Wednesday, December 1, 2010

வேங்கடமும், வேங்கடநாதனும்-4


வேங்கடமும், வேங்கடநாதனும்-4

1. பெருகு மதவேழம் மாப்பிடிக்குமுன் நின்று
     இரு கண் இளமூங்கில் வாங்கி- அருகு இருந்த
    தேங்கலந்து, நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
    வாங்கலந்த வண்ணன் வரை.

    திருவேங்கட மலையில் ஆற்றுப் பெருக்குப் போல மத நீரையுடைய ஆண் யானை-தனது பெண்யானையின் முன்னே நின்று-இள மூங்கிலை பறித்து அதனை தேனில் தோய்த்து பெண் யானைக்கு நீட்டும். இப்படி ஆண் யானை பெண் யானைக்கு திருவேங்கடமலையில் வாழ்பவன்-பிராட்டியோடு உறைபவன்-வேங்கடநாதன்- அவன் நிச்சியமாக நம்மையும் காப்பான்.

                                         பூதத்தாழ்வார்.     இரண்டாம் திருவந்தாதி

1.ஸாரம் லப்த்வா கமபி மஹத: ஸ்ரீநிவாஸாம்புராசே
   காலே காலே கநரஸவதீ காளிகேவாநுகம்பே
   வ்யக்தோந்மேஷா ம்ருகபதி கிரௌ விச்வ மாப்யாயயந்தீ
   சீலோபஜ்ஞம் க்ஷரதி பவதீ சீதளம் ஸத்குணேளகம் //

தயா தேவியே! ஸ்ரீநிவாசன் என்ற கடலிலிருந்து சாரமான அம்சத்தை எடுத்து நிறந்த அன்பென்னும் நீராய், சிங்கங்கள் வாழும் திருவேங்கடமலையில் நின்று மேக கூட்ட வரிசைபோல உலகத்தை நீ குளிர செய்கிறாய். அந்த அந்த காலத்தில் குளிர்ந்த வெள்ளத்தை ( கருணையை ) பெருக்கி உன் அடியார்களை காக்கின்றாய்-என்னே உன் தயை!

                                                                                  ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. பேசுவார் எவ்வளவு பேசுவர், அவ்வளவே;
    வாசமலர்த்துழாய் மாலையான்-தேசுடைய
    சக்கிரத்தான்; சங்கினான்; சார்ங்கத்தான்; பொங்கரவ
    வக்கரனை கொன்றான் வடிவு.

பேசிகிறவர்களுடைய பேச்சுக்கு வரம்பு உண்டு. ஆனால் திருவேங்கடத்தானுடைய குணங்களுக்கு அளவே கிடையாது. மனம் மிகுந்த திருத்துழாய் மாலையை அணிந்தவன்- ஒளிவீசும் சங்கு, சக்கிரம் ஏந்தியவன்- சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்- அசுரர்களை வதைத்தவன்- இப்பேற்ப்பட்ட என் பெருமானின் குணங்களை வர்ணிக்க முடியாது.

                                                          மூன்றாம் திருவந்தாதி

2. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய  ரசநா கேளி ரஸிக:
    விமுத்யேக த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
    இதி த்வய்யாயத்தம் த்விதய முபதீ க்ருத்ய கருணே
    விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: /ஸ்துதி பதம் //

தயையே! உலகத்தின் பிறப்பு, இறப்பு, அழிவு-எல்லாவற்றையும் தன் லீலகளாக செய்பவன், தன் மீது பக்தியுடையவர்களுக்கு மொக்ஷத்திற்கு ஒரே வாயிலாக நிற்பவன்-ஆகிய இந்த இரண்டிற்கும் காரணமாயிருப்பவளான உன்னை பரிசுத்தமான திருவேங்கடத்தான் நீயா இதன் காரணமாக-வேதவாக்குகள் உன் நாயகனை புகழ்வது-உன்னையே சாரும்.

                                                                                   ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

3.உயற்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
   மயர்வுஅற மதிநிலம் அருளினன் யவன்? அவன்
   அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன்
   துயர் அறு சுடர்- அடி தொழுது என் மனனே.

வேங்கடநாதனை சரணாகதி அடைவதுதான் -சாச்வதமான மறு பிறவியில்லாத பரம பதத்தை அடைய ஒரே மார்க்கம் என்கிறார்-நம்மாழ்வார்
 என் மனமே! தேவர்கள், மற்றோறுடைய மேன்மையான குணங்கள் முழுவதும் இல்லை என்று சொல்லலாம் படி- மேன் மேலும் உயர்ந்து கொண்டே போகும் நற்குணங்கள் உடையவன் எவனோ-அவன் என்னிடத்தில் உள்ள அறிவின்மை யாவும் நிங்க-பக்தியின் நிலையை அடைந்த அறிவை தந்தான். அந்த அறிவை தந்தவன் எவனோ-அவன் மறதி என்பது இல்லாத நித்ய சூரிகளுக்கு தலைவன். அந்த நித்ய சூரிகளுக்கு தலைவன் எவனோ அவனுடைய திருவடிகள் எல்லா துயர்களையும் நீக்குகின்றன-அந்த ஒளிபொருந்திய திருவடிகளை சரண் புகுந்து பிறவி பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் மனமே!
                                                                                              நம்மாழ்வார்-திருவாய்மொழி.

3. அநுபவிது மகௌகம் நால மாகாமிகால:
    ப்ரசமயிது மசேஷம் நிஷ்க்ரியாபிர் சக்யம்
    ஸவயமிதி ஹி தயே த்வம் ஸ்வீக்ருத ஸ்ரீனிவாஸா
    சிதிலித பவபீதி: ச்ரேயஸே  ஜாயஸே : //

தயாதேவியே! என்னுடைய பாபக்கூட்டங்களை முழுவதுமாக அநுபவிப்பதற்கு வருங்காலம் போதாது. ப்ராயசித்தங்களாலும் ஒழிக்கமுடியாதுஇதை கருதிதானே நீ ஸ்ரீனிவாஸனை
வஸப்படுத்திக்கொண்டு எங்களுடைய ஸம்ஸார பயத்தை நீக்கி எங்களை திருவேங்கடமுடையானின் திருவடிகளில் சேர்க்கின்றாயே! உன் கருணையே என்னவென்று சொல்ல.

                                                                              ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

சேதநர்கள்:
யாராயிருந்தாலும்- அது பணக்காரனோ ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ-எல்லோருக்கும் பயம் என்பது உடலோடு ஒட்டிக்கொண்டே இருக்கும். இதை போக்க ஒரே மருந்து-ஸ்ரீநிவாஸனுடைய திருவடிகளே. அதை இருக்கமாக பற்றிவிட்டால் இந்த பயம் நம்மிடமிருந்து நீங்கிவிடும்- தர்மத்தின்பால் கொண்டு  சேர்க்கும்- முடிவில் முக்தி தரும்.

R.Jagannathan.

No comments:

Post a Comment