Monday, January 24, 2011

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

1. ஆயர் கொழுந்தாய்! அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை, என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.

ஆயர்களுக்கேல்லாம் கொழுந்து போன்றவன், வெண்ணை களவு முத்ஹலிய விளையாட்டுகளால் கட்டுண்டவன், மாணிக்கம், தூய்மையான அமுதம் போன்றவன். இத்தகைய மாணிக்கத்தை, தாகம் உள்ளவன் தண்ணீரை பருகி பருகி அநுபவிப்பது போல அநுபவித்தேன், இதனால் மாயபிறவி காரணமாக வரும் பயத்தை அறுத்துக்கொண்டேன்.

நம்மாழ்வார்- திருவாய்மொழி.

1. வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவோ தயாசதக மேத தவாதயந்
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத: //

வேங்கடநாதனான எம்பெருமான், சிறுவனாகிய அடியேனை வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் அமறச்செய்து விளையாட்டாக வீணையை கொடுத்து இந்த தயா சதகத்தை மீட்டச்செய்தான்-என்னே அவன் தயை.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. செவிகளால் ஆரநின்கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப்பண்- தேன் உறைப்பத்துற்று
புவியின்மேல் பொன்நெடும் சக்கிரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் என் ஆவியே //

திருவேங்கடா! என் உயிரானது செவிகள் வயறு நிறையும்படிஉன் புகழ்வடிவான கனியென்னும் நாமங்களை அந்த அந்த காலங்ககளுக்கேற்ப பண்ணிலே தோய்த்து- அரசகுமாரர்கள் நல்ல பழங்களை தேனிலே தோய்த்து உண்ணுவது போன்று- என் செவி அநுபவிக்க ஆசைப்படுகிறது. இந்த அநுபவத்தை நீ தான் எனக்கு தரவேண்டும். பசித்தவனுக்கு பசித்தவுடனேயே சோறு கிடைத்தாற்போல்.சக்கிரத்தை தரித்தவன் நீ உன் புகழை என் செவிகள் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். உன் அருள் என்னிடம் தானாக வரும் வரை என் ஆவி இருக்காது. ஆகையால் இப்பொழுதே அந்த அநுபவத்தை எனக்கு தந்தருள
வேண்டுகிறேன்.
நம் ஆழ்வார் - திருவாய்மொழி

2. அத்யாபி தத் வ்ருஷ கிரீச தயே பவத்யாம்
ஆரம்ப மாத்ர மநிதம் ப்ரதம ஸ்துதீநாம்
ஸந்தர்சித ஸவ பர நிர்வஹணா ஸஹேதா:
மந்தஸ்ய ஸாஹஸ மிதம் த்வயி வந்திநோ மே //

திருவேங்கட நாதனின் தயா தேவியே! ஆதிகாலம் முதல் வேதங்கள் உன்னை புகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் சிறிது தூரமும் செல்லாமல் அப்படியே நிற்கின்றன. இத்தகைய உன்னை சிற்றரிவே கொண்ட அடியேன் நூறு ஸ்லோகங்களால் பாட வரைவகுத்து துதித்ததாய் பாவனை செய்கிறேன். என்ன மடமை இது. இது உன்னிடம் நான் செய்த பெரிய அபராதம். வரையறுக்க முடியாதவன் அல்லவா நீ! ஆனால் எம்பெருமானுக்கு செய்யும் அபராதங்களை அவன் பொறுத்தருளுமாறு நீ தான் செய்கின்றாய். எனக்காக பரிந்து பேசும் உனக்கு நான் தெரியாமல் செய்யும் அபராதத்தை நீ தான் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. சூழ்ந்து, அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும்பாழே! ஓ
சூழ்ந்து, அதனில் பெரியபர நல்மலர்ச் சோதீ! ஓ!
சூழ்ந்து, அதனில் பெரிய சுடர்ஞான இன்பமே! ஓ!
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூந்தாயே //

எல்லா திக்குகளிலும் பரந்து அழிவின்றி நித்தியமாய் இருக்கிற மூலப்பகுதிக்கு தலைவனாய், அதனை நியமிப்பவனாய் இருப்பவனே! மூலப்பகுதியை காட்டிலும் பெரியதாய் விகாரமின்றி சிறந்ததாய் மலர்ந்த ஒளி உருவமான ஆத்மாவிற்கும் ஆத்மா ஆனவனே! இவ்விரண்டிற்கும் காட்டிலும் பெரியதாய் சகல கல்யாண குணங்களால் சுற்றிவிட்டு பிரகாசிக்கும் ஞான ஆனந்த வடிவுடையவனே! இவ்மூன்று தத்துவங்களைக்காட்டிலும் பெரியதாய் வளர்ந்து என் ஆசை, அவ்வாசையை சிறிது என்று சொல்லும்படி அதனிலும் பெரிய உன் காதலை காட்டிவந்து கலந்தாயே! திருவேங்கடா!

நம் ஆழ்வார்- திருவாய்மொழி

3. அநவதி மதிக்ருத்ய ஸ்ரீநிவாஸாநுகம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வ மவ்ரீடயந்தீ
விவித குசல நீவீ வேங்கடேச ப்ரஸூதா
ஸ்துதிரிய மநவத்யா சோபதே ஸத்த்வ பாஜாம் //

ஸ்ரீனிவாஸனுடைய கருணை எல்லையற்றது. வேங்ககடேசனது வழியாய் தோன்றிய இந்த நூறு ஸ்லோகங்களும் சகல புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது-இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, இவை அனைத்தும் உண்மையே . சொற் குற்றம், பொருட்குற்றம் யாதும் இல்லாது உயர்ந்து விளங்கும் இந்த ஸ்தோத்ரம்வ் ஸதவ குணம், அறம், தர்மம், பொருள், இன்பம் முடிவில் அவனிடமே இட்டு செல்லும்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

R.Jagannathan.

Tuesday, January 18, 2011

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

1. தண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா! கடல் கடைந்தாய் உன்சுழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணிகொண்டாய் சாமறே //

பகைவர்கள் மகிழ்ந்து சிரிக்கவும் நல்ல உறவினர்கள் மனமுறுகி வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை தரும் இவ்வுலகின் தன்மை தான் என்ன! அருளாலனே! பாற்கடலை கடந்து அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனே!உனது திருவடிதாமரையை பற்றி உன்னிடம் சேருவதற்கு எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்.
நம் ஆழ்வார்--திருவாய் மொழி

1.அநிதாஜுஷா மந்தர்மூலேsப்
யபாய பரிப்லவே
க்ருதவி தநகா விச்சித்யைஷாம்
க்ருபே யமவச்யதாம்
ப்ரபதந பல ப்ரத்யாதேச
ப்ரஸ்ங்க விவர்ஹ்தஜிதம்
ப்ரதிவிதி முபாதத்ஸே ஸார்த்தம்
வ்ருஷாத்ரி ஹிதைஷிணா //


தயா தேவியே! வேறு எவரையும் நாடாத ப்ரபந்நருக்கு அறிந்து செய்யும் பாபங்களுக்கு அதன் சம்பந்தம் நேர்ந்தபோதிலும், நீ இந்த சேதநருக்கு யம்னிடம் அகப்படுதலை தடுத்து திருவேங்கடமுடையானினிடம் சேர்த்து ப்ரபத்தியின் மோக்ஷ பயனை வாங்கி தருகிறாய்-என்னே உன் கருணை!

2.களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
வளைவாய் நேமிப் படையாய் குடந்தை கிடந்த மாமாயா
தளரா உடலம், எனது ஆவி சரிந்து போகும் போது
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இயசை நீயே//

பஞ்ச ஆயுதங்களையும் தாங்கி நிற்பவனே! நீ என் துன்பங்களை போக்கினாலும் சரி, போக்காவிட்டாலும் சரி செய்வதும் சரிரி, தவிர்வதும் சரி இவை உன் விருப்பங்கள். நீயே எனக்கு உபாயமாக ஆகிறாய். உன்னையன்றி வே3று எவரும் எனக்கு துணையாக உடையேன் அல்லன். உடல் தளர்ந்து என் உடலும் என்னைவிட்டு நீங்கும் காலம் நெருங்குகிறது. இந்த கடைசீ காலத்தில் தளராமல் உன் க் ஒருமிக்க பிடித்து போகும்படி நீயே அருள் செய்யவேண்டும்.

2. ப்ரபூத விபுத த்வியஷத் பரண கிந்ந விச்வம்பரா-
பராபநயநச் சலாத் த்வமதார்ய லக்ஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம ஸௌத தீப ச்ரியா
விபச்சி தவிகீதயா ஜகதி கீதயா Sந்தம் தம: //

தயாதேவியே! அசுரர்களால் ஏற்ப்பட்ட துயரை தாங்கி நிற்ருகும் பூமாதேவியின் பாரத்தை துடைக்க நீயே ஸ்ரீநிவாசனை கண்ணனாக அவதரிக்க செய்து கம்ஸ, சிசுபால, கால நேமி போன்றவர்களை வதம் செய்து நாம் உய்வதற்காக ஐந்தாவது வேதத்தை அளித்து அஞ்ஞான இருளை போக்க பேருதவி செய்திருக்கிறாய்.

3. பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும்
நிறம்- தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற; இச்
சிறந்த வான் சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே//

கர்மங்களுக்கு கட்டுப்படாத நீ அடியார்களை காப்பதற்காக இப்பூமியில் வந்து அவதரித்து தாய் தந்தயரின் காற்கட்டு அறுகும்படி பிறந்தாய்-இதை நினைத்தால் என் நெஞ்சம் உருகுகிறது. எங்கோ வந்து பிறந்து எங்கோ வளர்ந்தாய். ஒரு இடையனாக வளர்ந்தாய்.பூதனை வதம், சகடாசுரன் வதம் செய்து நீ யசோதைக்கு ஆனந்தம் ஊட்டி பகவர் வயிற்றில் நின்ற நெடுமாலே! பாரதப்போரில் பாண்டவர் பக்கம் வெற்றியை நாட்டி, எல்லோரும் உய்ய கீதயை காட்டி செய்த மாயங்களை-என்ன! என்று சொல்வேன்-இவை யாவும் என் நெஞ்சம் புகுந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன. இப்படி நிலையை போக்கி உன்னை வந்தடையும் நாள் என்றோ? //
நம் ஆழ்வார்- திருவாய் மொழி

3. நிஸ்ஸீம வைபவ ஜூஷாம் மிஷதாம் குணாநாம்
ஸ்தோதுர் தயே வ்ருஷ கிரீச குணேஸ்வரீம் த்வாம்
தைரேவ நுநமவசை ரபிநந்திதம் மே
ஸத்யாபிதம் தவ பலா தகுதோபயத்வம் //

தயா தேவியே! திருவேங்கடநாதனுக்கு பல குணங்கள் உள்ளன-ஞானம், பலம், வீர்யம், சக்தி. இவைகளை விட்டு விட்டு நான உன்னை துதித்தேன். அதனால் அவை என் மேல் கோபம் கொள்ளலாம். ஆனாலும் எனக்கு உன் துணை இருப்பதால் நான் பயப்பட வேண்டாம்-ஏனெனில் நீதானே அவைகளுக்கு தலைவி, உன்னை விட்டால் சேதநர்களுக்கு அவை பயன்பெற முடியாதென்று அவைகளுக்கு நண்றாக தெரியும்.எப்படி வேருக்கு நீர் விட்டால் அவை கிளகளுக்கும் போய் சேருமோ அப்படி உன்னை துதித்தால் அது தங்களுக்கும் போய் சேரும் என்று அவைகளுக்கு தெரியும். எப்படி ஒரு அரசியை பாராட்ட்டினால் அவை மக்களுக்கு போய் சேருமோ அப்படி உன் கருணை எனக்கு இருப்பதால் நான் அச்சமில்லாமல் இருக்கலாம்.

R.Jagannathan..

3.

வேங்கடமும். வேங்கடநாதனும்-8


வேங்கடமும். வேங்கடநாதனும்-8

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
உலகம் அளந்த பிரான், பரன்
சென்றுசேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே !

பெருமாள் பரம பதத்தை விட்டு திருமலையில் வந்து ஆசையோடு நிற்கின்றான்.அது தான் நாம் அடையதக்கதுவே. இதை தவிர நம்க்கு வேறு பலன் என்ன வேண்டும்.அந்த மலையை வணங்கினால் துன்பம் தானாக விலகிவிடும். கோவர்த்தன மலையை தூக்கி, பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன். ஊருக்கு எல்லாம் உதவியவன். மாவலியால் கவரப்பட்ட உலகத்தை மீட்டவன். இந்த மலையை வணங்கினாலேயே நம் வினைகள் எல்லாம் நீங்கிவிடும்.                
                                                                           நம் ஆழ்வார்- திருவாய் மொழி.

1. த்ரித்வித சிதசித் ஸ்த்தா ஸ்த்தேம ப்ரவ்ருத்தி நியமிகா
வ்ருஷகிரி விபோ ரிச்சா ஸா த்வம் பரை ரபராஹதா
க்ருபண பரப்ருத் கிங்குர்வாண ப்ரபூத குணாந்த்ரா
வஹஸி கருணே வைசக்ஷண்யம் மதீக்ஷண ஸாஹஸே //

தயா தேவியே மூவகைப்பட்ட சேதன அசேதன ஸ்வரூபத்தையும் இருப்பையும், செயலையும் நியமிப்பவளாய், பிறரால் தடுக்கப்படாதவளும், குற்றேவல் புரிகின்ற பெருமையுள்ள மற்ற குணங்ககளை உடையவளாய், திருமலையில் உள்ள ப்ரபுவின் விருப்பத்தின்படி வடிவாயுள்ள நீ என்னை கடாக்ஷிப்பது என்ற துணிவான செயலை தாங்கி நிற்கின்றாய்.
                                                                                                                                               ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

2. வீடுமின் முற்றவும்
   வீடு செய்து உம் உயிர்
   வீடு உடையானிடை
   வீடு செய்(மி)நே

நம் எல்லோரையும் ஆழ்வார் அழைக்கின்றார்-இறைவனிடம்-- திருவேங்கடத்தானிடம் பக்தி செய்து உய்வு பெறுங்கள்.அவனுக்குகு புறம்பான எதையும் செய்யாதீர்கள். அப்படி செய்துவிட்டு உங்கள்  ஆத்மாவை அவனிடம் சமர்ப்பியுங்கள். அப்படி செய்தால் உங்கள் கவலைகள்  எல்லாம் தீர்ந்துவிடும்.

2. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்த்யேந த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
இதி த்வய்யாயத்தம் த்விதய முபதீ க்ருத்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதி பதம் //

தயா தேவியே! உன் நாயகனான திருவேங்கடமுடையானுக்கு இரண்டு குணங்கள் உண்டு.உலகுக்கு காரணமாயிருப்பவன். மோக்ஷம் அளித்தல். இவையே அவனுடைய லீலையாயிருப்பவை. இவை எல்லாம் உன் கருணையால் தான் நடப்பவை.ப்ரப்த்தி பண்ணவனை பகவான் அன்புடனழைகின்றான் இதுவும் உன் கருணையினால் தான்.உன் நாதனுக்கு நீ அளிக்கும் இப்பெருமைகள் பக்தர்களை அவன் பால் ஈர்க்கின்றது. அவனை சரண் அடைகிறார்கள்.

                                                                                                                            திருவாய்மொழி-நம்மாழ்வார்.

2. விவித்ஸா வேதாளீ விகம பரிசுத்sபி ஹ்ருதயே
   படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா:
   நமந்தஸ் த்வாம் நாராயண் சிகரி கூடஸ்த்த கருணே
   நிருந்த த்வத்  ந்ருபதிஸுத நிதிம் ஜஹதி //

திருவேங்கடமலையில் காட்சி தரும் திருவேங்கடநாதனின் தயா தேவியே! மக்களுக்கு வரும் மண்ணாசை, பெண்ணாசை
முதலிய ஆசைகளுக்கு பெரும் தீனி போடவேண்டும். சில புண்ணியசாலிகளான பெரியோர்கள் உள்ள தூழ்மையோடு பக்தி யோகம் செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் கடினம் ஆனால் இன்னும் சில பெரியவர்கள் உன்னிடம் ப்ரபத்தி செய்து, சாஸ்த்திரம் மறுத்த செயலை செய்யாது, அப்படி சிறு தவறுகள் செய்தாலும் நீ அதை மன்னித்து அவர்களுக்கு மோக்ஷத்தை தருகிறாய்.
                                                                                                                        ஸ்வாமி தேசிகன் - தயா சதகம்.

3. ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும்
    மாயபிரானை என் மாணிக்கசோதியை
    தூய அமுதை பருகி பருகி என்
    மாய பிறவி மயர்வு அறுத்தேனே //

ஆயர்களுக்கு கொழுந்தானவன்-கோவிந்தன் வெண்ணை களவுண்ட மாயன்,அதற்காக அடியுண்டவன். மாணிக்கம் போல் ஒளி வீசுபவன். அமுதம் போன்றவன் இப்பேற்பட்ட பெருமானை-தாகமுள்ளவன்  தண்ணீரை அள்ளி அள்ளி பருகுவது போல பருகி அநுபவித்து என் அஞ்ஞானத்தை தீர்த்துக்கொண்டேன்.
                                                             நம் ஆழ்வார்- திருவாய்மொழி

ஹிதமிதி ஜகத த்ருஷ்ட்யா க்லுப்தை
ரக்லுப்த பலாந்தரை:
அமதிவிஹிதை ரந்யைர்
தர்மாயிதைச் ச ய்த்ருச்சயா /
பரிணத பஹுச் சத்மா
பத்மாஸஹாய தயே ஸ்வயம்
ப்ரதிசஸி நிஜாபிப்ரேதம் ந:
ப்ரசாம்ய தபத்ரபா //

ஸ்ரீநிவாசனுடைய தயா தேவியே! நன்கு அறிந்து செய்யப்பட்ட புண்யங்களும் ஸங்கல்பிக்கப்படாத வேறு சில புண்யங்களாலும் தற்ச்செயலாக தருமமாக ஆன புண்யங்களாலும் பரிபக்குவமான பல காரணங்களை உள்ளவளாக கொண்ட நீ தானாகவே நாங்கள் விரும்புவதை கொடுத்தஅருள்கிறாய்.

                                                                                                              ஸ்வாமி தேசிகன்- தயா சதகம் //

.