Thursday, December 9, 2010

திருவேங்கடமும், திருவேங்கடநாதனும்- 6


திருவேங்கடமும், திருவேங்கடநாதனும்- 6

1. சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
     என் நாவில் இங்கவி யான் ஒருவருக்கும் கொடிக்கிலேன்
     தென்னா தேனா என்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    அன் ஆனை, என் அப்பன்,எம்பெருமான் உளனாகவே //

பலன்களையே நாடும் உங்களுக்கு நான் இந்த நலத்தை சொன்னால் விரோதமாக இருக்கும். ஆனாலும் உங்கள் கேட்டினை பொறுக்கமாட்டாமல் சொல்லியே தீறுவேன். கேளுங்கள். தேனை குடித்த வண்டுகள் மகிழ்ச்சியால் தென்னா, தேனா என்று ஒலிக்கும் திருமலையில் இருப்பவன் என் திருவேங்கட நாதன். அவன் யானை போன்றவன். தந்தையை போல இதம் செய்பவன். அவனே என் கவிதைக்கு பொருளாய் இருந்து என் நாவிலிருந்து வரும் கவிதைகளை அவனுக்கின்றி வேறு எவருக்கும் கொடுக்கமாட்டே. அதற்கு எனக்கு சக்தியும் கிடையாது.

                                                                           நம்மாழ்வார்- திருவாய் மொழி.

1. அபாம் பத்யு: சத்ரு நஸஹந முநேர் தர்ம நிகளம்
    க்ருபே காகஸ்யைகம் ஹிதமிதி ஹிநஸ்தி ஸ்ம நயநம்
    விளிந ஸ்வாதந்த்ரியோ வ்ருஷகிரி பதிஸ் த்வத் விஹ்ருதிபி:
   திசத்யேவம் தேவோ ஜநித ஸுகதிம் தண்டந கதிம் //

தயாதேவியே! உன் கருணையினால் திருவேங்கடநாதன் சேதநர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை நன்மையிலேயே முடித்துவிடுகிறாய்! ஸமுத்ர ராஜன்-ராமன் அழைத்தபோது வராத்தால் பகவான் தண்டிக்க முற்ப்பட்டபோது அது அவனின் பகைவனை கொல்ல முடிந்தது. காகம் தன் ஒரு கண்ணோடு  தப்பித்தான். அதுபோல பரசுராமன் புண்ணியங்களை விலக்கி ஸ்வர்க்கம் போக உதவியது.

2. பூசும் சாந்துஎன் நெஞ்சமே;
     புனையும் கண்ணி எனதுடைய
   வாசகம் கெய் மாலையே:
     வன்பட்டு அஃதே;
   தேசம் ஆன அணிகலனும்
     எங்கைகூப்புச் செய்கையே
   ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த
    எந்தை ஏகமூர்த்திக்கே //

எம்பெருமானுக்கு இணையே கிடையாது. அதனால் அவன் ஏகமூர்த்தி என்று அழைக்கிறோம். அவனே சர்வேச்வரன், அவனே பிரளய காலத்தில் உலகை உண்டு பிறகு உமிழ்ந்து நிலை நிறுத்தியவன். என் தந்தையான அவனுக்கு பூசுகிற சந்தனம் எனது நெஞ்சம். சூட்டுகின்ற மாலைகள் என் பாமாலைகள். உயர்ந்த பொன்னாடையும் அவன் பாமலைகளின் சொற்களே. அணியப்படுகின்ற ஆபரணங்கள் அடியேன் அவன் பால் கை தொழுது நிற்கின்ற என் வணக்கமே.

                                                                        நம்மாழ்வார்- திருவாய்மொழி.

2. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
    த்ருத விபுதே புதேஷு விததாத்மா துரே மதுரே
    வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
    பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம் //

மென்மையான உள்ளம் உடையவளே! பக்தர்களை காப்பவளே! ஆசையை வென்றவர்களுக்கு நன்மை செய்பவளே! அறிஞர்களை ஆதரிப்பவளே! திருவேங்கடநாதனுக்கு பிரியமானவளே, மங்களங்களுக்கு உறைவிடமானவளே! தயாதேவியே! ஸம்ஸாரத்தை வேறருக்கும் உன் பெரிய அலையை என்மீது வீசுவாயாக.

3. உலகம் உண்ட பெருவாயா!
    உவப்புஇல் கீர்த்தி அம்மானே!
    நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி
    நெடியாய்! அடியேன் ஆருயிறே!
    திலதம் உலகுக்கு ஆய்நின்ற
    திருவேங்கடத்து எம் பெருமானே!
   குலதொல் அடியேன் உனபாதம்
   கூடும் ஆறு கூறாயே!.

ப்ரளய காலத்தில் உலகமெல்லாம் உண்ட பெருவாயா, அழிவே அற்ற பரம்பொருளே! எப்போதும் சுடர்விட்டு ப்ரகாசிக்கும் ஆரமுதே!அடியனுக்கு அரிய உயிராயிருப்பவனே. உலகத்திற்கெல்லாம் சிகரம் போன்று இருக்கும் திருவேங்கடமலையில் வீற்றிருக்கும் எம்பெருமானே! தொன்று தொட்டே உன் திருவடிக்கே தொண்டு செய்யும் குலத்தை சார்ந்தவனான எனக்கு உன்னுடைய திருவடியை சேரும் வழியை கூறி அருளவேண்டும்.

3. த்வயா த்ருஷ்டஸ் துஷ்டிம் பஜதி பரமேஷ்டி நிஜபதே
    வஹந் மூர்த்தீரஷ்டௌ விஹரதி ம்ருடாநீ பரிப்ருட /
    பிபர்த்தி ஸ்வராஜ்யம் வ்ருஷ சிகரி ச்ருங்காரி கருணே
    சுநாஸீரோ தேவாஸுர ஸமர நாஸீர ஸுபட: //

திருவேங்கட மலையில் உல்லாஸ புருஷனாக விளங்கும் ஸ்ரீனிவாஸனுடைய தயா தேவியே! உன் அநுக்ரஹத்தால் ப்ரம்ம தேவன் ப்ரஜாபதி என்ற ஸ்தானத்தில் இருக்கிறான். பரமசிவனோ எட்டு முகங்களோடு லீலை புரிகிறான். உன் தயவால் இந்திரன்- தேவர்களுக்கு அரசனாய் பரிபாலனம் செய்கின்றான். உன் தயையை என்ன வென்று சொல்ல.
                                                                             ஸ்வாமி தேசிகன்- த்யா சதகம்.

சேதநர்கள்:

அடியவர்களான சேதநர்கள் திருவேங்கடநாதனின் கருணையால் பல இன்னல்களை கடக்கின்றார்கள். அதன் நன்றி மறவாமல் வருஷந்தோறும் உன் தரிசனத்திற்காக கீழிருந்து உன் வாசல் வரை நடந்தே வந்து உன்னை கண்டு ஆநந்த வெள்ளத்தில் மூழ்கி களைப்பையெல்லாம் ஒரு நொடியில் மறந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். என்னே உன் கருணை.

2 comments:

  1. "உலகம் உண்ட பெருவாயா" பாட்டில் "நிலவும் சுடர்சூழ் " என்ற பதத்திற்கு "சந்திர சூரியர்களால் சூழப்பட்ட" என்று ஏன் சொல்லக்கூடாது? எந்த பதாசிரியரும் இவ்வாறு உரை எழுதாததின் காரணம் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை!

    ReplyDelete
  2. அதுமட்டுமல்ல, இதற்கு "சந்திர சூரியர்களை சூழ்ந்திருக்கும் ஒளிக்கு மூர்த்தியாக (காரணகர்த்தாவாக) விளங்குபவன்" என்றும் கொள்ளலாமே?

    ReplyDelete