அநுபவிக்கிறான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனை, தான் அநுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் பகவான் அப்போது மறக்கடித்துவிடுகிறான்.

பால்ய பருவம், கௌமார பருவம் இவைகளை முறையே இனிதாக கழிக்கிறான். அப்போது ஏற்படும் பாவ
புண்யங்களை பகவான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.யௌவனப்பருவம் ஆரம்பமாகிறது இந்த ஜீவனுக்கு. அப்போது அவனுக்கு உலகம் புறிய ஆரம்பிக்கிறது. கூடவே பகவான் காம, க்ரோத, மத, மாச்சர்யம், தமோ குணம், ரஜோகுணம்,சாத்வீகம், ஆசை, மோஹம், விருப்பு, வெறுப்பு, த்வேஷம் இவைகள் அனைத்தையும் அவனுக்கு காண்பிக்கிறார்.இதிலிருந்து தான் அவனது பாவ, புண்ய மூட்டைகள் தொடங்குகிறது.

இந்த வயதில் தான் அவனது சம்ஸார வாழ்க்கையும் தொடங்குகிறது. நல்ல வளமான நிலம்-பாவ பயிர்களை நடுவதற்கு. இது தொடர்ந்துகொண்டே அவனை 50-வயதுவரையில் இழுத்துக்கொண்டே செல்கிறது. அவன் சேர்க்கும் பாவங்கள் இரும்பு விலங்கு, சேர்க்கும் புண்யங்கள் தங்க விலங்கு. இதை இவன் அறியான். திருந்தி வர பல சந்தர்ப்பங்களை பகவான் ஏற்படுத்தி கொடுக்கிறான்- ஆனால் இந்த ஜீவன் மயக்கத்திலேயே இருப்பதால் அவைகளை பயன்படுத்திகொள்ள தவறுகிறான்.

அடிபட்டு, அடிபட்டு கடைசியில் பகவானிடம் சென்று இறைஞ்சுகிறான்.ஆனால் இன்னும் ஞானம் வரவில்லை. அவன் கேட்பதோ சில்லரை விஷயங்கள்- அழ்கான மனைவி, நல்ல உத்தியோகம், கை நிறைய காசு இப்படியாக் எல்லாமே லௌகீக விஷயங்கள். சந்தோஷம் வந்தால் ஆனந்தம், துக்கம் வந்தால் தளர்வு, உபாதைகள், வியாதிகள் இப்படியாக அநுபவிக்கிறான். அப்போது தான் அவன் பகவானை சிந்திக்க ஆரம்பிக்கிறான்-இப்படி மாற்றியும் சொல்லலாம்- பகவான் அவன் பேரில் இரக்கம் கொண்டு இந்த ஜீவனை கடைதேற்ற சங்கல்பித்துக்கொள்கிறான்.

முதலில் இவனுக்கு ஆகார்ய சம்பந்தம் கிடைக்க வழி செய்கிறான். தினம் அவன் கோயிலுக்கு செல்லும்போது பல பெரியவர்கள் சொல்லும் உபந்யாஸங்களை கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்க முயலுகிறான். தான் எந்த பரம்பரையிலிருந்து வந்தவன் என்று அறிகிறான். அதை சார்ந்த பரம்பரையின் குருவை தேடுகிறான். தயக்கதுடனேயே அவரை அணுகுகிறான். அவன் அதிர்ஷ்டம்- அவர் நல்ல ஆசாரியர்-வேதங்களை கற்றுணர்ந்த பெரியவர், ஆசார சீலர், நல்ல பண்டிதர், தாராள மனசு. தவறு செய்பவர்களை திருத்தி தன் வசம் இழுப்பவர்- இவரை காண்பித்ததே பகவான் இந்த ஜீவனுக்கு செய்த பேருபகாரம்.

படி-2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்று சிந்தித்தல்

அவரிடம் அடிக்கடி போகிறான்- அவர் உபதேசங்களை கேட்கிறான்.புராண, இதிஹாஸங்கள்
புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான்- ராம கிருஷ்ணாதி கதைகளை கேட்கிறான். ஆசாரம், அநுஷ்டானம் முதலியவைகளை கேட்டு தெரிந்து கடைபிடிக்க ஆரம்பிக்கிறான்- இதுவும் ப்கவத் சம்பந்த்தாலேயே- அவனுக்கு ஞானம் வளர ஆரம்பிக்கிறது. ஆனால் பக்குவம் வரவில்லை.

தன்னுடைய பழங்கால நடவடிக்கை எல்லாம் அவனுக்கு வருகிறது .செய்த பாபங்களோ அநேகம். செய்த புண்யங்களோ சிலவே. இவைகளை நினைத்து மனம் தளர்கிறான்.அதனால் அநுபவித்த கஷ்டங்கள் எத்தனையோ! நஷ்டங்கள் ஏராளம்.பல லக்ஷக்கணாக்கான மக்களோடு தானும் ஒருவனாகி ஒரு மூலையில் உட்கார்ந்து சிந்திக்கும்போது அவனுக்கு நல்ல காலம் வருவதை-பகவானின் கரூணை உள்ளம் இனி இவனை கரையேற்ற வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கிறான். ஆசார்ய சம்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறான்.

தனக்கு நாராயணனை தவிர வேறு கதியில்லை என்று தனக்குள்ளே சங்கல்பித்துக்கொள்கிறான். இனி தான் பழைய வழிக்கு திரும்பமாட்டேன்.ஹரி என்ற திரு நாமம் அவனுக்குள்ளே ரீங்காரம் இட ஆரம்பித்திருக்கிறது. இனி பழைய நிலையை மறந்து சத் சங்கம், தியானம், காலட்க்ஷேபம், பகவத் ஆராதனம் போன்றவற்றில் இறங்குகிறான். விவேகம் பிறக்கிறது. ரஜோ, தாமஸ குணங்கள் விலகி, ஸத்வ குணம் மேலோங்க ஆரம்பிக்கிறது. சாத்வீகம் வளர்கிறது. இவையெல்லாம் ஆசார்ய சம்பந்தத்தினாலும் பகவானின் கருணையாலும் என்று உணர்கிறான்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்

அவனுடைய் அசுர தன்மை விலக ஆரம்பித்திருக்கிறது. முன்பு வேகம், வேகம், பரபரப்பு, எதிலும் அவசரம் போன்ற குணங்கள் மாற தொடங்கி, நிதானம், பொறுமை மெதுவாக பேசும் தன்மை போன்ற சாத்வீக குணங்கள் வளர்கின்றன. அதிக சந்தோஷம், அதிக துக்கம் என்று இல்லாம்ல் பழைய நிலையை முழுதுமாக மறக்கிறான். பார்ப்பவர்கள் இவனுடைய மாறுதல்களை கண்கூடாக பார்க்கிறார்கள்.

பகவானிடமனது லயிக்க ஆரம்பிக்கிறது. சினிமா மோகம் மறைகிறது. ஆசையை தூண்டும் கதைகள்.நாவலகள் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டான். புராண இதிஹாஸங்களை படிக்க தொடங்குகிறான். ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு, ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகங்க்ள் என்று ஆழ்வார்களின் ஸூக்திகளும், ஆசார்யர்களின் அறிவுரைகளும் அவன் மனதில் ப்திய ஆரம்பிக்கிறது.

ஆசாரமே இன்னது என்று தெரியாத காலம் போய் 12- திருமண் விசேஷ காலங்களிலும், ஆசாரியரை தரிசிக்கும் போதும் தரிக்கிறான். வெளியே சென்று வந்ததும், அல்ப சங்கை சமயத்திலும் கை கால்களை அலம்பி உள்ளே நுழைகிறான். முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகி விட்டது. மேஜை சாப்பாடு போய் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறான்.

பித்ருக்களின் தர்ப்பணங்களை ஒழுங்காக செய்ய தொடங்குகிறான். அமாவாசை தர்ப்பணம் செய்யாதவன் தவறாமல் செய்ய தொடங்குகிறான். எதற்கும் எதிர்வாதம், குதற்க அர்த்தம் கண்டுபிடிப்பவன், அமைதியாக சொல்வதை காது கொடுத்து கேட்கிறான்.

இவனுடைய மாறுதல்களை மேலும் பார்ப்போம்.கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவை தவிர்கிறான். தன்னுடைய குருபரம்பரையை தெரிந்து கொண்டு அவர்கள் தனியங்களை தினமும் சொல்ல தொடங்குகிறான். தந்தம் சுகங்களே துக்கத்தில் கொண்டுபோய்விடுகின்றன என்று அறிகிறான். அது வெறுப்புக்குறியது என்று உணர்கிறான்

இதனால் மற்ற பலன்களில் ஆசையில்லாமல் மனதை பகவானிடம் திருப்புகிறான்.இவனுக்கு ஜீவாத்மா, பரமாத்மா, சரீரம் இவைகளைபற்றிய விவேகம் ஏற்பட்டு, பகவானுக்கு தான் அடிமை என்று உணர்கிறான், பழைய நிலையை உணர்ந்து பாபங்களை செய்யாமல் விலகி நிற்கிறான். ஸம்ஸார பந்தத்திலிருந்து மனதை திருப்பி பகவானிடம் லயிக்க ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் பகவான் ஆசார்ய சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொடுத்த நன்மையால் தான்.

R.Jagannathan.







</b>

Sunday, March 25, 2012

ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்

நம் ஸ்வாமிகள்

ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம்:

ஸ்ரீமதே கோபாலதேசிக மஹாதேசிகாய நம:

ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்




சமீபத்தில் நம் ஆசார்யன் ஸ்ரீமத் கோபாலதேசிக மஹா தேசிகஸ்வாமி திருநாட்டை அலங்கரித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனது மனது மிகவும் சஞ்சலப்பட்டது. என் மனம் பின்னோக்கி 1990 ம் வருஷம் நினைவுக்கு வந்தது. 1990 ம் வருஷம் மே மாதம் தான் நான் முதன் முதலில் ஸ்வாமியை தெண்ட்ன் சமர்ப்பிக்க சென்றேன். என் தாயார் தான் என்னை அழைத்து சென்றார்.கூடவே என் மனைவியும் என் தம்பி ஸ்ரீதானும் வந்தார்கள். என் சஷ்டி அப்த பூர்த்தி முடிந்த கையோடு அவரை தரிசிக்க சென்றோம்

அதுவரையில் நான் லௌகீக வாழ்க்கையில் கால்த்தை போக்கிவிட்டேன். வெளி நாடு, உள் நாடு என்று வேலக்காக முழு நேரத்தையும் செலவழித்து வந்தேன். எனக்கு அதுவரையில் ஆசாரம், அநுஷ்டானம் எதுவும் தெரியாது. என் மனைவி ஓரளவு அநுஷ்டித்து வந்தாள்- அது அவள் சிறுவயதிலிருந்தேகற்றுக்கொண்டது.

என் தாயாரை ஸ்வாமிக்கு நன்றாக தெரியும். திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிக்கு பூர்வாஸ்ரமத்தில் தமையன் முறையாகும் என் தாயார். என் தாயாரின் குடும்பம் நல்ல வைதிக குடும்பம் என்பதும் ஸ்வாமிக்கு நன்கு தெரியும். என் தம்பியையும் அவருக்கு நன்றாக தெரியும்-முசிரியில் பழக்கம்.

ஸ்வாமிகள் என் தாயாரை என்னைப்பற்றி கேட்டார். நான் மலேஷியாவில் வேலை பார்த்த முதல் எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள். ஸ்வாமிகள் என்னை பார்த்து- சந்தியாவந்தனம் மூன்று வேளையும் பண்ணுகிறாயா? என்றுகேட்டார். நான் சற்று தயங்கினேன். ஸ்வாமிகள் புரிந்து கொண்டு என் மனைவியை பார்த்து இனிமேல் காலையில் காபி கொடுக்கும்போது சந்தியாவந்தன்ம் பண்ணிவிட்டு வந்தால் தான் கொடு.

அன்று முதல் இன்று வரை முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகிவிட்டது எவ்வளவு சுலபமாக என்னை திருத்திவிட்டார். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. என்னை அறியாமலேயே அவரிடம் எனக்கு மரியாதை கலந்த பயம், ஒரு ஆகர்ஷண சக்தி அவர்பால் ஏற்ப்பட்டது.

அதன் பின் என் தாயார் காலமாகிவிட்டார், 1994-ல் என் தகப்பனாரும் காலமாகிவிட்டார். அதுவரையில் நான் முழு மூச்சில் வேலை பார்த்துவிட்டு இனி நாம் ஆன்மீகத்தில் மனதை செலுத்தவேண்டும். என்று சங்கல்பம் செய்துகொண்டேன். என் மனைவிக்கோ சிறு வயது முதல் அரங்க்ன் மீது தீராத பக்தி. கல்யாணம் ஆகும் வரை தினமும் ரங்கனை சேவிக்காமல் ஒரு நாளும் இருந்த்தில்லை. ஸ்லோகங்கள் எல்லாம் நன்றாக தெரியும்.தவறாமல் தினமும் சொல்லிவிட்டு தான் வேறு காரியம். அவளுக்கு சிலகாலம் ஸ்ரீரங்கத்தில் தங்கி ரங்கனை மறுபடியும் சேவிக்க வேண்டும் என்று ஆசை

இதற்கு தோதாக நான் ஸ்ரீரங்கத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு வைத்திருந்தேன். பந்துக்கள் எல்லோரும் திருச்சியில் இருப்பதால் கடைசியில் அங்கு போய்விடலாம் என்று ஒரு எண்ணம்.

அது வரையில் எனக்கு ஸ்ரீனிவாஸன் தான் கைகண்ட தெய்வம் வேறு எவரையும் பார்த்ததுமில்லை, ஈடுபாடும் இல்லை-என்னை மிக கஷ்டமான நிலையிலிருந்து கை தூக்கிவிட்டவர் திருப்பதி வெங்கடாஜலபதி. எனக்கு அவரிடம் ஆறாத பக்தி. ஆனால் என்னவோ தெரியவில்லை நான் ஸ்ரீரங்கத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்யவேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது. அதற்கு 1995-ல் தான் காலம் கை கூடி வந்தது.

எனக்கு ஸ்ரீனிவாசன் ஒரு விஷயத்தை நன்றாக விளக்கி காட்டினான். தான் வேறு அல்ல, அரங்கன் வேறு அல்ல, பேரருளாளன் வேறு அல்ல ஆகையால் தாரளமாக அரங்கனை சேவி அவன் அருள் உனக்கு கிட்டும் என்று விடை கொடுத்து என்னை ஸ்ரீரங்கத்திற்க்கு அநுப்பிவித்தான். இது 1994 - அக்டோபரில் நடந்தது. 2 வருட காலம் இருக்கலாம் என்று கிளம்பிய அடியேனை 14- வருஷ காலம் அரங்கன் தன்னிடம் இருத்திக்கொண்டுவிட்டான்.

இந்த 14- வருஷ காலம் என் வாழ்க்கையில் பொன்னான காலம். ஸ்வாமியை போய் முதலில் தெண்டன் சம்ர்ப்பித்தேன். விவரங்களை சொன்னேன். ஸ்வாமியும் அநுக்கிரகித்தாயிற்று. அடிகடி ஆச்ரமத்திற்கு வா- காலட்க்ஷேபங்களை கேள் என்று சொன்னார். அதுவரையில் லௌகிகத்தையே கண்ட எனக்கு இது ஒரு திருப்பு முனை.

ஸ்வாமியிடம் சொல்லிவிட்டேனே தவிர எனக்கு உள்ளூர ஒரு பயம்- ஆசாரம் ஒன்றும் அறியாததால் ஸ்வாமியை தெண்டன் சம்ர்பிக்கும் போது ஏதாவது அபசாரம் செய்துவிடிவேனோ என்ற பயம். ஸ்வாமியின் கருணா கடாட்சம், கணிந்த பார்வை, ச்கஜமாக பழகும் போக்கு எல்லாம் என்னுடைய பயத்தை போக்கியது.

அவரை தெண்டன் சமர்ப்பிக்கும் போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த திருமுகத்தில் தான் எத்தனை சாந்தம்-எளிமையான தோற்றம்-படோடாபம் இல்லாத அமரிக்கையான தோற்றம்-மனதில் உள்ள எல்லா கவலைகளும் அவரை பார்த்த மாத்திரத்தில் போய்விடும்-ப்ரிதி பலன் கருதாத அனுக்ரஹம். என் பிள்ளைகளை பற்றி விசாரிப்பார். பெரிய பையன் டாக்டர்- எல்லா வசதிகளும் அவன் ஆஸ்பத்திரியில் உண்டோ? என்று ஆர்வமாக கேட்பார். சின்ன பையனை பற்றி கேட்பார்-அவன் த்யாரிக்கும் கை கடியாரத்தை பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மக்ழ்ச்சி.

பெண்ணை பற்றி கேட்பார். அவள் அமெரிக்காவில் இருப்பதை கேட்டு அங்கு உள்ள விவரத்தை ஆர்வமுடன் கேட்பார். நீ அங்கு போனாயோ? ஆசார அநுஷ்டானத்தை எங்கு சென்றாலும் விடாதே என்றுசொல்வார்.

ஒரு தடவை அவர் ஆடியோ கேசட்டில் பதிவு செய்த-யதிராஜ சப்த்தையை- சி.டியில் பதிவு செய்து அவரிடம் சம்ர்பித்தேன். அவர் அநுக்ரஹம் எனக்கு கிட்டியது என் பாக்கியம். கடைசியாக நான் ஸ்ரீரங்கத்தை விட்டு பெங்களூருக்கு நிரந்தரமாக மாறப்போவதை அவரிடம் சென்று விடை பெற்று கொள்ள சென்றேன். ஒரு ஐந்து நிமிஷம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பெங்களூரில் நம் ஆச்ரமம் உருவாகிகொண்டிருக்கிறது. அங்கு போய்விட்டு வா என்று சொன்னார்.

நான் அவரிடம் 2007- பரந்யாசம் செய்து கொண்ட நாளை என்றும் மறக்கமுடியாது. முதலில் அவரிடம் சன்று என் அபிலாஷையை சொன்னேன். அடுத்த புதன் கிழமை வா அப்படியே உன் தம்பி. தம்பி ஆம்படையாளையும் அழைத்துவா என்று விடை கொடுத்தார். என் மனைவிக்கு தம்பி ஆம்படையாளிடம் ரொம்ப பாசம். அவள் உடம்பு சரியில்லை எப்படியாவது ஸ்வாமியிடம் பரந்யாசம் செய்துவித்துவிடவேண்டும் என்று அவளுக்கு ஆசை.

புதன் கிழமை- சங்கல்பம் செய்து கொண்டு கொள்ளிடத்திற்கு சென்று 27 முறை ஸ்நானம் செய்து அச்ரமத்திற்கு திரும்பும்போது என் ஸ்கூட்டர் கவிழ்ந்து எனக்கும் என் தம்பிக்கும் நல்ல அடி இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இது என்ன் சோதனை என்று ஸ்வாமிகளை மனதார வேண்டினோம். என்ன ஆச்சர்யம்-இரத்தம் நின்று விட்டது.

சுமார் 9.30 மணிக்கு ஸ்வாமிகள் எங்களை உள்ளே அழைத்தார். எங்கள் மனது ஒருமுகமாக ஸ்வாமியின் பால் ஈர்க்கப்பட்டது. அடுத்த 2-ம்ணி நேரம் நாங்கள் எங்களை மற்ந்தோம். ஸ்வாமிகளிடம் தெண்டன் சர்ப்பிவித்துவிட்டு கை கூப்பி நின்று கொண்டிருந்தோம். ஸ்வாமிகள் எங்களை அவர் நித்ய ஆராதனம் செய்யும் மணி மண்டபத்துக்கு அழைத்து சென்றார். எங்களை அதற்கு சற்று வெளியே இருக்க செய்து எங்களிடம் தான் பெருமாளிடம் ப்ரார்த்தனை செய்துவிட்டு வரும் வரை சாஷ்டாங்க நமஸ்காரம் ச்ய்துகொண்டே இருங்கள், அது முடியாதவர்கள் நாராயணாய நம்: என்று ப்ரார்த்திதுகொண்டே இருங்கள் என்று சொல்லிவிட்டு சாளக்கிராம மண்டபத்தை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டே இருந்தார். சுமார் 1- மணி நேரம் பகவானிடத்தில் எங்களுக்காக பரிந்து பேசி எங்கள் சரணாகதியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தார்.

அவர் வயது அப்போது 87 இருக்கும் அந்த வயதிலும் எவ்வளவு பரிவு-சிஷ்யர்களிடத்தில். எங்கள் பாப மூட்டைகளை தொலைப்பதற்காக எத்துனை ப்ரதக்ஷணம் பகவானை. எங்கள் சிந்தையெல்லாம் இப்படிப்ப்ட்ட ஒரு ஆசாரியரை எங்களுக்கு அளித்த பகவானுடைய கருணை, அளவிடமுடியாத்து-அசங்கேய கல்யாண குணங்கள் நிரம்பியவன், காருண்யன், பரம தயாளன். நாங்கள் ஸ்வாமியையே பார்த்துக்கொண்டிருந்தோம்-அவர் முகத்தில் ஒரு தனி தேஜஸ், ஒரு த்ருப்தி, சாந்தம்- எங்களை பகவானிடம் சரணாகதி அடைய செய்துவிட்ட ஆத்ம திருப்தி.

பிறகு எங்களை அவர் அறைக்கு அழைத்துபோய் ஒரு அரை மணி நேரம் -ப்ரபத்தியை பற்றியும் அதன் அங்கங்களை பற்றியும் விளக்கினார். இனி நாங்கள் செய்யவேண்டியதை பற்றி சொன்னார். தினமும் ஜபம் செய்யுங்கள் என்று ஜப புஸ்தகத்தை தந்தார். பூண்டு, வெங்காயம் இவைகளை சாப்பிடக்கூடாது, நாராயணனை தவிர வேறு தெய்வங்களை உபாஸிக்கக்கூடாது, ஆசார, அநுஷ்டானத்தை சிரத்தையாக் செய்துவரவேண்டும் என்று சொல்லிவிட்டு எங்களை சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று விடை கொடுத்தார்.

இந்த நாளை எங்களால் மறக்க முடியாது. எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. அன்று முதல் இன்று வரை நாங்கள் அவருடைய அறிவுரையை கடைபிடித்து வருகிறோம். அவருடைய ஆசியினால் வாழ்க்கை படகு இனிதே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பேற்ப்ப்ட்ட ஒரு ஆசாரியரை நம்க்கு அளித்த அரங்கன் திவ்ய தம்பதிகளுக்கு கோடாணு கோடி சாஷ்டாங்க நமஸ்காரம்.

சாந்தம் தவழும் அவர் திருமுகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். .பௌண்டரீகபுச்ர ஆஸ்ரமம் ஒரு சீல புருஷரை இழந்துவிட்டது. 30 வருஷம் அதை தாங்கி ஒரு மகத்தான நிலையில் நிறுத்திவைத்திருக்கிறார். அவருடையை சேவையை வார்த்தைகளால் அளவிடமுடியாத்து. அது ஒரு பொன்னால காலம். இம்மாதிரி ஆசார்யன் யுகத்திற்கு ஒரு தடவை தான் அவதரிப்பார் போலும்.

ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம:

ஸ்ரீமதே கோபாலதேசிகாய மஹாதேசிகாயநம:

அடியேன் தாஸன் மாடபூசி ஜெகன்னாதன்.

Friday, March 16, 2012

ஸ்ரீரங்கமஹத்வம்

ஸ்ரீரங்கமஹத்வம்

சொல்லும் சுடலும் உலகமே சொல்லும், அல்லும் பகலும் அணி திருவரங்கம் என்ன, நல்லோர் என்று சொல்லும் பெரியவர் திருவடியே சேர்ந்தேன் நான், திருவடியில் ஏழு மதிள் அரங்கத்தம்மான், மச்சோடு மாளிகை மதிள் அரங்கருக்கு, அத்தர், சித்தர், பக்தர் வாழும், அந்த நீல அரங்கர், ஏல நீல அரங்கர், தேனார் திருவரங்கம், தேனே திருவரங்கம், மண்டலத்தை மதிள் சூழ்ந்த ரங்கம் ஆங்காரம் கெய்யாத, அமுதென்ன தென்னரங்கம், ஹரி ஹரி பெரிய கோவில், அணி திருவரங்கம் கோயில், சொல்லுவார் சொல்லும் கோயில், தூய்மதி உறையாத கோயில், மெல்லியார் உறையும் கோவில், வேந்தரடி பணியும் கோயில், அல்லியார் போற்றும் கோயில், ஆண்டாள் அரவணைமேல் அமரும் கோயில், காதத்தே மணி ஓசை கேட்கும் கோயில், கேட்டதே இரண்டு செவியும் களிக்கும் கோயில், தூரத்தே திருச்சின்னம் தோற்றும் கோயில், வேதத்தால் பெரிய கோயில், விபீஷணர் வணங்கும் கோயில், ஆதி பெருமாள் என்று அனைவருக்கும் பெரிய கோயில் தானே!

ஹரி, ஹரி பெரிய கோயில். அம்புஜதத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில், தோராத தனி வீரன் தொழுத கோயில், துணையாம் விபீஷணற்கு துணையான கோயில், சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில், செழுமறையின் முதலெழுத்தை சேர்ந்த கோயில், தீராத வினையெல்லாம் தீர்க்கும் கோயில், திருவரங்கம் பெரிய கோயிலிதுதானே! ப்ரம்மாவும் பெறும் தவத்தால் பெற்ற கோயில், பெற்று வைத்து பிள்ளையவர் பெராத கோயில், அயன் வந்து அறுபதாயிரம் பேரோடு அர்ச்சித்த கோயில், பலவினைகள் தீர்த்த கோயில், பரிதாபம் தீர்த்த கோயில், திருவரங்கம் பெரிய கோயில் என திகழும் கோயிலிதுதானே!

ஸப்த ப்ராகாரமும், சந்நிதியும் கண்டேன். ஸர்வேஸ்வரன் திருவடிகளை சாஷ்டாங்கமாக சேவிக்க கண்டேன். இருபுறமும் காவேரி இசைந்துவர கண்டேன். திருமஞ்சன காவேரி சேவிக்கவே கண்டேன். ஆயனார் கோயில் அடி மதிலை கண்டேன். திருகோயில் ஆயனார் திருவழகை கண்டேன். அடையவளைஞ்சான் அடிமதிலை கண்டேன். ஆண்டாள் சந்நதி அதிசயம் கண்டேன். தேர் கண்டேன். சித்திரை வீதி கண்டேன். உத்தர வீதி கண்டேன். நாடு கண்டேன். நகரம் கண்டேன். நாலுகால் மண்டபத்தில் திருவந்திப்பு காப்பு அழகை கண்டேன். ஆனையேத்தி மண்டபமும், ஆண்டாளுடைய சேவை அழகையும், அரங்கனுடைய சேவை அழகையும் கண்டேன். தொண்டரடிபொடி ஆழ்வாரை சேரவே சேவித்தேன்.

கூரத்தாழ்வாரை கூடவே சேவித்தேன். நாதமுனி ஆழ்வாரை நன்றாகவே சேவித்தேன். ஆளவந்தாரை அனுதினமும் சேவித்தேன். சூடிக்கொடுத்த ஆண்டாள் திருவழகை சேவித்தேன். பெரிய ஆழ்வாரை பிரியாமல் சேவித்தேன். கற்கருடக்கம்பத்தை கண்குளிரசேவித்தேன். திருப்பானார் ஆழ்வார் திருவழகை சேவித்தேன். சக்கரத்தாழ்வாரை சரணம் என்று சேவித்தேன். உக்ர நரஸிம் ஹரை உகந்து சேவித்தேன். கோதண்ட ராமரை கூடவே சேவித்தேன். குலசேகர ஆழ்வாரை கூடவே சேவித்தேன். சீதா பிராட்டியார் திருவழகை சேவித்தேன்.

பிள்ளைலோகாச்சாரியாரை பிரியாமல் சேவித்தேன். பார்த்தசாரதியை பணிந்து நான் சேவித்தேன். பாஷ்யகாரரை பணிந்து நான் சேவித்தேன். திருகச்சி நம்பியின் திருவழகை சேவித்தேன். நம்மாழ்வாரை நன்றாகவே சேவித்தேன். மதுரகவி ஆழ்வாரை வணங்கி நான் சேவித்தேன்.திருமங்கை ஆழ்வார் திருவழகை சேவித்தேன். கொட்டார நாச்சியாரை கூடவே நான் சேவித்தேன். மேல பட்டாபிராமரை அடி பணிந்து நான் சேவித்தேன். பொய்கை முனி, பூதத்தாழ்வர், பேயாழ்வார் பிரியாமலே சேவித்தேன்.

தீர்த்தங்கரை வாசுதேவர் திருவழகை சேவித்தேன். தந்வந்திரியை கூடவே சேவித்தேன். ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீளாதேவி, பெரிய பிராட்டியாரை பிரியாமல் சேவித்தேன். தசாவதாரரின் திருவழகை சேவித்தேன். திருமங்கை மன்னன் திருவழகை சேவித்தேன். தூப்புல் ஆசாரியர் திருவடியை அடி பணிந்து சேவித்தேன். ஹயக்ரீவர் வந்நிதியை அடி பணிந்து சேவித்தேன். மேட்டழகிய சிங்கரை முன்பாக சேவித்தேன். கண்ணன் திருவடிகளை கண் குளிர சேவித்தேன். வாசுதேவ பெருமாளை வணங்கி சேவித்தேன். ஐந்து குழி மூணுவாசல் அதிசயமும் கண்டேன். புன்னாக விருக்ஷத்தின் கீழ் வேதவ்யாசரையும், வேணபடியும் சேவித்தேன். கோதண்டராமரை கூடவே சேவித்தேன்.

சீதாபிராட்டியார் திருவழகை சேவித்தேன். பரமபத நாதரை பக்தியுடன் நான் சேவித்தேன். அலங்கார ராமரை அழகாக சேவித்தேன்.காட்டழகிய சிங்கரை கண்குளிர சேவித்தேன்.லக்ஷ்மிதேவியை நன்றாக சேவித்தேன். திருமழிசை ஆழ்வாரை சேவித்தேன். கருடாழ்வாரை கிட்ட நின்று சேவித்தேன். ஆழ்வார் அனைவரையும் அடி பணிந்து சேவித்தேன். அஞ்சனாதேவியின் புத்திரரையும் அடி பணிந்து சேவித்தேன்.

சீனிவாசன் சந்நதியில் பெருமாளை நன்றாக சேவித்தேன். பூவராஹ பெருமாள் பெருமையெல்லாம சேவித்தேன். கமலவல்லி தாயாரை கண் குளிர சேவித்தேன். விரஜா நதியை வேணபடி சேவித்தேன். பரம பதவாசலை பக்தியுடன் சேவித்தேன். திருநாரயணபுரம் செல்லைபிள்ளையையும் சேவித்தேன். மடப்பிள்ளை நாச்சியாரை மகிழ்ந்து நான் சேவித்தேன்.
பெரிய பெருமாள் திருவடிகளே சரணம். பொற்குடகம்பத்தை பொருந்தி நான் சேவித்தான். வெங்கல வாசற்படியை வேணும்படி சேவித்தேன்.

கருகூல நாச்சியரை கண்குளிர சேவித்தேன். விமானசேவையை வேணுபடி சேவித்தேன். செங்கமல நாச்சியாரின் திருவழகை சேவித்தேன். துலுக்க பிராட்டியாரை சேரவே சேவித்தேன். சேரவல்லி தாயாரை சேரவே சேவித்தேன். கிளி மண்டபத்தை கிட்ட வந்து சேவித்தேன். சேனை முதலியாரை சேரவே சேவித்தேன்.பரவாசுதேவரை பக்தியுடன் சேவித்தேன். கண்ணன் திருவடியை கண்டு சேவித்தேன்.

ஸ்ரீனிவாசன் திருவுருவத்தை கண்டு நான் சேவித்தேன். அர்ஜுனமண்டபத்தை அழகாகவே சேவித்தேன். சந்தன மண்டபத்தை சதுராகவே சேவித்தேன்.ஜய,விஜயாள் இருபுறமும் சென்று நான் சேவித்தேன். 108-பெருமாள் திருவடிகளே சரணம். பெரிய பெருமாளை பிரியாமல் சேவித்தேன். கஸ்தூரி ரங்கனாரை கண்குளிர சேவித்தேன். அண்டை நாச்சியாரை அழகாக சேவித்தேன்.

பக்கத்து நாச்சியாரைபாங்காக சேவித்தேன். சின்ன பெருமாள் செல்வரை சேவித்தேன். திருவரங்கமாளிகையாரை சென்று நான் சேவித்தேன். பாம்பின்மேல் பள்ளிகொண்டிருக்கும் பரிமள ரங்கரை சேவித்தேன்.கருமுகிலார் அரவவணையின் மேல் கண் வளர கண்டேன். திரு கண்டேன். பொன்மேனி கண்டேன். திருமதிலும் மணி மரமும் கண்டேன். திருவடிமேல் வளரும் சிலம்பையும் கண்டேன். பீதாம்பரமும், பிராட்டி திருமார்பில், மார்கண்ட பூணலும், மதிநிறைந்த ஆபரணமும், கார்முகிலார் வண்ணனை கண்டாயோ நெஞ்சமே, கஸ்தூரி ரெங்கனை கண்டாயோ நெஞ்சமே, அஞ்சனை வண்ணனை அடிபணிந்து கண்டீரோ, பெருமாள் மஹத்துவததையும், வைரகடுக்கனும், பெருமாள் பிராட்டியார் அழகன்னோ! பார் உலகம் ஆண்ட பூங்கிளியை தோற்றுமே பார்வை அழகன்னோ!

பாருலகம் ஆண்டுவந்த ஆண்மை உண்மை அருள் படைத்த பார்வை அன்னோ! தூண்டாத மணிவிளக்கை சுடலெரித்த பார்வை அன்னோ1 இரும்புபோல் ஹ்ருதய நெஞ்சம், இதயம் உருகும் வண்ணம் மரங்கள்போல் வலிய நெஞ்சம், வாழை நார் போல் வசப்படுத்தி, பூதங்கள் என்னும் தழையை கிள்ளி, பொல்லாத குணங்களை வேரறுத்து புண்ணிய குணங்களுக்கு விளக்கேற்றி, மோகனா, மோகினி மாயை விலக்கி, பேரார் தன்னில் பெருகவே கண் வளர்ந்தேன் கோதை முகில் வண்ணன், உகந்து கலந்ததுபோல், உஷாக்காலத்தில் எழுந்திருந்து, ஹரி ஹரி என்னும் அக்னியை கிளப்பி, திருவரங்கம் என்னும் திருவிளக்கேற்றி, ஆராதனம் என்னும் ஆபரணச்செல்லமெடுத்து, சிற்றம் சிறுகாலே என்னும் திறவு கோலாலே, திருக்காப்பு திறந்து,

முத்து, வைரம், வைடூர்யம், வேதம், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மந்திரங்களையும் கூடவே சேர்த்து, சரணாகதியை நினைத்து, மரணாகதியை மறந்து, துரிதம், துரிதம் என்று தூய விகக்கேற்றி, பரம பதம் என்று பல்லாண்டு பாடுவதுமே. உம்பவரும், செம்பனைமேல், மாளிகைமேல், தாளகமாம், செம்பொன் படிகையாம், நாகத்தலையணியாம், படுக்கையில் வாழும் குருமணி தேசத்தில் ஹரியே! ஹரியே கதியாகி, பர்வதங்களை விருக்ஷங்களாக்கி, விருக்ஷத்தின் கீழ் அவதாரமாகி, சப்த சமுத்திரம் ஆறாகி, தசபலி திட்டம் திருமதிலாகி மந்தார புஷ்பத்தில் மாலை தாழ, ஏகசக்கிறாள் பல்லாண்டு பாட

அஷ்டவசுக்கள் வாக்காள் விளக்க, தும்புரு நாரதர் கீதங்கள் இசைக்க, சுக்கில வசுக்கள் சோபனை சொல்ல, சப்த சமுத்திரம் திருப்பள்ளிக்கட்டிலின் கீழ், தச சமுத்திரம் திருப்பால் பரிமாறி, அனந்தன் என்னும் தலைகணை போட்டு, அச்சுதன் என்னும் கால் கோட்டை நாட்டி, ஸ்ரீ கோவிந்தன் என்னும் முத்துகால் நாட்டி ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளாதேவியோடு யோக நித்திரை செய்யும்போது பிரும்மாவும் கமலத்தை காணாமல் ஓடி எங்கும் தேடி தாமரை நானத்தோகையிலே தமையன் கைகொண்ட முதல் ஏது சேவகம், ஏது சேவகம் என்னும் தசரதர் ச்ய்த தபஸினாலே, கௌசலை செய்த பாக்கியத்தினாலே, சீதை மணவாளர் தசரதருக்கே புத்திரராய், மூர்த்தி நால்வராம், திருவயோத்தியில் அவதாரம் செய்து எழுந்தருளினார்.

கைகேயி தந்த வரத்தாலே கானகத்திற்கு சென்று இலங்கையை அழித்து, இராவணனை
ஸம் ஹரித்து விபீஷணருக்கு லங்கா நகர பட்டாபிஷேகம் செய்து வைத்து, சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு எழுந்தருளி, ஆறில் ஒன்று கடமை வாங்கி, அனைவரையும் த்ருப்தி செய்து, இப்படி கற்ப காலத்தின் நடுவே அரசாண்டிருக்கும்போது, விபீஷணருக்கு திவ்ய விமானத்தை தந்தருளினாய்.

விபீஷணனும்-தான் இந்த பாக்கியம் பெற்றோம் என்று, அடிமேல் பெற்று, முடிமேல் கை கொண்டு இலங்கை நோக்கி எடுக்கபோனதளவு, எடுக்கபோகாதளவு, காவேரியின் நடுவில் சந்திர புஷ்கரணி தென்கரை மேல் புன்னாக விருக்ஷத்தின் கீழே எழுந்தருளினார். விபீஷணர் பாதம் விளக்கி, பரிசுத்தம் பண்ணி அந்தி தொழுது அனுஷ்டானம் பண்ணி பாதிரி பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, பாரிஜாத பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, மகிழம்பூவில் மூவாயிரம் கொண்டுவந்து, திருத்துழாய் தளத்தை ஏராளம் கொண்டுவந்து, அன்று மலர்ந்த செந்தாமரை புஷ்பத்தில் இரண்டாயிரம் கொண்டுவந்து, கஸ்தூரி அரணியின் கணக்கில்லாமல் கொண்டுவந்து, இரு திருவடியில் சமர்ப்பிவித்து,

இக்ஷ்வாகு வம்சத்து ராஜாவானவர் தம்மை தாமே எழுந்தருளிசெய்துவந்த பெருமாளே, மாதவரும் நீரே, மதுசூதனரும் நீரே, ஸ்ரீதரரும் நீரே, செந்தாமரை கண்ணனும் நீரே, ஒரு சப்த சாகரரே, சதுர்புஜரே, மங்கை மணவாளரே, மதுரை மன்னவரே, அம்புவிகரசரே, புண்டரீகாக்ஷரே இப்படி அரண்டும், புரண்டும் பரிதாபம் பண்ணினார். அப்போது பெருமாள், யாம் அந்த ராக்ஷஸ பூமிக்கு வரவல்லோமென்றார். ஸ்ரீராமருள்ளமட்டும் இங்கேயே கண் என்றார்.

ஒருபுறம் வலிய நாடு, இருபுறம் காவேரி, இருபுறம் ரெங்கவிலாஸம், இருபுறம் வலிய நாடு, உறையூர் வல்லி தாயார்,, ஒரு புறம் நானிங்கு மானிடரை ஈடேற்ற வந்தேன், வருஷத்திற்கு ஒரு முறை வந்து நீ போவாயென்று, வருஷத்திற்கு ஒரு முறை நீ வந்து ஆராதனம் செய்வாய் என்றும், திருவடியும், மலரும் விடையும் தந்து அருளி அனுப்பினார். விபீஷணர் தாம் மோக்ஷம் பெற்றதால் இந்த பாக்கியம் பெற்றோமென்று , சிரசால் வகுத்து, தெளிநீர்சார்த்தி, முன்கால் பணிகள் சார்த்தி, முழங்கால் பணிகள் சார்த்தி, திருவிரல் ஆழி சார்த்தி, திருக்கணைக்கால் தண்டை சார்த்தி, ஒரு முத்தோடு ஒரு முத்து ஒரு கோடி விலை பெற்ற திரு முத்து ஹாரத்தை திருமார்பில் திகழவே சார்த்தி,

முத்து, முத்தோடு மாணிக்கம் அறுபதினாயிரம் கோடி விலை பெற்ற திரு நீலநாயக பதக்கத்தை திருமார்பில் திகழவே சார்த்தி, வாகனம் நல்ல வளையள் சார்த்தி, மாணிக்க தோடும் சார்த்தி, கண்டத்தில் காரையும் சார்த்தி, கட்டி முத்து மாலையும் சார்த்தி, ஏழுலகம் ஆண்டவருக்கு யக்ஞோபவீதம் சார்த்தி, பாருலகம் ஆண்டவருக்கு பாண்டியன் கொண்டையும் சார்த்தி ஸர்வேஸ்வரனுக்கு தகுட்டு பீதாம்பரம் சார்த்தி, அழகிய மணவாளனுக்கு அரைநூண்மாலையும் சார்த்தி, அரைவடகிங்கிணியும் சார்த்தி, கண்ணன் உகந்தமாலை, சடகோபன் அளித்த மாலை, சூடிகொடுத்த மாலை, திருமார்பில் திகழவே சார்த்தி,

பொன்னு திருவடியில் புஷ்பம் சமர்ப்பித்து, தங்க திருவடியில் தண்டையும், சியம்பும் சமர்ப்பித்து, பூலோக வாசிக்கு பொங்கல் தளிகை சமர்ப்பிவித்து,பாரளர்ந்த நாதனுக்கு பால் மாங்காய் சமர்ப்பிவித்து, மலைபோல் வளர்ந்தால்போல் வடகடலும், தெங்கடலும் வளர்ந்தால்போல் முகத்தில் கருண்ட கேசமும், முகத்தில் உருண்டைமுடியும், அண்டம் கயிறாக, ஆற்கடல் பாம்பாக, யக்ஞசித்தன் திருமதிலாகி, எழில்ரங்கத்தம்மான், ஹனுமன் படையும், கருடக்கொடையும், பரிமளமான உடையவரும், வடதிருவாசல் தேசிகரும், கோமகளார் எடுத்தக்கொற்றக்குடையும், திருமகளார் எடுத்த திருவந்திகாப்பழகும் இப்பேற்கொண்டு ஸ்ரீரெங்காவதாரத்தை கற்றவரும் கேட்டவரும், கற்றுகொடுத்தவருக்கும், காதுகுளிர கேட்டவருக்கும், சொல்லு, சொல்லு என்று செவிகுளிர கேட்டவருக்கும்,

இன்னும் சொல்லு என்று இருந்திருந்து கேட்டவருக்கும், பின்னும் சொல்லு என்று பிரியமாய் கேட்டவருக்கும், எட்டாத பரமபதம் இமைபொழுதில் கிடைக்கும், தட்டாத பரமபதம் தானே கிடைத்துவிடும், மன்னு திருவோண துவாதசியில் சொல்லி துதிப்பார், சுத்தராகி, பக்தராகி உள்ளும் , புறமும் ஜோதி உடனாய் சேர்ந்திருப்பார், என் எம்பெருமாள் திருவடிகளே சரணம்.

--------------------------------------
மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் யார் எழுதி வைத்தார் என்று தெரியாது. ஆனால் ஸ்ரீரெங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் அழகு, ஸ்ரீரெங்கத்தில் அமைந்திருக்கும் சந்நதிகள், பகவானின் சிறப்பு, ஆழ்வார்களின் பெருமை இவை அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. படிப்பவர்கள் அதோடு ஸ்ரீரெங்க உலா வருவதுபோல் காட்சியையும் காணலாம்.

மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் என்னுடைய மனைவிக்கு அவள் சிநேகிதி-குண்டு கண்ணம்மா என்பவள் சொல்ல கேட்டு எழுதிகொண்ட குறிப்பு. இதை படிப்பவர்களுக்கு நிச்சியம் மோட்சம் கிட்டும் என்பது திண்ணம்.

-------------------------------------------------

R.Jagannathan.






தேரோடும் வீதி

தேரோடும் வீதி

சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். 10-நாள் அரங்கனுக்கு பவித்ரோத்ஸவம் உத்ஸவம். ஆரம்ப நாளே பெருமாளுடைய புறப்பாடை சேவிக்க ஆவலுடன் திருமாமணி மண்டப வாயிலில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று சரியாக இரவு 7- மணிக்கு புறப்பாடு.

நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ ஸ்ரீமாந்தாங்கிகளை ( பெருமாளை ஏலபண்ணுபவர்கள் ) அழைத்துவரும் அழகே தனி. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தானது. நாதஸ்வரத்துடன் அவர்கள் மண்டபத்தின் வாயிலில் வரிசையாக நிற்பார்கள்.

அவர்கள் உடை அழகே தனி. எல்லொரும் ஒரே மாதி பஞ்சககச்சம் அணிந்து தலையில் ஆரஞ்சு சிவப்பு தலைப்பாகையுடன் பணிவன்புடன் பெருமாளின் உத்தரவுக்காக காத்திருப்பார்கள். உத்தரவு கிடைத்தவுடன் உள்ளே சென்று பெருமாளை ஏலப்பண்ணிகொண்டு கிளம்புவார்கள். பெருமாள் ராஜ நடையுடன் நுழை வாயிலை தாண்டும்போது-சாத்தாதர் கட்டியம் கூறுவார். சிம்மம் போல் நடந்து வந்து சற்று வினாடி கருடனை பார்த்துவிட்டு கம்பீரமாக திரும்பி மேற்கு வாயிலின் அருகே நிற்பார்.

அவர் வெளியே வரும் சமயம் ஜீயரும் மற்றவர்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு தீர்த்தம், சடாரி பெற்றுக்கொண்டு விடை பெறுவார்கள். பெருமாள் படியைவிட்டு இரங்கி சற்று நேரம் எதிரே உள்ள கண்ணாடி அரை முன் நின்று விட்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை நோக்கி புறப்படுவார்.

ஒரே ஓட்டம் தான்-பெருமாள் 10-நிமிடத்தில் துவஜஸ்தம்பத்தை தாண்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை அடைவார். அங்கே திருவந்திகாப்பு கண்டருளி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்காக காட்சி கொடுப்பார். இது 10- நாளிலும் நடைபெறும்.

பவித்ரோத்ஸவம் எதற்காக நடைபெறுகிறது?

பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம், ஆராதனமும், அமுதுபடியும் ஆகம முறைப்படி நடைபெறவேண்டும். சுழல் முறையில் பட்டர்கள் இதை மேற்கொள்வார்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் ஏற்படலாம். அதே போல அலங்காரத்திலும், ஆடைகளிலும் குறைபாடுகள் ஏற்படலாம். அதற்கு பரிகாரம் தான் இந்த பவித்ரோத்ஸவம்.

பவித்ரமான புணூலை அணிவித்து ஹோமம் முதலான விதிகளை இந்த 10-நாட்களிலும் அனுசந்தித்து வெகு ஜாக்கிரதையாக பவித்ரோத்ஸவ மண்டபத்தில் பெருமாளை தினம் எழுந்தருளப்பண்ணி பக்தர்களுக்கு அநுக்ரஹம் செய்ய இந்த விழா. இது முடிந்தவுடன் பவித்ரங்களை கலைந்துவிட்டு பழைய படி தினம் பூஜாகாலம் தொடரும்.

இந்த 10-நாளில் ஒரு நாள் நான் தேரோடும் சித்திரை தெருவில் வீதி ப்ரதக்ஷிணம் செய்ய சென்றேன். முக்கியமாக பலவருஷங்களுக்கு பிறகு இந்த வீதிகள் எப்படி மாறி இருக்கின்றன, பழைய சம்பிரதாயம் தொடருகிறதா என்று அறிய ஆவல்.

எனக்கு நான் சற்றும் எதிபாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பழைய வீதிகள் முழுவதும் மாறிவிட்டது. ஸ்ரீரங்கம் தன் புராதண சரித்திரத்தை இழந்துகொண்டிருப்பது கண்கூடாக காண முடிகிறது.

அந்தகாலத்தில் வீடுகள் வாசலில் திண்ணையுடன் அழகாக இருக்கும். முக்கியமாக யாத்ரீகர்கள் ஒரு நாள் அல்லது 2- நாட்கள் தங்க இந்த திண்ணைகள் பயன்பட்டு வந்தன. வெய்யல் காலங்களில் வீட்டு சொந்தக்காரர்கள் வெளியில் படுத்து உறங்கவும், பயணிகள் சற்று இளைப்பாரவும் பயன்பட்டுவந்தன.

அநேகமாக இந்த வீடுகள் 10-15 அடி அகலம், 100 அடி நீளமாக இருந்தன. ஒரே ஒரு அறை தான் வாசலை நோக்கி இருக்கும். புதிதாக கல்யாணமான சிறுசுகளைத்தான் இங்கு படுக்க சொல்வார்கள். மற்றபடி எல்லோரும் சேர்ந்தே வாழ்வார்கள். ( JOINT FAMILY ). துன்பத்திலும் இன்பத்திலும் சம பங்கு. கல்யாணம் என்று வந்தால் கோலாகலம் தான். அதுமாதிரி வீதியில் பெருமாள் ஏளினால் கல்யாண களைதான். விதம் விதமான கோலங்கள்-போட்டி போட்டுக்கொண்டு இளம் பெண்கள் அழகாக பாவாடை தாவனியுடன் கோலம் போடுவார்கள்.

வருஷம் 300 நாளும் பண்டிகை நாள் தான் ஸ்ரீரங்கத்தில்-ரங்கன் வீதியில் வலம் வரும் காட்சியே தனி காட்சி தான்.யானையும், குதிரையும் முன்னே செல்ல நாதஸ்வரம் வாசிக்க நம் பெருமாள் தேரோடும் சித்திரை, உத்திர வீதிகளில் பவனி வரும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். பெருமாளுக்கு இன்றும் எண்ணை விளக்கு தான்-கேஸ் லைட் கிடையாது.

நடந்து கொண்டே வலம் வரும்போது மேற்படி காட்சிகள் என் மனதில் அலையோடின. ஆனால் இன்று வீதிகள் முழுக்க மாறிவிட்டது. பழைய வீடுகளை இடித்து புதிதாக வீடுகள். திண்ணை எல்லாம் போய்விட்டது. அதற்கு பதிலாக கேட் போட்ட காம்பவுண்ட்-வாகனங்கள் நிறுத்த. பெருமாள் வரும் சமயம் அவசர அவசரமாக ஒரு சிறு கோலம். இளம் பெண்களை காணவில்லை.சூரிதாரும்,சால்வார் கமீஸும் தான்.

அந்த நாளில் வீசிய தெய்வீக மணம் குறைந்துவிட்டது. இருந்தாலும் பலர் பழைய சம்பிரதாயங்களை கட்டி காக்க போராடுகிறார்கள். அரங்கனுக்கு நடக்கும் திருவிழா தொடர்ந்து பழைய பாணியிலேயே நடந்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். புதுமை வேண்டும் . ஆனால் அது பழமையின் மேன்மையை தழுவி அமையவேண்டும்.

10-நாள் உத்ஸவத்தை கண்குளிர கண்டு அரங்கனோடு இணைந்துவிட்டு பிரிய மனமில்லாமல் எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்கின்றது. மீண்டும் அரங்கனை காண எப்போது? தெரியவில்லை.

-------------------------------------

Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 10

அத்தகிரியும், அருளாளனும்- 10


1. நாவாயில் உண்டே; ' நமோ நாரணா ' என்று
ஓவா துரைக்கும் உடையுண்டே; மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம் ?

பகவானை துதிப்பதற்கான நாக்கு நம் வாயிலேயே இருக்கிறது. களைப்பே இல்லாமல் ஆயிரம் தடவை ' நமோ நாராயணா ' என்று சொல்ல. அவன் திருவடியை அடைய- ப்ரப்த்தி, பக்தி என்று பல எளிய வழிகள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் விட்டு விட்டு சிற்றின்பம் மற்றும் பல தீய வழிகளில் விழ சிலருக்கு எப்படித்தான் ஏற்படுகின்றதோ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வாராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில் ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம். நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

2. கான எண்கும் குரங்கும் முகவும்
படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன்; நமரும் உரைமின்
நமோ நாராயணமே //

காட்டு கரடிகளையும், குரங்குகளையும் படைத்துணையாக்கி ராவணனையும், அரக்கர்களையும் வென்றான் என் திருமால். பிறரையேசொல்லிக்கொண்டிருந்த நானும் அவன் பெயரை சொன்னேன். அந்த நாமம் எனக்கு தேன் போலும், பாலும் அமுதும் போல் இருக்கிறது. ஆகையால் நம்மவர்களே வாருங்கள் அவன் நாமத்தை சொல்லுங்கள்.

பெரிய திருமொழி

2. ஸ த்வம் ஸ ஏவ ரபஸோ பவதௌபவாஹ்ய:
சக்ரம் ததேவ சித தார மஹம் ச பால்ய:
ஸாதரணே த்வயி கரீச ஸமஸ்த ஜந்தோ:
மாதங்க மாநுஷ பிதா ந விசேஷ ஹேது: //

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய். உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய். அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய். ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை. ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே. யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் //

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3.கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரயணமே//

நமக்கு நாரணன் என்ற திருநாமமே திருமந்திரம். ஓம் என்ற பிரணவமும் வேண்டாம் நம என்ற சப்தமும் வேண்டாம், நாராயணாய என்ற பெயரும் வேண்டாம் . வெறும் நாரணன் என்றாலே போதும்- சத்தியமாக சொல்லுகிறேன்- அவன் ஓடி வருவான் நம்மை ரக்ஷிப்பான் என்கிறார் ஆழ்வார். வேதத்தை காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது கேசவனைக்காட்டிலும் வேறு தெய்வம் கிடையாது என்று வியாசர் கூறியதை போல ஆழ்வாரும் திண்ணமாக கூறுகிறார்.

3.இதி விஹிதமுதாரம் வேங்கடேசேந பக்த்யா
ச்ருதி ஸுபகமிதம் ய: ஸ்தோத்ர மங்கீகரோதி
கரிசிகரி விடங்க ஸ்த்தாயிந: கல்ப வ்ருக்ஷாத்
பவதி பலமசேஷம் தஸ்ய ஹஸ்தாபசேயம் //

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய் செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

அடியேனுக்கு வெகு நாளாக ஒரு ஆசை. நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பகவானை எப்படி அநுபவித்துள்ளார்கள் என்று நானும் அநுபவித்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வேகா சேது என்ற அடியேனுடைய பிளாக்கில்- ஓ! ரங்கசாயி என்ற பிரிவில் எழுதி வந்து இன்று காஞ்சி வரதனின் கருட சேவையோடு நிறைவு பெறுகிறது.

அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் ; அரங்கம்- வேங்கடமலை - அத்தகிரி - வைணவர்களின் ஸ்வர்க்கம்- அமுதமான தித்திக்கும் நாதமாம் நாரணனின் நாமம். இவைகளை 10-10 பாசுரங்களாக அர்த்தத்தோடு விளக்கி வந்தோம் -ஆழ்வார்களின், ஆச்சார்யர்களின் பாசுரம் மூலமாக.

அதே மாதிரி அரங்கன் - திருவிழா, வேங்கடவன் ப்ரஹ்மோத்ஸவம், அருளாளனின் ப்ரஹ்மோத்ஸவம் இவைகளை பவர் பாயிண்ட் ஸ்லைட் ஷேர் மூலமாக அன்பர்களுக்கு அளித்துள்ளோம்- நூற்றுக்கணக்கான அன்பர்கள் இவைகளை கண்டு களித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த வணக்கமும் மரியாதையும்.

எங்கெல்லாம் அலைந்து சம்சாரகடலில் சுற்றிக்கொண்டிருந்த அடியேனை அரங்கன் 1994 ல் திருவரங்கத்திற்கு அழைத்தான். தினமும் அவனை காண வசதி செய்து கொடுத்தான்.அவன் கிருபையால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி பல கட்டுரைகளை எழுதவைத்தான்.பிளாக் மூலமாக பல அரிய ஸ்தோத்திரங்களை போடவைத்தான்.

அவனின் அருளை வார்த்தைகளால் சொல்லவோ, எழுதவோ முடியாது.இதை படிக்கும் அன்பர்களுக்கு அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் அருள் பரிபூர்ணமாக கிடைக்க அடியேன்
ப்ரார்த்திக்கிறேன்.

தாஸன் ஜெகன்னாதன்.

அத்தகிரியும், அருளாளனும்- 9

அத்தகிரியும், அருளாளனும்- 9

1. பெற்றார் பெற்று ஒழிந்தார்; பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய், வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதி கோல் விடுத்தானை, எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழைநெஞ்சே //

பெற்ற தாய் தந்தையர் என்னை விட்டு போய்விட்டார்கள். இந்நிலையில் அடியவனுக்கு நீ தாயாக, தந்தையாக நின்று உய்வித்தாய். அதோடு நில்லாமல் எனக்கு உயிராகவும் நிற்கின்றாய். எல்லோர் நோயையும் போக்குபவன். அப்படிப்பட்ட எம்பெருமானை நான் எப்படி மறக்க முடியும். மூட நெஞ்சமே இதை சொல்லுவாயாக.

பெரிய திருமொழி.

1. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு //

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. காசும் கரையுடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால், அங்கு அவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணந்தம் அன்னை நரகம் புகாள் //

நாலிரண்டு காசுக்கும், கட்டு நெற்கதிருக்கும், கறையுடைய ஆடைக்கும் ஆசைப்பட்டு கீழ் தேவதைகளின் பெயரிட்டு வீணே கழிக்கிறீர்கள். அடியார்களின் துன்பத்தைப்போக்கும் மேலான தெய்வமாம் எங்கள் நாரணன். அவன் பெயரிட்டு மேலான செல்வமாம் வைகுண்டத்துக்கு செல்ல வழி வகுத்துக்கொள்ளுங்கள். அவன் நாமம் இட்ட பிள்ளையின் தாய் ஒரு போதும் நரகத்திற்கு போகமாட்டாள்.

பெரியாழ்வார் திருமொழி

2. வம்மின் புலவீர் அருளாளபெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணைக் கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே //

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது- அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.

ஹஸ்தகிரி மஹாத்மியம். //

3. ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆளவல்லையேல் வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!
ஞானம் ஆகி, ஞாயிறு ஆகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தைபாதம் எண்ணியே //

என் நெஞ்சமே! ஆத்மாவுக்கு கெடுதல் கொடுக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யாம், அஞ்ஞானம், அசூயை ஆகிய எட்டையும் போக்கி , சம்சார துக்கமெல்லாம் நீங்கி பரம பதம் அடைய பகவானின் திருவடியை பற்று. அவனே ஆத்ம சுகத்தை அளிப்பவன்.சூரியனை போல அறிவு சுடரை ஏற்றுபவன்.

திருச்சந்தவிருத்தம்.

3. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகமத: பங்க விசேஷ நீலமங்கம் //

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும், மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நுஇறம் உள்ளதான உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்.

R.Jagannathan

அத்தகிரியும், அருளாளனும்-8

அத்தகிரியும், அருளாளனும்-8

1. நாவாயில் உண்டே ' நமோ நாராயணா ' என்று
ஓவாதுரைக்கும் உரையுண்டே- மூவாற
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே- என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் நிறம்?

எம்பெருமானை துதிக்க நம் வாய் இருக்க வேறு எங்கும் தேடி போகவேண்டாம். களைப்பிள்ளாமல் திரும்ப் திரும்ப சொல்ல - ' நமோ நாராயணா ' என்ற நாமம் இருக்கே! அந்த திருமந்திரம் நம்மை திருமப் பிறவாமல் வைகுண்டத்திற்கு இட்டு செல்லும். மற்றும் பக்தி, ப்ரப்த்தி போன்ற வழிகள் இருக்கு-இவை எல்லாம் இருக்க இந்த பாழும் உடல் தீய வழிகளிளேயே சென்று விழுகிறதே - இது என்ன விந்தை?
முதல் திருவந்தாதி.

1. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //
திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐயர் மலர்மகள் நின் ஆகத்தாள்- செய்ய
மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான், நின் ஆகத்து இறை //

மேகம் போல் நிறமும், வலம்புரி சங்கும், சக்கரமும் ஏந்தி நிற்கும் பெருமானே! மலர் மகள் நின் மார்பில் தவழ்கிறாள். இவையாவும் உன் அழகை காட்டுபவை.
வேதங்கள் படைத்த நான்முகன் உன் நாபியில் பிறந்தான். திரிபுரங்களையும் எறித்த சிவனோ ஒரு மூலையில் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும், பிராட்டிக்கும் உன்னிடம் இடம் கொடுத்த உன் சீலகுணத்தை என்னவென்று புகழ்வது.

பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி

2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டுவண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்கார ம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது. அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து, இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை; உலகு அளந்த
மாணிக்கமே! என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே1 அடியேன் அடி ஆவி அடைக்கலமே //

உலகையெல்லாம் அளந்த என் மாணிக்கமே, மரகதவண்ணனே! உவமையில்லா மாற்றுயர்ந்த பொன்போலும் மதிப்புடையவனே! சூரியனிருளில்-குரங்கு கையில் அகப்பட்ட மாணிக்கம் போல-இந்த மாலை பொழுதில் உனக்கு அடியவளான நான் உன்னை பிறிந்து வாடுகிறேன். என் உயிர் உனக்கு அடைக்கலமாகிவிட்டது.

திருவிருத்தம்.

3. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேறவழி தந்தார் வந்தார் தாமே //

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார். அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம் ..

R.Jagannathan.

அத்தகிரியும், அருளாளனும்-7

அத்தகிரியும், அருளாளனும்-7

1. நாவாயில் உண்டே; 'நமோ நாராயணா ' என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே; - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்?

எம்பெருமானை துதிப்பதற்கு நாக்கு எங்கும் தேடாமல் நம் வாயிலேயே இருக்கிறது. திருப்பி திருப்பி களைப்பில்லாமல் சொல்ல நமோ நாராயணா என்ற திருமந்திரம் நம்மை பரம பதத்திற்கு இட்டு செல்ல பக்தி, ப்ரபத்தி போன்ற எளிய வழிகள் இருக்கின்றன. இவையெல்லாம் விட்டு விட்டு சிலருக்கு தீய வழிகளில் செல்ல எப்படி நாட்டம் ஏற்படுகிறதோ ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பெருமையுடை அத்தகிரி பெருமாள் வந்தார்
பேராது அருள்பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் பெரியோர் வந்தார்

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார். வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார். பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கண்டு கொண்டு என் கண்- இணை ஆரக்களித்து
பண்டைவினையாய்டின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்-மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே //

வைகுண்டத்தில் காணும் பெருமாளை வரதனாய் காண பாக்கியம் பெற்றேன் அவரை பார்த்து மகிழும் பேறு பெற்றேன். அதனால் என் வினைகள்-முந்தியன-நல்லவை, தீயவை அனைத்தையும் போக்கிக்கொண்டேன். இனி அவனை அடைய தடுப்பவர் யாரும் இல்லை. இது என்னோடு இல்லாமல் திருமால் அடியவர்களுக்கு உபகாரம் செய்ய தித்திக்கும் அமுதமாக திருவாய் மொழியை என் பெருமாள் என் மூலமாக பாட செய்தான். என்னே என் பேறு.


2.. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

3. கரிய மேனி வெளியநீறு இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன், விண்னோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏந்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ- எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே ?

அருளாளன் செம்பொன் நிறத்தவன்- கரிய திருமேனி. அந்த திருமேனியில் கருவிழியின் அழகுக்கு மேலே அஞ்சனப்பொட்டு. அழகிய விசாலமான கண்கள். நித்யசூரிகளுக்கு தலைவன். அந்த தலைவனை இசைமாலையாம் திருவாய் மொழி என்ற மாலைகளால் துதிக்கப்பெற்றேன். இதைவிட பாக்கிய சாலி யார் இருப்பார். உனக்கு அடிமை செய்தே இனி காலமெல்லாம் கழிப்பேன்.

திருவாய்மொழி.

3. அத்தகிரி அருளாள பெருமாள் வந்தார்
ஆனை, பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும் தெய்வ பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் பெருமாள் வந்தார்
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில் கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார். தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார். யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர், பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

R.Jagannathan.

Tuesday, April 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-6

அத்தகிரியும் அருளாளனும்-6

1. ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னன்லும் அமுதும் ஒத்தே //

ஊன் என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே-நீ நல்லவன்-உன்னால் நான் மிக்க நன்மையை பெற்றேன்- நானும் எம்பெருமானும் என் உள்ளத்தே ஒன்றாக கலந்துவிட்டோம். அந்த கலவையால் எல்லா விதமான சுவையும் உண்டாகிவிட்டது. தேனும், பாலும், நய்யும், கருப்பஞ்சாரும் அமுதும் கலந்தாற்ப்போல
திருவாய்மொழி

1. எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்
சத்தியவிரதம் செல்வாய் என்றதோர் உரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமலரில் எடுப்பான் தன்னை
உத்தரவேதி செய்யென்று உரையணங்கு இறை உரைத்தான் //

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல, ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. எம்மாவீட்டுத் திறமும் செப்பம்; நின்
செம்மா பாத-பற்புத் தலைசேர்த்து; ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே//
கஜேந்திரனின் துன்பத்ததை நீக்கிய பிரானே! நான் விரும்புவது எல்லாம் அகவாய் சிவந்து, புறவாய் கறுத்து, பெரிதாய் மணத்து மலர்ந்த நின் திருவடித்தாமரைகளை என் தலையின் மீது விரைவிலே சேர்க்கவேண்டும் என்பதே!. எப்படி கொக்கு வாயும், படுகண்ணியும் போல உன் திருவடிகளும் என் ர்தலையும் சேரவேண்டும் என்பதே அம்மா அடியேன் விரும்புவது.

திருவாய்மொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற , கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த, குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. கரிய மேனிமிசை வெளியநீறு சிறிதே இடும்
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அறியது உண்டோ- எனக்கு ஒன்று தொட்டும் இனி என்றுமே ?

எம்பெருமானுக்கு அழகோ அவன் கறுத்த திருமேனி. அந்த மேனியில் அழ்கு செய்வது விழிகளில் தீட்டப்பெற்ற அஞ்சனம். அந்த அழகனே நம் நாயகன்.அவனுக்கு நாம் சாத்தும் மாலையோ இசை மாலை. அந்த இசைமாலையில் அவன் நாம கீர்த்தனைகள் தேனினும் இனிது. இப்படி ஏந்தி அனுபவித்த நான் இனி இதைவிட சிறப்பானது ஒன்றையும் தேடி அலையமாட்டேன். கிடைப்பதற்கு அரிதான பொருள் கிடைத்தது- இனி என் காலமெல்லாம் அரிய்ழது ஒன்றும் இல்லை.
திருவாய்மொழி.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் //

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால் நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

ஹஸ்தகிரி மகாத்மியம்.

R.Jagannathan.

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

1. கனையார் கடலும் கருவினையும் காயாவும்
அனையானை- அன்பினால் ஆர்வத்தால் என்னும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய்நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல; கண்டாமே //

பெரிய திருமொழி

ஒலிமிக்க கடலும், கருவினைப் பூவும் காயாம்பூவும் போல் நிறமுள்ளவன் எம்பெருமான். அவனிடத்தே அன்பும் ஆற்றாமையும் மிகுந்து, தடாகத்தில் பூத்த மலர்களை பறித்து அவன் பாதங்களில் சம்ர்ப்பிவித்து அவனுக்கு அடியார்களாகாவிட்டால் நாம் எடுத்த பிறவி வீணே. வாழ்த்தவாயும், நினைக்க மட நெஞ்சம், தாழ்த்த சென்னியும் தந்தவன் இறைவன், இவையெல்லாம் அவனை அநுபவிக்கவே வாய்த்தவை.

1. தரணியில் மன்னி அயனார் தனித்தவம் காத்தபிரான்
கருணையெனும் கடலாடித் திருவணையைக் கண்டதற்பின்
திரணர கெண்ணிய சித்ரகுபதன் தெரிந்துவைத்த
சுருணையிலேறிய சூழ்வினைமுற்றும் துறந்தனமே //

பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.

ஹஸ்தகிரி மகாத்மியம்.


2.ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே //

என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே- நீ நல்லவன் தான். உன் துணை கொண்டு நான் மிக பெரிய நன்மை அடைந்தேன். எப்பெருமான் மதுசூதனனும் நானும் என் நெஞ்சிலே ஒன்றாக கலந்துவிட்டோம். இந்த கலவையால் எல்லா சுவைகளும்- தேனும் பாலும், கருப்பஞ்சாரும் அமுதும் ஒன்றாக சேர்ந்தாற்ப்போல்.
திருவாய்மொழி

2. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராஜன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாக கொள்ளாதாரன்பு //

பேரளுளார வாழ்க, பூமிக்கு அலங்காரமான ஹஸ்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீசூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

3. ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாய், தந்தையாய், அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே

பகவானே உனக்கு இணையானவர் யாரும் இல்லை, உன்னைவிட உயர்ந்தவரும் யாரும் இல்லை. இப்படி ஆச்சர்யமான குணங்களையுடையவனே!- அந்த அந்த பொருட்களோடு ஒதத நிலைகளையுடையவனே, என்னுடைய உயிராகி, என்னைப்பெர்ற தாய் தந்தையுமாகி நான் அறியாதவையெல்லாம் அறிய செய்தாய். நீ தாயாய், தந்தையாய், ஆச்சார்யனாய் செய்த நன்மைகளை அடியேன் அறியேனே
திருவாய்மொழி

3. வம்மின் புலவீர் அருளாள பெருமான் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளை பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணை கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே//

புலவர்களை வாருங்கள், அருளாள பெருமான் என்றும், அருளாழி அம்மான் என்றும், பிராட்டியை தேவியாக கொண்டது மன்றி, என் மனதில் வசிக்கும் பேரளாளன் என்று ஆச்சர்யமாக பெருகும் கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?

ஹஸ்தகிரி மஹாத்மியம்

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-4

அத்தகிரியும் அருளாளனும்-4

1. அறிவென்னும் தாள்கொளுவி, ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி- மறை என்னும்
நங்கோதி, நங்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் அடி //

வேதங்களை இடைவிடாது ஓதி அவற்றின் பொருள்களையும் நங்குணர்ந்து, ஐம்புலங்களையும் தம்வழியே செல்லவிடாதபடி திண்ணிய கடவையடைத்து, ஞானமென்னும் தாழ்பாளையிட்டு, நன்றாக த்யானம் செய்பவர்களே- பச்சை நிறத்தையுடைய கடல்வண்ணனான எம்பெருமானை நாள்தோறும் கண்டு அநுபவிக்க பெறுவார்கள்

மூன்றாம் திருவந்தாதி.

1. உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெணெய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அறுக்கும் அணி அத்தஸ்கிரியே //

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால் அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்; மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

ஸ்வாமி தேசிகன்- ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. பொங்கு புணரிக் கடல்சூழ் ஆடை
நிலமாமகள், மலர்மா
மங்கை, பிரமன், சிவன் இந் திரன்வா
நவர்நா யகர் ஆய
எங்கள் அடிகள், இமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரைமின்
நமோ நா ராயணமே //

அலைகடலை ஆடையாகவுடைய பூமி பிராட்டிக்கும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டிக்கும், பிரமன், சிவன், இந்திரன் மற்றும் உள்ள தேவர்களுக்கும் தலைவன் எங்கள் நாயகன், நித்ய சூரிகளுக்கு அதிபதி. குறைவற்றவர்களுக்கும், குறைவுடையவர்கள் எல்லோருக்கும் வேற்றுமை இன்றி தலைவனாக இருப்பவன்- நாராயணன்.
அவன் நாமத்தை இருதரம் சொன்னாலே போதும்-நம் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போகும்-வாருங்கள் அவன் நாமத்தை-நமோ நாராயணா என்ற நாமத்தை சொல்லுவோம்.

பெரிய திருமொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளாற்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

தங்கத்தில் இரத்தினத்தை இழைத்து, அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப்பெற்ற-நான்கு ஜாதியினரும் நிறைந்த, தேவர்களும் வியங்கும் அமைப்பயுடைய, இயற்கை அழகோடு கூடிய-ஒருபோதும் அழியாமல் நிலைபெற்ற அழகினால், பூமிக்கு ஆபரணம் என்னும்படி-மதிள்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தை கண்டு பிரம்மனே மகிழ்ச்சி அடைந்தான்
ஸ்ரீ ஹஸ்தகிரி மஹாத்ம்யம்-பிரம்ம புராணம்

3. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன்-மெத்தனவே
நின்றான், இருந்தான், கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து //

மூன்றாம் திருவந்தாதி
அவனே எனக்கு கதி என்று ஒளிமயமான விளக்கை ஏற்றிவைத்து அவனை தேடிப்பிடித்து என் வசமாக்கி கொண்டேன். எளியவருக்கும் எளியனான எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து நின்று கொண்டான். சற்று நேரம் கழித்து மெதுவாக அமர்ந்து கொண்டான். வேறு வழி இல்லை என்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டான். என்ன சுகம் எனக்கு-இது தெரியாமல் நான் இவனை நேற்றுவரை தடுத்து நிறுத்தியிருந்தேனே! என்று வருந்துகிறார் ஆழ்வார்-அவனுக்கே என்னிடம் எவ்வளவு கருணை என்று வியக்கிறார்.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் தான் //

ப்ரம்மாவினால் விரும்பி சேய்யப்பட்ட அசுவமேதமென்னும் பெரிய யாகம் அழிந்துபோகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகி கோபித்துக்கொண்டு பெருகிவர உலகுக்கே தந்தையான-பாம்பணையில் பள்ளிகொண்ட எம்பெருமான் ப்ரஹ்மாவுக்கு அருள் செய்து தானை ஆற்றின் குறுக்கே அணையாகி ஸரஸ்வதியின் சீற்றத்தை தடுத்து யாகத்தை காப்பாற்றினான்-என்னே வரதனின் கருணை.
ஹஸ்தகிரி மகாத்மியம்


R.Jagannathan.

Saturday, March 26, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 3

அத்தகிரியும், அருளாளனும்- 3

1.ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;
பேணுங்கால் பேணும் உரு ஆகும்; அல்லன் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே //
திருவாய்மொழி
எம்பெருமான் எப்படி இருப்பான்: ஆணா, பெண்ணா, அல்லது அலியா-இவர்கள் யாரும் இல்லை.
அவன் வடிவம் யாராலும் சொல்ல முடியாது. அவனை காண்பதற்கு இயலாது. உள்ளவன் அல்லன், இல்லாதவனும் அல்லன்-ஆனால் பக்தர்கள் விரும்பும் காலத்தில் அவர்கள் விரும்பும் வடிவில் இருப்பன். தன்னை ஆச்ரயிக்காதவற்கு அவன் கிடைப்பதற்கு அரிதாக இருப்பான்.

1. ஆஹூயமாநம் அநபாய விபூதி காமை:
ஆலோக லுப்த ஜகதாந்த்ய மநுஸ்மரேயம் /
ஆலோகிதாம்சுக மநாகுல ஹேதி ஜாலம்
ஹைரண்யகர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்/
அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.என்னாலும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள். நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய். உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது. இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

2. என்றும் மறந்தறியேன் ; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே-இன்பக்
கடல்-ஆழிநீ அருளிக் காண் //
இரண்டாம் திருவந்தாதி
ஆழ்வார் பகவானையே உபாயமாக பற்றி அவனை பெறுவதற்கு அவனே அருள் செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
என்னுடைய எல்லா பிறப்புகளிலும் எல்லா காலத்திலும் என்னை பற்றிய நினைப்பு உனக்கு என்றும் இருக்கிறது. அதனால் தான் நான் இந்த பிறப்பில் உன்னை என்றும் மறந்ததில்லை. அது என்னால் வந்தது அல்ல. அது உன்னாலேயே தான். இனி நான் உன்னை அடைய நீயே வழி காண்பிக்கவேண்டும்

2. ஔதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே
ச்லாக்யே ச திவ்ய ஸதனே தமஸ: பரஸ்மிந்
அந்த: களேபர மிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம்
ஜாதம் கரீச கத மாதரணாஸ்பதம் தே //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //
பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது, ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு. நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய். மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய். அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

3. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்னும் காண்தோறும்- பாவியேன்
மெல் ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று //
பெரிய திருவந்தாதி
பூவைப்பூ, காயாம்பூ, கரு நெய்தல் செங்கழு நீர்ப்பூ இவைகளெல்லாம் காணும்போது அவைகள் எல்லாம் இறைவனது வடிவத்தையே நினைவூட்டுகிறது. இவையல்லாம் உனது திருமேனியே என்று இந்த பாவி பூரித்து நிற்கிறேன். இவையெல்லாம் நான் அநுபவிக்க நீயல்லவோ எனக்கு அளித்தது என்கிறார் ஆழ்வார்.

3. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //
ஸ்வாமி தேசிகன்-வரதராஜ பஞ்சாசத் //

பேரருளாள பெருமானே! நீ பாலகனாய் ஆலிலை மேல் உறங்கும் பொழுது இந்த உலகமெல்லாம் உன் வயிற்றில் அடக்கிக்கொண்டாய்- சிறுவடிவில் மகத்தான காரியம். அற்புதமான தோற்றம். நீ பெரிய வராஹமாக தோன்றியபோதும் இந்த ப்ரஹ்மாண்டமே உன்னிடத்தில் அடங்கி கிடந்தது. இவையெல்லாம் உன் திருவிளையாடல் செயல்கள்- உன் சக்தியால் தான் செய்யமுடியும்.

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-2

அத்தகிரியும் அருளாளனும்-2

புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் புணர்த்ததன் உந்தியோடு ஆகத்தும் மன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்வில்தான்சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே //

பிரமனை தோற்றுவித்த தனது நாபிகமலத்துடன் தன் மேனியில் நிலைபேறு பெற்ற பிரமன் எம்பெருமானின் சரீரமானவன். சிவனும் அவனுக்கு சரீரம் ஆனவன். அவன் மார்பிலே சேர்ந்துள்ள பெரிய பிராட்டியும் தானே தனக்கு தகுதியான செயல்களை பெற்றவனான என் தேவாதிராஜனை எல்லாவிடத்திலும் கண்கூடாக பார்க்கலாம்.
எட்டாம் திருவாய்மொழி-2-ம் பத்து.

1. மத்யே விரிஞ்சி சிவயோர் விஹிதாவதார:
க்யாதோsஸி தத்ஸமதயா ததிதம் ந சித்ரம் /
மாயா வசேந மகராதி சரீரிணம் த்வாம்
தாநேவ பச்யதி கரீச யதேஷ லோக: //
தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள் அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.
2. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே //

எம்பெருமானின் திருவடிகளில் சேர்ந்த தீர்த்தமும்,சாத்தப்பெற்ர திருத்துழாய் மாலையும் பரம சிவன் தலியில் கண்டதை அர்ஜுனனே பார்த்தான். அதனால் நாராயணனே பரதெவதை என்று நிச்சியம் செய்தான். சிவனிடம் அர்ஜுனன் சிவனிடம் பாஸுபதாஸ்ரம் வேண்டி உபாஸனை செய்ய விரும்பினான். அவன்மேல் இரக்கம் கொண்ட கண்ணன் தீர்த்தத்தையும் திருத்துழாயையும் தன் காலடியில் சமர்ப்பிக்குமாறு சொன்னான். மறுகணம் அவை சிவன் முடியில் அர்ஜுனன் பார்த்தான். இதைவிட நாராயணனின் பரத்துவத்தை பேச யாரால் முடியும். அப்பேற்ப்பட்ட ஹரி அத்தகிரியில் தேவாதி ராஜனாக பக்தர்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறான்.

திருவாய் மொழி

2. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகதமத பங்க விச்கேஷ நீலமங்கம் //
வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு. அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும். அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும். அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும். கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும். இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

3. நாவாயில் உண்டே; நமோ நாராயணா என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே-மூவாத
மாக்கதிகண் கெல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிகண் செல்லும்திறம்?

வரதனை துதிப்பதற்கு கருவியான நாக்கு, தேடவேண்டாத வாய், திகட்டாத -நமோ நாராயணா என்ற சொல் இவ்வளவும், மேலும் மோக்ஷத்தை அடைய பக்தி, ப்ரபத்தி இவை யாவும் நம்முடையே இருக்க, அதைவிட்டு ஐம்புலங்களும் இட்டு செல்லும் தீய வழிகளிலேயே செல்லும் பலரை என்னவென்று சொல்ல.
முதல் திருவந்தாதி.

3. யாவந் ந பச்யதி நிகாமம் அமாஷணோ மாம்
ப்ரு பங்க பீஷண கராள முக: க்ருதாந்த:
தாவந் பதந்து மயி தே பகவந் தயாளோ:
உந்நித்ர பத்ம கலிகா மதுரா: கடாக்ஷம் //

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன. ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான். அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது. அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும். அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

பேரளுளானனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்- அவனை சரணாகதி அடைந்தால். பகவத் ராமானுஜர் அவரையே அராதித்து கிணறு கைங்கர்யம் செய்து பெரும் பேறு பெற்றார். ஸ்வாமி தேசிகர் தன்னை அர்ப்பணித்து முடிவில்லா இன்பம் பெற்றார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அமுதன்.தினமும் அவன் நாமத்தை ஒருதரம் சொன்னாலே போதும் வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறான். நாம் தான் சரண் அடைய வேண்டும்.

R.Jagannathan.

Wednesday, February 9, 2011

அத்தகிரியும், அருளாளனும்.

அத்தகிரியும், அருளாளனும்.

புற இருளையும் , அக இருளையும் போக்குவதற்காக அவதரித்தவர்கள் தான் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும். ஸ்வாமி தேசிகன் தன் யதிராஜ சப்ததியில் அறிஞர்கள் பெருமாளை அணுகி அவரது திருவடியை பற்றவிரும்பினால் முதலில் ஆழ்வார்கள் திருவடியையும் ஆச்சார்யர்கள் திருவடியையும் பற்றிவிட்டு இங்கே வாரும் என்பார். ஆழ்வார்களோ பகவானை தேனினும் இனிதான பாக்களால் பாடி பாடி தன்னையும் மறந்து பகவானோடு ஐக்கியமாகி விட்டார்கள். ஆச்சார்யர்கள் நம்மிடமே இருந்து அப்பப்போது நம்மை திருத்தி பகவானிடம் சேர்க்கிறார்கள்.கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்கள் என்று சொன்னால்-அரங்கனும், அருளாலனும், ஆனந்த நிலயத்தில் வீற்றிருக்கும் வேங்கடவனும் தான்- அரங்கனையும், வேங்கடவனையும் நாம் அநுபவித்தாயிற்று. அருள் சுரக்கும் அத்தகிரிக்கு அதிபதியான வரதனிடம் -இம்மையிலும் மறுமயிலும் நமக்கு வாரி வழங்கும்- அருளால பெருமானிடம் தஞ்சம் புகுவோம்.


திருமழிசை ஆழ்வார்- திருச்சந்த விருத்தம்1. பூ நிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்
மீ நிலாய (து) ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லீரே?

எம்பெருமானே! வரதா! ஐந்து பூதங்களாக-ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம்-இந்த பூமியை படைத்தாய். நாற்றம் நீங்கிய மற்ற நான்கு குணங்கள் கொண்டது- நீர். தீயானது-ஒலி, ஊறு, தோற்றம் ஆகிய முக்குணங்களை கொண்டது. ஒலி, ஊறு இந்த இரண்டையும் கொண்டது காற்று. ஒலி ஒன்றையே கொண்டது ஆகாயம்.இந்த ஐந்து பூதங்களும் உன்னிடமே அடங்க்கி இருக்கின்றன-தேவராகவும், மனித்ராகவும் , விலங்காகவும், தாவரமாகவும் நீயே அதற்கு ஆத்மாவாக இருந்து நடத்தி செல்கிறாய். இப்படி எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணப்பொறுளாக உள்ளதை நாம் நினைக்க மறந்துவிடுகிறோம்.

1.த்விரத சிகரி ஸீம்நா ஸத்மவாந் பத்ம யோநே:
துரக ஸவந வேத்யாம் ச்யாமளோ ஹவ்யவாஹ:
கலச ஜலதி கந்யா வல்லரீ கல்ப சாகீ
கலயது குசலம் ந: கோsபி காருண்ய ராசி: //


ஹஸ்தகிரியின் மேற்பகுதியில் உறைவிடம் உடையவனாய் ப்ரம்மாவின் அசுவமேத யாகத்தில் கருமை நிறம் கொண்டவனாய் அக்நியாய் நிற்பவனே! பாற்கடலில் தோன்றிய பிராட்டியோடு கல்பவிருக்ஷமாய் நிற்பவனே! எங்களுக்கு க்ஷேமத்தை அருள வேண்டும்.
ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

2. ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, அல்லவற்று உளாயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி, நின்ற தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துன் ஆகி, அந்தரத்து அணைந்துநிறு
ஐந்துன் ஐந்தும் ஆய நின்னையாவர்காண வல்லரே //


ஆதி தேவனே! பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன் மாத்திரைகள் ஐந்தும், ப்ரகிரிதி, மகான், அகங்காரம் ஆகிய மூன்றும், மனமாகிய ஒன்றும்- ஆக இருபத்திநாலு தத்துவங்களையும் ஆள்பவனே! அனைத்துக்கும் ஆத்மாவியிருப்பவனே ஐந்து சக்திகள் மற்றும் புலன்கஸ் பத்திலும் புகுந்து நிற்பவனே, ஐந்து-ஒலி, போகஸ்தானம், போகோபகரணம், அமரர், முக்தர் ஆகிய ஐவராய் நின்ற நெடுமாலே-உன்னை யார் அறியவல்லர்?
திருமழிசை ஆழ்வார்- திருச்சந்தவிருத்தம்.
2. ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வததீந வாசா
தவத் ப்ரீதயே வரத யத் ததிதம் ந சித்ரம்
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷகணாம்
மஞ் ஜூநி பஞ்ஜா சகுந்த விஜல்பிதாநி //

வரதனான பேரளுளானே! எப்படி கூட்டில் அடைபட்டிருக்கும் கிளியின் மழலை சொற்களை கேட்டு மடந்தை ஆனந்திப்பாளோ அப்படி உன் குழந்தையாகிய, உன்னாலேயே பேச்சு திறன் அடைந்த என் ஸ்தோத்திரம் உனக்கு மழலை போல் தோன்றுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ?
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3. புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழிதிறந்து, ஞான்நற்சுடர்கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சுருகி உள்கனிந்து எழுந்ததோர்
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காணவல்லிரே?

நம் புலன் வழி செல்லும் பாதையை அடைத்து, நல்லதான கடவுள் நெறியை திறந்து ஞான விளக்கை ஏற்றி, இந்த உடம்பும், நெஞ்சும் உருகி, மனம் கனிந்து பரம பக்தியில் ஈடுபட்டவர்களே பகவானை-சங்கோடு சக்கிரம் ஏந்தும் வரதனை காணமுடியும்-இது இல்லாமல் யார் அவரை காணமுடியும்.
திருமழிசை ஆழ்வார்-திருசந்தவிருத்தம்.

3. யம் சக்ஷுஸா மவிஷயம் ஹயமேத யஜ்வா
த்ராகீயஸா ஸுசரிதேந ததர்ச வேதா:
தம் த்வாம் கரீச கருணா பரிணாமதஸ்
பூதாநி ஹந்த நிகிலாநி நிசாமயந்தீ //


அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை [ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து, பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால் ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்

இந்த மூன்று மூன்று ஸ்லோகங்களையும் அநுசந்தித்தால் நம் உள்ளே வரதனை காணமுடியும் என்பது ஆழ்வார், ஸ்வாமி தேசிகனின் அசையாத நம்பிக்கை.

R.Jagannathan.

Monday, January 24, 2011

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

1. ஆயர் கொழுந்தாய்! அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை, என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.

ஆயர்களுக்கேல்லாம் கொழுந்து போன்றவன், வெண்ணை களவு முத்ஹலிய விளையாட்டுகளால் கட்டுண்டவன், மாணிக்கம், தூய்மையான அமுதம் போன்றவன். இத்தகைய மாணிக்கத்தை, தாகம் உள்ளவன் தண்ணீரை பருகி பருகி அநுபவிப்பது போல அநுபவித்தேன், இதனால் மாயபிறவி காரணமாக வரும் பயத்தை அறுத்துக்கொண்டேன்.

நம்மாழ்வார்- திருவாய்மொழி.

1. வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவோ தயாசதக மேத தவாதயந்
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத: //

வேங்கடநாதனான எம்பெருமான், சிறுவனாகிய அடியேனை வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் அமறச்செய்து விளையாட்டாக வீணையை கொடுத்து இந்த தயா சதகத்தை மீட்டச்செய்தான்-என்னே அவன் தயை.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. செவிகளால் ஆரநின்கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப்பண்- தேன் உறைப்பத்துற்று
புவியின்மேல் பொன்நெடும் சக்கிரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் என் ஆவியே //

திருவேங்கடா! என் உயிரானது செவிகள் வயறு நிறையும்படிஉன் புகழ்வடிவான கனியென்னும் நாமங்களை அந்த அந்த காலங்ககளுக்கேற்ப பண்ணிலே தோய்த்து- அரசகுமாரர்கள் நல்ல பழங்களை தேனிலே தோய்த்து உண்ணுவது போன்று- என் செவி அநுபவிக்க ஆசைப்படுகிறது. இந்த அநுபவத்தை நீ தான் எனக்கு தரவேண்டும். பசித்தவனுக்கு பசித்தவுடனேயே சோறு கிடைத்தாற்போல்.சக்கிரத்தை தரித்தவன் நீ உன் புகழை என் செவிகள் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். உன் அருள் என்னிடம் தானாக வரும் வரை என் ஆவி இருக்காது. ஆகையால் இப்பொழுதே அந்த அநுபவத்தை எனக்கு தந்தருள
வேண்டுகிறேன்.
நம் ஆழ்வார் - திருவாய்மொழி

2. அத்யாபி தத் வ்ருஷ கிரீச தயே பவத்யாம்
ஆரம்ப மாத்ர மநிதம் ப்ரதம ஸ்துதீநாம்
ஸந்தர்சித ஸவ பர நிர்வஹணா ஸஹேதா:
மந்தஸ்ய ஸாஹஸ மிதம் த்வயி வந்திநோ மே //

திருவேங்கட நாதனின் தயா தேவியே! ஆதிகாலம் முதல் வேதங்கள் உன்னை புகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் சிறிது தூரமும் செல்லாமல் அப்படியே நிற்கின்றன. இத்தகைய உன்னை சிற்றரிவே கொண்ட அடியேன் நூறு ஸ்லோகங்களால் பாட வரைவகுத்து துதித்ததாய் பாவனை செய்கிறேன். என்ன மடமை இது. இது உன்னிடம் நான் செய்த பெரிய அபராதம். வரையறுக்க முடியாதவன் அல்லவா நீ! ஆனால் எம்பெருமானுக்கு செய்யும் அபராதங்களை அவன் பொறுத்தருளுமாறு நீ தான் செய்கின்றாய். எனக்காக பரிந்து பேசும் உனக்கு நான் தெரியாமல் செய்யும் அபராதத்தை நீ தான் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. சூழ்ந்து, அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும்பாழே! ஓ
சூழ்ந்து, அதனில் பெரியபர நல்மலர்ச் சோதீ! ஓ!
சூழ்ந்து, அதனில் பெரிய சுடர்ஞான இன்பமே! ஓ!
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூந்தாயே //

எல்லா திக்குகளிலும் பரந்து அழிவின்றி நித்தியமாய் இருக்கிற மூலப்பகுதிக்கு தலைவனாய், அதனை நியமிப்பவனாய் இருப்பவனே! மூலப்பகுதியை காட்டிலும் பெரியதாய் விகாரமின்றி சிறந்ததாய் மலர்ந்த ஒளி உருவமான ஆத்மாவிற்கும் ஆத்மா ஆனவனே! இவ்விரண்டிற்கும் காட்டிலும் பெரியதாய் சகல கல்யாண குணங்களால் சுற்றிவிட்டு பிரகாசிக்கும் ஞான ஆனந்த வடிவுடையவனே! இவ்மூன்று தத்துவங்களைக்காட்டிலும் பெரியதாய் வளர்ந்து என் ஆசை, அவ்வாசையை சிறிது என்று சொல்லும்படி அதனிலும் பெரிய உன் காதலை காட்டிவந்து கலந்தாயே! திருவேங்கடா!

நம் ஆழ்வார்- திருவாய்மொழி

3. அநவதி மதிக்ருத்ய ஸ்ரீநிவாஸாநுகம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வ மவ்ரீடயந்தீ
விவித குசல நீவீ வேங்கடேச ப்ரஸூதா
ஸ்துதிரிய மநவத்யா சோபதே ஸத்த்வ பாஜாம் //

ஸ்ரீனிவாஸனுடைய கருணை எல்லையற்றது. வேங்ககடேசனது வழியாய் தோன்றிய இந்த நூறு ஸ்லோகங்களும் சகல புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது-இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, இவை அனைத்தும் உண்மையே . சொற் குற்றம், பொருட்குற்றம் யாதும் இல்லாது உயர்ந்து விளங்கும் இந்த ஸ்தோத்ரம்வ் ஸதவ குணம், அறம், தர்மம், பொருள், இன்பம் முடிவில் அவனிடமே இட்டு செல்லும்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

R.Jagannathan.

Tuesday, January 18, 2011

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

1. தண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா! கடல் கடைந்தாய் உன்சுழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணிகொண்டாய் சாமறே //

பகைவர்கள் மகிழ்ந்து சிரிக்கவும் நல்ல உறவினர்கள் மனமுறுகி வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை தரும் இவ்வுலகின் தன்மை தான் என்ன! அருளாலனே! பாற்கடலை கடந்து அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனே!உனது திருவடிதாமரையை பற்றி உன்னிடம் சேருவதற்கு எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்.
நம் ஆழ்வார்--திருவாய் மொழி

1.அநிதாஜுஷா மந்தர்மூலேsப்
யபாய பரிப்லவே
க்ருதவி தநகா விச்சித்யைஷாம்
க்ருபே யமவச்யதாம்
ப்ரபதந பல ப்ரத்யாதேச
ப்ரஸ்ங்க விவர்ஹ்தஜிதம்
ப்ரதிவிதி முபாதத்ஸே ஸார்த்தம்
வ்ருஷாத்ரி ஹிதைஷிணா //


தயா தேவியே! வேறு எவரையும் நாடாத ப்ரபந்நருக்கு அறிந்து செய்யும் பாபங்களுக்கு அதன் சம்பந்தம் நேர்ந்தபோதிலும், நீ இந்த சேதநருக்கு யம்னிடம் அகப்படுதலை தடுத்து திருவேங்கடமுடையானினிடம் சேர்த்து ப்ரபத்தியின் மோக்ஷ பயனை வாங்கி தருகிறாய்-என்னே உன் கருணை!

2.களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
வளைவாய் நேமிப் படையாய் குடந்தை கிடந்த மாமாயா
தளரா உடலம், எனது ஆவி சரிந்து போகும் போது
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இயசை நீயே//

பஞ்ச ஆயுதங்களையும் தாங்கி நிற்பவனே! நீ என் துன்பங்களை போக்கினாலும் சரி, போக்காவிட்டாலும் சரி செய்வதும் சரிரி, தவிர்வதும் சரி இவை உன் விருப்பங்கள். நீயே எனக்கு உபாயமாக ஆகிறாய். உன்னையன்றி வே3று எவரும் எனக்கு துணையாக உடையேன் அல்லன். உடல் தளர்ந்து என் உடலும் என்னைவிட்டு நீங்கும் காலம் நெருங்குகிறது. இந்த கடைசீ காலத்தில் தளராமல் உன் க் ஒருமிக்க பிடித்து போகும்படி நீயே அருள் செய்யவேண்டும்.

2. ப்ரபூத விபுத த்வியஷத் பரண கிந்ந விச்வம்பரா-
பராபநயநச் சலாத் த்வமதார்ய லக்ஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம ஸௌத தீப ச்ரியா
விபச்சி தவிகீதயா ஜகதி கீதயா Sந்தம் தம: //

தயாதேவியே! அசுரர்களால் ஏற்ப்பட்ட துயரை தாங்கி நிற்ருகும் பூமாதேவியின் பாரத்தை துடைக்க நீயே ஸ்ரீநிவாசனை கண்ணனாக அவதரிக்க செய்து கம்ஸ, சிசுபால, கால நேமி போன்றவர்களை வதம் செய்து நாம் உய்வதற்காக ஐந்தாவது வேதத்தை அளித்து அஞ்ஞான இருளை போக்க பேருதவி செய்திருக்கிறாய்.

3. பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும்
நிறம்- தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற; இச்
சிறந்த வான் சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே//

கர்மங்களுக்கு கட்டுப்படாத நீ அடியார்களை காப்பதற்காக இப்பூமியில் வந்து அவதரித்து தாய் தந்தயரின் காற்கட்டு அறுகும்படி பிறந்தாய்-இதை நினைத்தால் என் நெஞ்சம் உருகுகிறது. எங்கோ வந்து பிறந்து எங்கோ வளர்ந்தாய். ஒரு இடையனாக வளர்ந்தாய்.பூதனை வதம், சகடாசுரன் வதம் செய்து நீ யசோதைக்கு ஆனந்தம் ஊட்டி பகவர் வயிற்றில் நின்ற நெடுமாலே! பாரதப்போரில் பாண்டவர் பக்கம் வெற்றியை நாட்டி, எல்லோரும் உய்ய கீதயை காட்டி செய்த மாயங்களை-என்ன! என்று சொல்வேன்-இவை யாவும் என் நெஞ்சம் புகுந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன. இப்படி நிலையை போக்கி உன்னை வந்தடையும் நாள் என்றோ? //
நம் ஆழ்வார்- திருவாய் மொழி

3. நிஸ்ஸீம வைபவ ஜூஷாம் மிஷதாம் குணாநாம்
ஸ்தோதுர் தயே வ்ருஷ கிரீச குணேஸ்வரீம் த்வாம்
தைரேவ நுநமவசை ரபிநந்திதம் மே
ஸத்யாபிதம் தவ பலா தகுதோபயத்வம் //

தயா தேவியே! திருவேங்கடநாதனுக்கு பல குணங்கள் உள்ளன-ஞானம், பலம், வீர்யம், சக்தி. இவைகளை விட்டு விட்டு நான உன்னை துதித்தேன். அதனால் அவை என் மேல் கோபம் கொள்ளலாம். ஆனாலும் எனக்கு உன் துணை இருப்பதால் நான் பயப்பட வேண்டாம்-ஏனெனில் நீதானே அவைகளுக்கு தலைவி, உன்னை விட்டால் சேதநர்களுக்கு அவை பயன்பெற முடியாதென்று அவைகளுக்கு நண்றாக தெரியும்.எப்படி வேருக்கு நீர் விட்டால் அவை கிளகளுக்கும் போய் சேருமோ அப்படி உன்னை துதித்தால் அது தங்களுக்கும் போய் சேரும் என்று அவைகளுக்கு தெரியும். எப்படி ஒரு அரசியை பாராட்ட்டினால் அவை மக்களுக்கு போய் சேருமோ அப்படி உன் கருணை எனக்கு இருப்பதால் நான் அச்சமில்லாமல் இருக்கலாம்.

R.Jagannathan..

3.