Thursday, December 9, 2010

வேங்கடமும், வேங்கடநாதனும்- 5

வேங்கடமும், வேங்கடநாதனும்- 5

1. பற்பநாபன் உயர்வுஅற உயரும் பெரும் திறலோன்
எற்பான்; என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம்; கார்முகில் போலும் வேங்கட நல்
வெற்பன்; விசும்போர் பிரான்; எந்தை தாமோதரனே !

எல்லா உலகங்களுக்கும் காரணமான உந்தி கமலத்தை உடையவன். மிக்க உயர்ந்த திறலை உடையவன். என்னிடத்தைலேயே மனதை வைத்திருப்பவன். என்னையல்லாது வேறு எதையும் அறியாதவன். என்னை தமக்கு அடிமையாக்கி கொண்டு எனக்கே தன்னை கொடுத்த கற்பகம், எனக்கு அமுதமானவன் கொடுத்ததை நினைக்காமல் மேலும் மேலும் கொடுக்கும் திருவேங்கடவன், நித்ய சூரிகளுக்கு தலைவன், எளிமையானவன், என்னை அடிமை கொண்டவன் என் தந்தையாவான்.

நம்மாழ்வார் - திருவாய்மொழி

1. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷு விததாத்ம துரே மதுரே /
வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் ல
ஹரீம் //

மென்மையான தயா தேவியே! தேவர்களை காப்பவளே! ஆசையை ஒழித்தவர்க்கு சதா நன்மை புரிபவளே! அறிஞர்களை ஆதரிப்பவளே! திருவேங்கட நாதனுக்கு பிரியமானவளே!எல்லா மங்களத்தையும் அருள்பவளே! சம்சாகர அலையில் தத்தளிக்கும் என்னை கடைத்தேறுவாயாக.

2. ஒழிவுஇல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமைசெய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கே!

மிக்க அருவிகளுடையது திருவேங்கடம். அங்கே எழுந்தருளியிருக்கிறான் எங்கள் குல நாதன் வேங்கடேசன்.அவன் என் தந்தைக்கும், தந்தைக்கும் தந்தை. அவனுக்கு எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் உடனிருந்து ஒன்றும் குறையாமல் எல்லா அடிமகளையும் நாம் செய்யவேண்டும் .

2. விவித்ஸா வேதாளி விகம பரிசுத்Sபி ஹ்ருதயே
படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா /
நமந்தஸ் த்வாம் நாராயண ச்கிகரி கூடஸ்த்த கருணே
ந்ருத்த த்வத் த்ரோஹா: ந்ருபதிஸுத நிதிம் ந ஜஹதி //

திருவேங்கடமலையின் உச்சியில் உள்ள ஸ்ரீநிவாசனுடைய தயா தேவியே! உள்ளம் ஆசையாகிற பெண் பேய் ஒழிந்தால் தூய்மை பெற்றுவிடும். இதை பல பெரியவர்கள் செய்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் பக்தியோகம் செய்ய கடுமையாக போராடுகிறார்கள். இதற்கு அஞ்சி சில பெரியோர்கள் எளிய உபாயமான உன்னிடம் ப்ரபத்தி செய்துவிடுகிறார்கள். அவர்கள் சிறு தவறு செய்தபோதிலும் நீ அவர்களை மன்னித்து ஸ்ரீநிவாசனிடம் சேர்த்துவிடுகிறாய். என்னே உன் தயை.

3. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்றுஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஒழியுமே//

கோவர்த்தன மலையை தூக்கி குளிர்ந்த மழையினின்றும் பசுக்களை காத்தான். இப்படி ஊருக்கு உதவியன், நாட்டுக்கு உதவிய செயல் உலகமே காட்டும். மாவலியிடமிருந்து உலகத்தை மீட்டு அளித்த பேருபகாரன். அவன் விரும்பி குடிகொண்டிருக்கும் திருவேங்கட மலையாகும். இந்த மலையை வணங்கினாலேயே நம் பாபங்கள் எல்லாம் போய்விடும், துன்பங்கள் தாமாக நீங்கிவிடும்.

3. தயே துக்தோதந் வத் வ்யதியுத ஸுதா ஸிந்து நயத:
தவதாச்லேஷாத் நித்யம் ஜநித ம்ருத ஸஞ் ஜீவந தசா: /
ஸ்வதந்தே தாந்தேப்ய: ச்ருதி வதந கர்ப்பூர குளிகா
விஷுண்வந்த: சித்தம் வ்ருஷசிகரி விச்வம்பர குணா: //

தயாதேவியே! திருப்பாற்கடல் மிக இனிமையானது. அதுவே அமுதமான ஆறாக இருந்தால் அதற்கு இறப்பவரை பிறப்பிக்கும் ஆற்றல் உண்டு. திருபாற்கடலும், அமுதஆறும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். அதுபோல திருவேங்கட முடையான் திருமலை உச்சியில் இருந்து மக்களை காக்கின்றான். அவனுடைய மற்றெல்லா குணங்களை காட்டிலும் அவன் தயா குணமே மிக சிறந்தது, பெருமை மிக்கது. இந்த குணங்கள் இந்திரியங்களை வென்றவருக்கு எப்பொழுதும் இனிப்பாக இருக்கின்றன.

சேதநர்கள்:

கலியுகத்தில் ப்ரத்யக்ஷ தெய்வம் ஸ்ரீநிவாசன். அவன் பரம தயாளு. துயரால் வாடுபவருக்கு அதை போக்கிடுவான். அவனை சரண் அடைந்தவர்கள் ஒரு நாளும் துக்கத்தை அநுபவிக்கமாட்டார்கள். இதை பலரது வாழ்க்கையில் காணலாம். அவனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததுமே நமது மன சுமை இறங்கிவிடும். புது பலம் பெற்று திரும்புவோம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment