Tuesday, September 28, 2010

The Glory of Srirangam- Alwar Pasurams

திருவரங்க அரங்கனின் சிறப்பு
The Glory of SRIRANGAM



சென்ற பிளாக்கில் ஸ்ரீரங்கத்தின் சிறப்பை பற்றிய ஒரு அரிய பாடலை தந்தோம். அரங்கனின் சிறப்போ கணக்கில் அடங்கா! ஆழ்வார்கள் அழகனின் அழகை எப்படி எல்லாமோ அநுபவித்திருக்கிறார்கள்.

அவைகளில் சிலவற்றை அர்த்தத்தோடு கீழே காணலாம்.

தன் அடியார் திறத்தகத்துத் தாமறையாள்
  ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என் அடியார் அதுசெய்யார், செய்தாரேல்
 நன்று செய்தார் என்பர்போலும்
மன் உடைய விபீணற்கா மதில் இலங்கைத்
 திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்
 மற்றுஒருவருக்கு ஆள் ஆவரே?


                 பெரியாழ்வார் திருமொழி- 4-9-2

எவ்வளவு குற்றங்கள் அடியார் செய்திருந்தாலும் அவைகளை குணமாக கொள்பவன் அரங்கன்.
அவ்வளவு வாத்ஸல்யம் அரங்கனுக்கு அடியார்களிடம்.

தன் அடியார்களை குறித்து பெரிய பிராட்டியே குற்றம் சொல்ல தொடங்கினாலும் -என் அடியார்கள் அத்தகைய குற்றங்களை செய்யமாட்டார்கள்-அப்படியே செய்திருந்தாலும் அவர்கள் நன்மையே செய்தவர்கள் ஆவர்-என்று சொல்பவன் பெரிய பெருமாள். செல்வம் பொருந்திய விபீடணனுக்காக மதிளையுடைய இலங்க்கையை நோக்கிதன் மலர்கண்களை வைத்து அருளியவன். என்னுடைய தலைவனான இந்த பெரிய பெருமாளைத் தவிர   வேறொருவருக்கு ஆட்படுவார் எவரேனும் உண்டோ?

அடியாரின் பெருமையும் அரங்கனின் பெருமையும் ஒருங்கே பேசும் ஒரு அருமையான பாசுரம்.

இனி அவர் மகள் அரங்கனை எப்படி அநுபவிக்கிறார் என்று பார்க்கலாம்.

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
 யாம்   உகக்கும் எம்கையில் சங்கமும்? எந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
 ஆ! முகத்தை நோக்காரால் அம்மனே ! அம்மனே!


                            நாச்சியார் திருமொழி- //
கண்ணனை கானாமல் ஆண்டாள் உடல் மெளிந்தாள். கைவளைகள் நழுவின. அந்த விரக நிலையில் தன்னை சூழ்ந்திருக்கும் பெண்டிரை நோக்கி ஆண்டாள் கத்றும் பாசுரம் இது.

ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! நீங்களே சொல்லுங்கள் - என்ன நியாயம் இது? தன் கையில் உள்ள சங்கம் எப்போதும் நழுவாது இருக்கவேண்டுமென்று அவர் நினைக்கிறாரோ? அது போல் என் கை வளையல்கள், சங்கமும்  நழுவாது இருக்கவேண்டும் என்று அவர் பார்த்துக்கொள்ளவேண்டாமோ? கொடிய நாகணை மேல் பள்ளிகொள்ளும் திருவரங்கர் கண்ணால் நோக்குவதையும் கைவிட வேண்டுமோ? ஐயோ! ஐயோ! முன்பு இனியவராக இருந்தவர்- புலி, பாம்பு போல- நினைத்தாலும் பயத்தை விளைக்கும்படி ஆனது எப்போ?

Thursday, September 23, 2010

The Glory of Srirangam-ஸ்ரீரங்கமஹத்வம்

ஸ்ரீரங்கமஹத்வம்

சொல்லும் சுடலும் உலகமே சொல்லும், அல்லும் பகலும் அணி திருவரங்கம் என்ன, நல்லோர் என்று சொல்லும் பெரியவர் திருவடியே சேர்ந்தேன் நான், திருவடியில் ஏழு மதிள் அரங்கத்தம்மான், மச்சோடு மாளிகை மதிள் அரங்கருக்கு, அத்தர், சித்தர், பக்தர் வாழும், அந்த நீல அரங்கர், ஏல நீல அரங்கர், தேனார் திருவரங்கம், தேனே திருவரங்கம், மண்டலத்தை மதிள் சூழ்ந்த ரங்கம் ஆங்காரம் கெய்யாத, அமுதென்ன தென்னரங்கம், ஹரி ஹரி பெரிய கோவில், அணி திருவரங்கம் கோயில், சொல்லுவார் சொல்லும் கோயில், தூய்மதி உறையாத கோயில், மெல்லியார் உறையும் கோவில், வேந்தரடி பணியும் கோயில், அல்லியார் போற்றும் கோயில், ஆண்டாள் அரவணைமேல் அமரும் கோயில், காதத்தே மணி ஓசை கேட்கும் கோயில், கேட்டதே இரண்டு செவியும் களிக்கும் கோயில், தூரத்தே திருச்சின்னம் தோற்றும் கோயில், வேதத்தால் பெரிய கோயில், விபீஷணர் வணங்கும் கோயில், ஆதி பெருமாள் என்று அனைவருக்கும் பெரிய கோயில் தானே!

ஹரி, ஹரி பெரிய கோயில். அம்புஜதத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில், தோராத தனி வீரன் தொழுத கோயில், துணையாம் விபீஷணற்கு துணையான கோயில், சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில், செழுமறையின் முதலெழுத்தை சேர்ந்த கோயில், தீராத வினையெல்லாம் தீர்க்கும் கோயில், திருவரங்கம் பெரிய கோயிலிதுதானே! ப்ரம்மாவும் பெறும் தவத்தால் பெற்ற கோயில், பெற்று வைத்து பிள்ளையவர் பெராத கோயில், அயன் வந்து அறுபதாயிரம் பேரோடு அர்ச்சித்த கோயில், பலவினைகள் தீர்த்த கோயில், பரிதாபம் தீர்த்த கோயில், திருவரங்கம் பெரிய கோயில் என திகழும் கோயிலிதுதானே!

ஸப்த ப்ராகாரமும், சந்நிதியும் கண்டேன். ஸர்வேஸ்வரன் திருவடிகளை சாஷ்டாங்கமாக சேவிக்க கண்டேன். இருபுறமும் காவேரி இசைந்துவர கண்டேன். திருமஞ்சன காவேரி சேவிக்கவே கண்டேன். ஆயனார் கோயில் அடி மதிலை கண்டேன். திருகோயில் ஆயனார் திருவழகை கண்டேன். அடையவளைஞ்சான் அடிமதிலை கண்டேன். ஆண்டாள் சந்நதி அதிசயம் கண்டேன். தேர் கண்டேன். சித்திரை வீதி கண்டேன். உத்தர வீதி கண்டேன். நாடு கண்டேன். நகரம் கண்டேன். நாலுகால் மண்டபத்தில் திருவந்திப்பு காப்பு அழகை கண்டேன். ஆனையேத்தி மண்டபமும், ஆண்டாளுடைய சேவை அழகையும், அரங்கனுடைய சேவை அழகையும் கண்டேன். தொண்டரடிபொடி ஆழ்வாரை சேரவே சேவித்தேன்.

கூரத்தாழ்வாரை கூடவே சேவித்தேன். நாதமுனி ஆழ்வாரை நன்றாகவே சேவித்தேன். ஆளவந்தாரை அனுதினமும் சேவித்தேன். சூடிக்கொடுத்த ஆண்டாள் திருவழகை சேவித்தேன். பெரிய ஆழ்வாரை பிரியாமல் சேவித்தேன். கற்கருடக்கம்பத்தை கண்குளிரசேவித்தேன். திருப்பானார் ஆழ்வார் திருவழகை சேவித்தேன். சக்கரத்தாழ்வாரை சரணம் என்று சேவித்தேன். உக்ர நரஸிம் ஹரை உகந்து சேவித்தேன். கோதண்ட ராமரை கூடவே சேவித்தேன். குலசேகர ஆழ்வாரை கூடவே சேவித்தேன். சீதா பிராட்டியார் திருவழகை சேவித்தேன்.

பிள்ளைலோகாச்சாரியாரை பிரியாமல் சேவித்தேன். பார்த்தசாரதியை பணிந்து நான் சேவித்தேன். பாஷ்யகாரரை பணிந்து நான் சேவித்தேன். திருகச்சி நம்பியின் திருவழகை சேவித்தேன். நம்மாழ்வாரை நன்றாகவே சேவித்தேன். மதுரகவி ஆழ்வாரை வணங்கி நான் சேவித்தேன்.திருமங்கை ஆழ்வார் திருவழகை சேவித்தேன். கொட்டார நாச்சியாரை கூடவே நான் சேவித்தேன். மேல பட்டாபிராமரை அடி பணிந்து நான் சேவித்தேன். பொய்கை முனி, பூதத்தாழ்வர், பேயாழ்வார் பிரியாமலே சேவித்தேன்.

தீர்த்தங்கரை வாசுதேவர் திருவழகை சேவித்தேன். தந்வந்திரியை கூடவே சேவித்தேன். ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீளாதேவி, பெரிய பிராட்டியாரை பிரியாமல் சேவித்தேன். தசாவதாரரின் திருவழகை சேவித்தேன். திருமங்கை மன்னன் திருவழகை சேவித்தேன். தூப்புல் ஆசாரியர் திருவடியை அடி பணிந்து சேவித்தேன். ஹயக்ரீவர் வந்நிதியை அடி பணிந்து சேவித்தேன். மேட்டழகிய சிங்கரை முன்பாக சேவித்தேன். கண்ணன் திருவடிகளை கண் குளிர சேவித்தேன். வாசுதேவ பெருமாளை வணங்கி சேவித்தேன். ஐந்து குழி மூணுவாசல் அதிசயமும் கண்டேன். புன்னாக விருக்ஷத்தின் கீழ் வேதவ்யாசரையும், வேணபடியும் சேவித்தேன். கோதண்டராமரை கூடவே சேவித்தேன்.

சீதாபிராட்டியார் திருவழகை சேவித்தேன். பரமபத நாதரை பக்தியுடன் நான் சேவித்தேன். அலங்கார ராமரை அழகாக சேவித்தேன்.காட்டழகிய சிங்கரை கண்குளிர சேவித்தேன்.லக்ஷ்மிதேவியை நன்றாக சேவித்தேன். திருமழிசை ஆழ்வாரை சேவித்தேன். கருடாழ்வாரை கிட்ட நின்று சேவித்தேன். ஆழ்வார் அனைவரையும் அடி பணிந்து சேவித்தேன். அஞ்சனாதேவியின் புத்திரரையும் அடி பணிந்து சேவித்தேன்.

சீனிவாசன் சந்நதியில் பெருமாளை நன்றாக சேவித்தேன். பூவராஹ பெருமாள் பெருமையெல்லாம சேவித்தேன். கமலவல்லி தாயாரை கண் குளிர சேவித்தேன். விரஜா நதியை வேணபடி சேவித்தேன். பரம பதவாசலை பக்தியுடன் சேவித்தேன். திருநாரயணபுரம் செல்லைபிள்ளையையும் சேவித்தேன். மடப்பிள்ளை நாச்சியாரை மகிழ்ந்து நான் சேவித்தேன்.
பெரிய பெருமாள் திருவடிகளே சரணம். பொற்குடகம்பத்தை பொருந்தி நான் சேவித்தான். வெங்கல வாசற்படியை வேணும்படி சேவித்தேன்.

கருகூல நாச்சியரை கண்குளிர சேவித்தேன். விமானசேவையை வேணுபடி சேவித்தேன். செங்கமல நாச்சியாரின் திருவழகை சேவித்தேன். துலுக்க பிராட்டியாரை சேரவே சேவித்தேன். சேரவல்லி தாயாரை சேரவே சேவித்தேன். கிளி மண்டபத்தை கிட்ட வந்து சேவித்தேன். சேனை முதலியாரை சேரவே சேவித்தேன்.பரவாசுதேவரை பக்தியுடன் சேவித்தேன். கண்ணன் திருவடியை கண்டு சேவித்தேன்.

ஸ்ரீனிவாசன் திருவுருவத்தை கண்டு நான் சேவித்தேன். அர்ஜுனமண்டபத்தை அழகாகவே சேவித்தேன். சந்தன மண்டபத்தை சதுராகவே சேவித்தேன்.ஜய,விஜயாள் இருபுறமும் சென்று நான் சேவித்தேன். 108-பெருமாள் திருவடிகளே சரணம். பெரிய பெருமாளை பிரியாமல் சேவித்தேன். கஸ்தூரி ரங்கனாரை கண்குளிர சேவித்தேன். அண்டை நாச்சியாரை அழகாக சேவித்தேன்.

பக்கத்து நாச்சியாரைபாங்காக சேவித்தேன். சின்ன பெருமாள் செல்வரை சேவித்தேன். திருவரங்கமாளிகையாரை சென்று நான் சேவித்தேன். பாம்பின்மேல் பள்ளிகொண்டிருக்கும் பரிமள ரங்கரை சேவித்தேன்.கருமுகிலார் அரவவணையின் மேல் கண் வளர கண்டேன். திரு கண்டேன். பொன்மேனி கண்டேன். திருமதிலும் மணி மரமும் கண்டேன். திருவடிமேல் வளரும் சிலம்பையும் கண்டேன். பீதாம்பரமும், பிராட்டி திருமார்பில், மார்கண்ட பூணலும், மதிநிறைந்த ஆபரணமும், கார்முகிலார் வண்ணனை கண்டாயோ நெஞ்சமே, கஸ்தூரி ரெங்கனை கண்டாயோ நெஞ்சமே, அஞ்சனை வண்ணனை அடிபணிந்து கண்டீரோ, பெருமாள் மஹத்துவததையும், வைரகடுக்கனும், பெருமாள் பிராட்டியார் அழகன்னோ! பார் உலகம் ஆண்ட பூங்கிளியை தோற்றுமே பார்வை அழகன்னோ!

பாருலகம் ஆண்டுவந்த ஆண்மை உண்மை அருள் படைத்த பார்வை அன்னோ! தூண்டாத மணிவிளக்கை சுடலெரித்த பார்வை அன்னோ1 இரும்புபோல் ஹ்ருதய நெஞ்சம், இதயம் உருகும் வண்ணம் மரங்கள்போல் வலிய நெஞ்சம், வாழை நார் போல் வசப்படுத்தி, பூதங்கள் என்னும் தழையை கிள்ளி, பொல்லாத குணங்களை வேரறுத்து புண்ணிய குணங்களுக்கு விளக்கேற்றி, மோகனா, மோகினி மாயை விலக்கி, பேரார் தன்னில் பெருகவே கண் வளர்ந்தேன் கோதை முகில் வண்ணன், உகந்து கலந்ததுபோல், உஷாக்காலத்தில் எழுந்திருந்து, ஹரி ஹரி என்னும் அக்னியை கிளப்பி, திருவரங்கம் என்னும் திருவிளக்கேற்றி, ஆராதனம் என்னும் ஆபரணச்செல்லமெடுத்து, சிற்றம் சிறுகாலே என்னும் திறவு கோலாலே, திருக்காப்பு திறந்து,

முத்து, வைரம், வைடூர்யம், வேதம், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மந்திரங்களையும் கூடவே சேர்த்து, சரணாகதியை நினைத்து, மரணாகதியை மறந்து, துரிதம், துரிதம் என்று தூய விகக்கேற்றி, பரம பதம் என்று பல்லாண்டு பாடுவதுமே. உம்பவரும், செம்பனைமேல், மாளிகைமேல், தாளகமாம், செம்பொன் படிகையாம், நாகத்தலையணியாம், படுக்கையில் வாழும் குருமணி தேசத்தில் ஹரியே! ஹரியே கதியாகி, பர்வதங்களை விருக்ஷங்களாக்கி, விருக்ஷத்தின் கீழ் அவதாரமாகி, சப்த சமுத்திரம் ஆறாகி, தசபலி திட்டம் திருமதிலாகி மந்தார புஷ்பத்தில் மாலை தாழ, ஏகசக்கிறாள் பல்லாண்டு பாட

அஷ்டவசுக்கள் வாக்காள் விளக்க, தும்புரு நாரதர் கீதங்கள் இசைக்க, சுக்கில வசுக்கள் சோபனை சொல்ல, சப்த சமுத்திரம் திருப்பள்ளிக்கட்டிலின் கீழ், தச சமுத்திரம் திருப்பால் பரிமாறி, அனந்தன் என்னும் தலைகணை போட்டு, அச்சுதன் என்னும் கால் கோட்டை நாட்டி, ஸ்ரீ கோவிந்தன் என்னும் முத்துகால் நாட்டி ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளாதேவியோடு யோக நித்திரை செய்யும்போது பிரும்மாவும் கமலத்தை காணாமல் ஓடி எங்கும் தேடி தாமரை நானத்தோகையிலே தமையன் கைகொண்ட முதல் ஏது சேவகம், ஏது சேவகம் என்னும் தசரதர் ச்ய்த தபஸினாலே, கௌசலை செய்த பாக்கியத்தினாலே, சீதை மணவாளர் தசரதருக்கே புத்திரராய், மூர்த்தி நால்வராம், திருவயோத்தியில் அவதாரம் செய்து எழுந்தருளினார்.

கைகேயி தந்த வரத்தாலே கானகத்திற்கு சென்று இலங்கையை அழித்து, இராவணனை
ஸம் ஹரித்து விபீஷணருக்கு லங்கா நகர பட்டாபிஷேகம் செய்து வைத்து, சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு எழுந்தருளி, ஆறில் ஒன்று கடமை வாங்கி, அனைவரையும் த்ருப்தி செய்து, இப்படி கற்ப காலத்தின் நடுவே அரசாண்டிருக்கும்போது, விபீஷணருக்கு திவ்ய விமானத்தை தந்தருளினாய்.

விபீஷணனும்-தான் இந்த பாக்கியம் பெற்றோம் என்று, அடிமேல் பெற்று, முடிமேல் கை கொண்டு இலங்கை நோக்கி எடுக்கபோனதளவு, எடுக்கபோகாதளவு, காவேரியின் நடுவில் சந்திர புஷ்கரணி தென்கரை மேல் புன்னாக விருக்ஷத்தின் கீழே எழுந்தருளினார். விபீஷணர் பாதம் விளக்கி, பரிசுத்தம் பண்ணி அந்தி தொழுது அனுஷ்டானம் பண்ணி பாதிரி பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, பாரிஜாத பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, மகிழம்பூவில் மூவாயிரம் கொண்டுவந்து, திருத்துழாய் தளத்தை ஏராளம் கொண்டுவந்து, அன்று மலர்ந்த செந்தாமரை புஷ்பத்தில் இரண்டாயிரம் கொண்டுவந்து, கஸ்தூரி அரணியின் கணக்கில்லாமல் கொண்டுவந்து, இரு திருவடியில் சமர்ப்பிவித்து,

இக்ஷ்வாகு வம்சத்து ராஜாவானவர் தம்மை தாமே எழுந்தருளிசெய்துவந்த பெருமாளே, மாதவரும் நீரே, மதுசூதனரும் நீரே, ஸ்ரீதரரும் நீரே, செந்தாமரை கண்ணனும் நீரே, ஒரு சப்த சாகரரே, சதுர்புஜரே, மங்கை மணவாளரே, மதுரை மன்னவரே, அம்புவிகரசரே, புண்டரீகாக்ஷரே இப்படி அரண்டும், புரண்டும் பரிதாபம் பண்ணினார். அப்போது பெருமாள், யாம் அந்த ராக்ஷஸ பூமிக்கு வரவல்லோமென்றார். ஸ்ரீராமருள்ளமட்டும் இங்கேயே கண் என்றார்.

ஒருபுறம் வலிய நாடு, இருபுறம் காவேரி, இருபுறம் ரெங்கவிலாஸம், இருபுறம் வலிய நாடு, உறையூர் வல்லி தாயார்,, ஒரு புறம் நானிங்கு மானிடரை ஈடேற்ற வந்தேன், வருஷத்திற்கு ஒரு முறை வந்து நீ போவாயென்று, வருஷத்திற்கு ஒரு முறை நீ வந்து ஆராதனம் செய்வாய் என்றும், திருவடியும், மலரும் விடையும் தந்து அருளி அனுப்பினார். விபீஷணர் தாம் மோக்ஷம் பெற்றதால் இந்த பாக்கியம் பெற்றோமென்று , சிரசால் வகுத்து, தெளிநீர்சார்த்தி, முன்கால் பணிகள் சார்த்தி, முழங்கால் பணிகள் சார்த்தி, திருவிரல் ஆழி சார்த்தி, திருக்கணைக்கால் தண்டை சார்த்தி, ஒரு முத்தோடு ஒரு முத்து ஒரு கோடி விலை பெற்ற திரு முத்து ஹாரத்தை திருமார்பில் திகழவே சார்த்தி,

முத்து, முத்தோடு மாணிக்கம் அறுபதினாயிரம் கோடி விலை பெற்ற திரு நீலநாயக பதக்கத்தை திருமார்பில் திகழவே சார்த்தி, வாகனம் நல்ல வளையள் சார்த்தி, மாணிக்க தோடும் சார்த்தி, கண்டத்தில் காரையும் சார்த்தி, கட்டி முத்து மாலையும் சார்த்தி, ஏழுலகம் ஆண்டவருக்கு யக்ஞோபவீதம் சார்த்தி, பாருலகம் ஆண்டவருக்கு பாண்டியன் கொண்டையும் சார்த்தி ஸர்வேஸ்வரனுக்கு தகுட்டு பீதாம்பரம் சார்த்தி, அழகிய மணவாளனுக்கு அரைநூண்மாலையும் சார்த்தி, அரைவடகிங்கிணியும் சார்த்தி, கண்ணன் உகந்தமாலை, சடகோபன் அளித்த மாலை, சூடிகொடுத்த மாலை, திருமார்பில் திகழவே சார்த்தி,

பொன்னு திருவடியில் புஷ்பம் சமர்ப்பித்து, தங்க திருவடியில் தண்டையும், சியம்பும் சமர்ப்பித்து, பூலோக வாசிக்கு பொங்கல் தளிகை சமர்ப்பிவித்து,பாரளர்ந்த நாதனுக்கு பால் மாங்காய் சமர்ப்பிவித்து, மலைபோல் வளர்ந்தால்போல் வடகடலும், தெங்கடலும் வளர்ந்தால்போல் முகத்தில் கருண்ட கேசமும், முகத்தில் உருண்டைமுடியும், அண்டம் கயிறாக, ஆற்கடல் பாம்பாக, யக்ஞசித்தன் திருமதிலாகி, எழில்ரங்கத்தம்மான், ஹனுமன் படையும், கருடக்கொடையும், பரிமளமான உடையவரும், வடதிருவாசல் தேசிகரும், கோமகளார் எடுத்தக்கொற்றக்குடையும், திருமகளார் எடுத்த திருவந்திகாப்பழகும் இப்பேற்கொண்டு ஸ்ரீரெங்காவதாரத்தை கற்றவரும் கேட்டவரும், கற்றுகொடுத்தவருக்கும், காதுகுளிர கேட்டவருக்கும், சொல்லு, சொல்லு என்று செவிகுளிர கேட்டவருக்கும்,

இன்னும் சொல்லு என்று இருந்திருந்து கேட்டவருக்கும், பின்னும் சொல்லு என்று பிரியமாய் கேட்டவருக்கும், எட்டாத பரமபதம் இமைபொழுதில் கிடைக்கும், தட்டாத பரமபதம் தானே கிடைத்துவிடும், மன்னு திருவோண துவாதசியில் சொல்லி துதிப்பார், சுத்தராகி, பக்தராகி உள்ளும் , புறமும் ஜோதி உடனாய் சேர்ந்திருப்பார், என் எம்பெருமாள் திருவடிகளே சரணம்.

--------------------------------------
மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் யார் எழுதி வைத்தார் என்று தெரியாது. ஆனால் ஸ்ரீரெங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் அழகு, ஸ்ரீரெங்கத்தில் அமைந்திருக்கும் சந்நதிகள், பகவானின் சிறப்பு, ஆழ்வார்களின் பெருமை இவை அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. படிப்பவர்கள் அதோடு ஸ்ரீரெங்க உலா வருவதுபோல் காட்சியையும் காணலாம்.

மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் என்னுடைய மனைவிக்கு அவள் சிநேகிதி-குண்டு கண்ணம்மா என்பவள் சொல்ல கேட்டு எழுதிகொண்ட குறிப்பு. இதை படிப்பவர்களுக்கு நிச்சியம் மோட்சம் கிட்டும் என்பது திண்ணம்.

-------------------------------------------------

R.Jagannathan.

Monday, September 20, 2010

Saint Thiagaraja Song List

I had opportunity to come across the list of some famous songs-which I reproduce below


1) He composed the song “Namo Namo Raghavaya” at the age of 13.
2) On Narada teaching him he is said to have sung Sadhinchane, the third of Pancharatna krithis on this occasion.
3) Also His gratitude to Narada also reflects in his other compositions “Narada Guru Swami” in Raga Durbar, “Sri Narada” in Raga Kaanada, “Naradamuni” in Raga Pantuvarali and “Vara Narada” in Raga Vijayasri.
4) When his guru Venkataramanayya wanted to listen to Thyagaraja's  talent and  invited him to perform at his house in Thanjavur. Thyagaraja then sang “Endaro Mahaanubhavulu”, the fifth of the Pancharatna krithis .
5) When on Venkataramanayya recommendationKing of Tanjore wanted Thyagaraja to sing in his favor and so invited Thyagaraja to his palace sending along wealth and gifts . Thyagaraja composed a song called “Nidhi Chala Sukhama and rejected the offer.

Then on pilgrimage he has sung the Kshetra kirthanas

6) At Tirupati
i) he sang a song praying that the curtain of ignorance be removed -  “Tera Tiyagarada” in the Raga Gaulipantu
ii) Also “Venkatesa Ninu” in Raga Madhyamavathi

7) At Kovur he composed five songs on Lord Sunderesha -
                        i) E Vasudha - Sahana
                        ii) Korisevimpa Rare - Kharaharapriya
                        iii) Sambho Mahadeva - Pantuvarali
                        iv) Nammivaccina - Kalyani
                        v) Sundareshvaruni - Sankharabharanam
8) At Tiruvotriyur he sang 5 songs worshipping Goddess Tripurasundari
                        i) Kannatalli Nivu - Saveri
                        ii) Sundari Ninu - Arabhi
                        iii)Sundari - Begada
                        iv) Sundari Ni - Kalyani
                        v) Darini Telusu - SuddhaSaveri

9)         At Kanchipuram he sang 3 songs in praise of Lord Varadaraja and Goddess Kaamakshi
                        i) Varadaraja - Svarabhushani
                        ii) Varada Navanitha - Ragapanjaram
                        iii) Vinakuni Vale - Madhyamavathi
           
10)       Thyagaraja then visited the shrine of Sri Ranganatha at Srirangam and sang  “Sriranga Pancharatna” consisting of
                        i) Rajuvedale - Todi ragam, Roopakam thalam
                        ii) O Ranga Sayi - Kambhoji , Adi
                        iii) Jutamu rare - Arabhi, Roopakam
                        iv) Vinarada na manavi - Devagandhari, Adi
                        v) Karuna judavayya - Saranga, Adi

           
             
11)       At Lalgudi known then as Tapasthirthapuram he sang 8 songs. Of these 3 are on Pravruddha Sreemathi and 2 on Saptharishishvara
                        i) Gati Neevani Ne - Thodi
                        ii) Lalithe Sree - Bhairavi
                        iii) Deva Sree - Madhyamavathi
                        iv) Mahita Pravruddha - Kambhoji
                        v) Esha Pahimaam - Kalyani
                        vi) Nagapattanam
                        vii) Evaru Teliya - Thodi
                        viii) Karmame Balavantamaaya - Saveri
           
12)       Finally back at Thiruvaiyaru he sang 12 songs
                        i) Ilalo Pranatartti - Athana
                        ii) Evarunnaru - Malavasri
                        iii) Ehi Trijagadisha - Saranga
                        iv) Muccata Bramha - Madhyamavathi
                        v) Karuna Juda - Thodi
                        vi) Parashakthi - Saveri
                        vii) Nivu Brovavale - Saveri
                        viii) Bale Balendhubhushani - Ritigaula
                        ix) Amba ninnu - Arabhi
                       x) Amma Dharmasamvardhini - Athana
                       xi). Vidhi Sakradulaku - YamunaKalyani
                       xii)  Shive Pahimaam - Kalyani           

these above are the Kshetra kirthanas

Apart from the above Kshetra kirthanas ( kshetra means holy places) he  composed and sung the Sataragaratnamalikai (In Sanskrit  Sata means100, raga means musical scale, ratna means gem and Malikai means garland) consisting of 100 devotional songs offered by Thyagaraja as a garland to Lord Rama. He also composed Utsava Sampradaya kirthanas which amount to about 26 kirthanas , Prahlada Bhakthi Vijaya Kirthanas about 44 songs and Naukaacharitra kirthanas about 21 songs

R.Jagannathan

Monday, September 13, 2010

10 Principles for Peace of Mind - மன அமைதிக்கு 10-வழிகள்

10 Principles for Peace of Mind - மன அமைதிக்கு 10-வழிகள்

1. Do Not Interfere In Others’ Business Unless Asked:
Most of us create our own problems by interfering too often in others’ affairs. We do so because somehow we have convinced ourselves that our way is the best way, our logic is the perfect logic and those who do not conform to our thinking must be criticized and steered to the right direction, our direction. This thinking denies the existence of individuality and consequently the existence of God.. God has created each one of us in a unique way. No two human beings can think or act in exactly the same way. All men or women act the way they do because God within them prompts them that way. Mind your own business and you will keep your peace.

1 உன்னை கேட்காவிட்டால்-மற்றவர் விஷயத்தில் தலையிடாதே!
நாம் பிறர் விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டு நமக்குள்ளேயே ப்ரச்னைகளை ஏற்படுத்திக்கொள்ளுகிறோம். இது எதனால் என்றால் ந்ம்முடைய வழியே சரியானது என்ற வீராப்பு, மற்றவர்கள் இதிலிருந்து மாறுபட்டால அது கண்டிக்க தக்கது, எதிர்க்கவேண்டியது என்ற கொள்கை. இந்த எண்ணம் தவறானது. இது அடுத்தவன் சுதந்திரத்தை பாதிப்பது, அதற்கு மதிப்பு அளிக்க மறுப்பது- இது கடவுளையே நிந்தனை செய்வதாகும்.கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தன்மையை கொடுத்திருக்கிறார். ஆண், பெண் இவர்கள் இருவரும் அவர்கள் பாதையில் செல்ல கடவுள் வழி வகுத்து கொடுத்திருக்கிறார். ஆகையால் நாம் நம் பாதையில் செல்வோம்- மற்றவரை வற்புறுத்த வேண்டாம். அப்போது தான் நமக்கு சாந்தி கிடைக்கும்

2. Forgive And Forget:
This is the most powerful aid to peace of mind. We often develop ill feelings inside our heart for the person who insults us or harms us. We nurture grievances. This in turn results in loss of sleep, development of stomach ulcers, and high blood pressure. This insult or injury was done once, but nourishing of grievance goes on forever by constantly remembering it. Get over this bad habit. Life is too short to waste in such trifles. Forgive,Forget, and march on. Love flourishes in giving and forgiving.

2.மன்னித்து, மற!
இது சாந்திக்கு அரு மருந்தாகும். நாம் நமக்கு துரோகம் செய்தவனின் பேரில் துவேஷம் கொள்கிறோம். அதையே நினைத்து பொறுமுகுறோம், வருந்துகிறோம்.இது உடல் நலத்தை பாதிக்கும், அல்ஸர், தூக்கமின்மை, ரத்த கொதிப்பு போன்ற வியாதிகளை வரவழிக்கும். நமக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு தடவையே இருந்தாலும் அதை பற்றிய சதாசிந்தனை செய்து கொண்டிருப்பது நாமே நம் வாழ்நாளை சுருக்கி கொள்வதாகும். மன்னித்து, மறந்துவிடு உன் பயணத்தை தொடரு. வாழ்க்கை மலர கொடுப்பது, மன்னிப்பது இது இரண்டில் தான் இருக்கிறது.
3. Do Not Crave For Recognition:
This world is full of selfish people. They seldom praise anybody without selfish motives. They may praise you today because you are in power, but no sooner than you are powerless, they will forget your achievement and will start finding faults in you. Why do you wish to kill yourse lf in striving for their recognition? Their recognition is not worth the aggravation. Do your duties ethically and sincerely.

3. புகழின் பின் ஓடாதே!

இந்த உலகம் சுய நலவாதிகள் நிறைந்தது. அவர்கள் தன் சுய நலத்திற்காக உன்னை பாராட்டுவார்கள் உன்னால் அவர்களுக்கு காரியம் ஆகும் வரை. அதன் பின் உன்னை கண்டு கொள்ளமாட்டார்கள். உனக்கு பதவி போனதும் உன் பக்கமே வரமாட்டார்கள். மாறாக உன்னை குறைகூற தொடங்குவார்கள். உனக்கு ஏன் இந்த வீண் பிடிவாதம்? புகழ் ஏச்சில் முடிந்தால் பாதிப்பு உனக்கு. நீ உன் கடமையை உண்மையாகவும், மனப்பூர்வமாகவும், புகழை விரும்பாமலும் செய். புகழ் உன்னை தானே தேடிவரும்.
4. Do Not Be Jealous:
We all have experienced how jealousy can disturb our peace of mind. You know that you work harder than your colleagues in the office, but sometimes they get promotions; you do not. You started a business several years ago, but you are not as successful as your neighbor whose business is only one year old. There are several examples like these in everyday life. Should you be jealous? No. Remember everybody’s life is shaped by his/her destiny, which has now become his/her reality. If you are destined to be rich, nothing in the world can stop you. If you are not so destined, no one can help you either. Nothing will be gained by blaming others for your misfortune. Jealousy will not get you anywhere; it will only take away your peace of mind.

4. பொறாமை படாதே!
நாம் எல்லோரும் பொறாமை என்ற அசுர குணம் நம்மை அழித்துவிடும் என்று அறிவோம். சில சமயம் நீ மற்றவர்களை விட கடுமையாக உழைப்பாய். அதற்கு பலன் கிடைக்காவிட்டல் சோர்ந்து விடுகிறாய். உன்னை விட குறைவாக உழைத்தவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது. நீ பல வருஷங்களாக வியாபாரம் செய்கிறாய் ஆனால் லாபமோ வெகு குறைவு. ஆனால் உன் பக்கத்தில் வியாபாரம் ஆரம்பித்தவன் ஒரே வருஷத்தில் அபரிமிதமான லாபம் ஈட்டிவிடுகிறான். இது மாதிரி பல உதாரணங்களை சொல்லலாம். அதற்காக நீ பொறாமை பட்டால் உன்னையே நீ அழித்துக்கொள்ளுகிறாய். நம்முடைய வாழ்க்கையை வகுத்துகொடுப்பவன் இறைவனே. நம் தலை எழுத்தை நாம் மாற்றமுடியாது. நீ வாழ்க்கையில் உச்சத்திற்கு போவாய் என்று உன் தலையில் எழுதி இருந்தால் அதை யாராலும் தடுக்கமுடியாது. அல்லது உன் நிலமை நன்றாக இல்லையா-அதற்கு மற்றவர்களை காரணம்  காட்டினால் பிரயோஜனம் இல்லை. ஆகையால் பொறாமை படாதே-அது உன் அமைதியை கெடுத்துவிடும்.
5. Change Yourself According To The Environment:
If you try to change the environment single-handedly, the chances are you will fail. Instead, change yourself to suit your environment. As you do this, even the environment, which has been unfriendly to you, will mysteriously change and seem congenial and harmonious.

5.சூழ் நிலைக்கு தகுந்த மாதிரி உன்னை மாற்றிக்கொள்
நாம் எல்லோரும் மற்றவர்கள் நம்மை பார்த்து நடக்கவேண்டும், நாம் தான் முன்னோடி என்று நினைக்கின்றோம். இது தவறு. நாம் தான் சூழ் நிலைக்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் தோல்வியையே சந்திக்கவேண்டியிருக்கும். நம்மை மாற்றி கொண்டால் சூழ்நிலையும் தானே மாறும்-தடங்கலே வராது, அமைதியாக முன்னேறலாம்.
6. Endure What Cannot Be Cured:
This is the best way to turn a disadvantage into an advantage. Every day we face numerous inconveniences, ailments, irritations, and accidents that are beyond our control. If we cannot control them or change them, we must learn to put up with these things. We must learn to endure them cheerfully. Believe in yourself and you will gain in terms of patience, inner strength and will power.

6. மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே!
தினமும் நாம் பல சோதனைகளை சந்திக்கிறோம். ஸ்கூட்டரில் போகும் போது டயர் வெடித்துவிடுகிறது. அல்லது நமக்கு ஒரு இடத்திலிருந்து பணம் வரவேண்டியது வரவில்லை. உபாதைகளால் அவஸ்தை படுகிறோம், மன கசப்பு, தடங்கல்கள்- இவை யாவும் நமக்கு மீறிய செயல்கள். நாம் நினைத்தாலும் மாற்றமுடியாதவைகள். அப்போது இவைகளை ஏற்று முன்னேற மனபாண்பு வேண்டும், அமைதியாக மகிழ்ச்சியோடு ஏற்று கொள்ள பக்குவபடுத்திகொள்ள வேண்டும். உன்மேல் நம்பிக்கை வை, உன்னுடைய பலத்தை உணர்ந்துகொள்.

7. Do Not Bite Off More Than You Can Chew:
This maxim needs to be remembered constantly. We often tend to take more responsibilities than we are capable of carrying out. This is done to satisfy our ego. Know your limitations. . Why take on additional loads that may create more worries? You cannot gain peace of mind by expanding your external activities. Reduce your material engagements and spend time in prayer, introspection and meditation. This will reduce those thoughts in your mind that make you restless. Uncluttered mind will produce greater peace of mind.


7. அளவுக்குமேல் திணிக்காதே! போகாதே!

நம்முடைய சக்தியை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இது வேலையானாலும் சரி மற்றதானாலும் சரி. சில சமயம் நமக்கு மீறி பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்- பெயர் வாங்க வேண்டும் என்ற கௌரவ ப்ரச்னை. பின் செய்யமுடியாமல் அவஸ்தை படுகிறோம்-அவப்பெயர். மன அமைதி கெடுகிறது. அதற்கு பதிலாக உன்னால் முடிந்ததை செய்துவிட்டு மற்ற நேரங்களில் தியானம், இறை வழிபாடு போன்றவைகளில் மனதை செலுத்து. நிர்மலமான மனது ஒரு ஆனந்த சாகரம்.
8. Meditate Regularly:
Meditation calms the mind and gets rid of disturbing thoughts. This is the highest state of peace of mind. Try and experience it yourself. If you meditate earnestly for half an hour everyday, your mind will tend to become peaceful during the remaining twenty-three and half-hours. Your mind will not be easily disturbed as it was before. You would benefit by gradually increasing the period of daily meditation. You may think that this will interfere with your daily work. On the contrary, this will increase your efficiency and you will be able to produce better results in less time.

8. தியானம் ஒரு சிறந்த மருந்து.

தியானம் ஒரு சிறந்த மருந்து. மனதை ஒரு நிலைக்கு கொண்டுவந்து தினமும் ஒரு அரைமணி நேரம் ஒரு இடத்தில் வேறு எண்ணம் ஒன்றுமில்லாமல் நிச்சிந்தனையாக தியானம் செய். இது மற்றைய இருபத்து மூன்று மணி நேரத்தையும் அமைதியாக கழிக்க உதவும். இதை நடைமுறையில் கொண்டு வந்துவிட்டால்-உன்னிடம் ஒரு சக்தி பிறக்கும், புதிய உற்சாகும் உண்டாகும், உன் திறமை விருத்தியாகும், உன்னால் பலவற்றை சாதிக்க முடியும்.
9. Never Leave The Mind Vacant:
An empty mind is the devil’s workshop. All evil actions start in the vacant mind. Keep your mind occupied in something positive, something worthwhile. Actively follow a hobby. Do something that holds your interest. You must decide what you value more: money or peace of mind. Your hobby, like social work or religious work, may not always earn you more money, but you will have a sense of fulfillment and achievement. Even when you are resting physically, occupy yourself in healthy reading or mental chanting of God’s name.

9. வெற்று மனம் சாத்தானின் இருப்பிடம்!
வெற்று மனது- அதாவது வேலை இல்லாமல் சும்மா மனதை அலையவிடுவது-பல கெட்ட விஷயங்களுக்கு இடம் கொடுக்கவேண்டிவரும். பிறர் விஷயத்தில் தலையிட இடம் கொடுக்கும், தகாத நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கும். எப்போதும் மூளைக்கு நல்ல விஷயங்களை சிந்திக்க, செயல் பட வைக்கவேண்டும். நல்ல கலைகளை கற்றுக்கொள். கைவேலை ஏதாவது கற்றுக்கொள். உன்னை எதிலாவது ஈடுபடுத்திக்கொள்- அது நன்மையை பயக்கவேண்டும்-லாபகரமாக இருக்கவேண்டும்-சமூகத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும்.அல்லது சமூக சேவையில் உன்னை ஈடுபடுத்திக்கொள்-இதனால் உன் அறிவு வளரும், தேக ஆரோக்கியம் கூடும். நீ ஓய்வு எடுத்துக்கொண்டாலும் கடவுளை நினை, அவன் நாமங்களை சொல்லு அல்லது நல்ல விஷயங்களை படி.

10. Do Not Procrastinate And Never Regret:
Do not waste time in protracted wondering ” Should I or shouldn’t I?” Days, weeks, months, and years may be wasted in that futile mental debating. You can never plan enough because you can never anticipate all future happenings. Value your time and do the things that need to be done. It does not matter if you fail the first time. You can learn from your mistakes and succeed the next time. Sitting back and worrying will lead to nothing. Learn from your mistakes, but do not brood over the past. DO NOT REGRET. Whatever happened was destined to happen only that way. Why cry over spilt milk?

10. வழ, வழ அல்லது செய்யலாமா வேண்டாமா-என்ற இழு படி நிலையில் இருக்காதே
இதை செய்யலாமா வேண்டாமா-ஏதாவது கெடுதல் வருமா என்ற இரண்டும் கெட்டான் நிலையில் இருக்காதே. அது காலத்தை வீணாக்கும். எல்லாமே தீர ஆராய்ந்து முடிவு எடுக்கும் நிலையில் இருக்காது-எந்த சமயத்தில் எதை செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும்- அது பலன் அளிக்காமல் போனால் பரவாயில்லை அல்லது ஏமாற்றத்தை தந்தாலும் கவலை படாதே. பல தவறுகள் நம்மை வெற்றிப்பாதைக்கு ஈட்டு செல்லும். உழைப்பு நம்முடையது. பலன் கடவுள் கையில். தவறு நேர்ந்துவிடுமோ என்று பயந்து முயர்ச்சியில் ஈடுபடாது இருக்கக்கூடாது. சிந்திய பாலுக்காக வருத்தப்படக்கூடாது-பிரயோஜனமும் இல்லை.

இந்த பத்து கட்டளைகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் நாம் நிச்சியம் வெற்றி பெறுவோம், அமைதியான வாழ்க்கை அமையும்-குடும்பம் சதா சந்தோஷமாக இருக்கும், முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து செல்வோம்.

R.Jagannathan