In this crowded world, we are moving fast and face lot of tension. We stop little while and look the spritual side. Spirituality will bring the needed stamina and re-energize us to raise with renewed vigour. We bring you from Hindu Sanadhana Dharma few important topics to help you.
Monday, April 30, 2012
ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 4
ப்ரப்த்தி செய்துகொண்ட ஜீவன்
ஜீவன் சரீரத்தை விட்டு வெளியேறியதும் இவனுடைய ஸ்தூல் சரீரம்- அதாவது பதினொன்று த்வாரங்கள் கொன்டது--ப்ரஹ்மரந்தரம் அதையும் சேர்த்து -இது தலையின் வாசல்- அதை திறந்துகொண்டு ப்ரப்ந்நனை புறப்பட செய்கிறான் பகவான்-ஸ்தூல சரீரம் கழிகிறது- ஸூக்ஷ்ம சரீரம் ஆரம்பமாகிறது. அதை வைகுண்டம் போகும் பாதையில் அர்ச்சாதி மார்க்கம் வழியாக அழைத்து செல்லுகிறான்.
இவன் ஸ்தூல சரீரத்தில் இருந்தபோது இவனிடம் பெற்றுகொண்ட காணிக்கைகளால் மகிழ்ந்த தேவர்கள் இவனை வணங்கி ஸேவித்து செல்லுகிறார்கள். இவனை வழி நடத்தி செல்பவர்கள் ஆதிவாஹீகள்- அவர்களில் முதலில் வருபவன்- அக்னி தேவன். இவனுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து, ஆடல் பாடல்களுடன் அவன் எல்லை வரை கொண்டு சேர்கிறான்.
பின் சுக்ல, உத்தராயண தேவதைகள் வரிசையாக நின்றுகொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அமாநவன்- மின்னலுக்கு தேவதை- இவனை அழைத்துசென்று-வழியில் இந்திரன், வருணன் இவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ப்ரக்ருதி மண்டலத்தை கடந்து விரஜா நதிக்கரைக்கு வருகிறான்.
( அன்பர்களை! இந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தை நினைவில் வைத்துகொள்ளுமாறு அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஸ்ரீரங்கம் வேறு-வைகுண்டம் வேறல்ல-காவேரி விரஜா தேயம், வைகுண்டம் ரங்கமந்திரம் என்பார்கள் ) விரஜா நதி எப்போதும் ஒரே விதமாக பகவானின் காலடியில் பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு அமுத ஆறு )
இது இரண்டு விபூதிகளுக்கும் எல்லை. ஸம்ஸாரத்திற்கு முடிவு எல்லையாகவும் பரமபதத்திற்கு தொடக்க எல்லையாகவும் அமைந்திருக்கிறது.
இந்த நதியை பகவான் ஸங்கல்பித்து தன் மனத்தால் கடக்கிறான் என்பது ச்ருதி சொல்லுகிறது. அதில் மூழ்கி எழுந்தவுடம் அவனுடைய ஸூக்ஷ்ம சரீரம் விலகி- அமாநவன் இவனை தடவிக்கொடுக்க முக்தன் ஆகின்றான். இப்போது இவனும் பகவானும் ஒரே லோகத்தில் இருக்கிறார்கள்-அதாவது வைகுண்ட லோகத்தில்.
இனி வைகுண்ட லோகத்தில் இவனுக்கு நடக்கும் மரியாதைகளை பார்க்கலாம்.
அங்கே நித்ய சூரிகள் பகவானிடம் முன் நின்று கை கூப்பி அருளப்பாடு பாடுகிறார்கள். சிலர் பகவானின் திவ்ய மங்கள ரூபத்தை இமை கொட்டாது சேவித்துகொண்டே இருக்கிறார்கள். பகவான் ஐந்நூறு அப்ஸரஸ்குளை இவனை வரவேற்று அழைத்துவரும்படி செய்கிறான். அவர்கள் மாலைகள், மை, வாசனை பொடி, உடைகள் போன்ற உபசார பொருட்களுடன் இவனை அழித்து செல்கிறார்கள். அவனுக்கு வலம்புரி சங்கு, திருச்சின்னம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
நித்ய சூரிகள் இவனுக்கு சிறந்த அலங்காரங்களை செய்வித்து திவ்யம் என்ற மரத்தின் வழியாக, ஸாலஜ்யம் என்ற ஆஸ்தான மண்டபத்தை அடைந்து, பின் இந்திரன், ப்ரஜாபதி என்ற த்வாரபாலகர்களை அணுகுகிறான்.அவர்கள் இன்முகத்தோடு இவனை திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பகவானை காண அநுமதிக்கிறார்கள்.
அங்கே சபையின் அதிகாரிகளான குமுதர், சண்டர் இவர்கள் இவனை கண்குளிர கடாக்ஷிக்கிறார்கள். விஷ்வக்சேநர் இவனுக்கு அருளப்பாடு சொல்லி கைங்க்கர்யத்தில் கல்ந்து கொள்ள சொல்லுகிறார். அவனும் பெரிய திருவடியை சேவித்து, பூர்வாச்சாரியர்களை அணுகி நன்றியுடன் வணங்கி எம்பெருமானது திவ்ய சிம்ஹாஸனத்தை அணுகுகிறான்
அங்கே ஆதிசேஷன் மீது எம்பெருமானையும், பிராட்டிமார்களையும் தரிசனம் செய்கிறான்.
என்ன ஆனந்தம்! கண்களில் பாஷ்பவாரி சொறிகின்றது பகவானோ-அகில ஹேய கல்யாணகதாந ஸ்வேதர ஸம்ஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப: ! ஸ்வாமிமதாநுரூப ஏகரூப அசிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய ஓளஜ்வல்ய ஸொந்த்தர்ய ஸொகந்த்ய ஸொகுமார்ய லாவந்ய யொவனாதி அநந்தகுணநிதி திவ்யரூப ! ஸ்வாபிவிக அநவதிக அதிசய ஜ்ஞாந பல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: ஸொசீல்ய வாத்ஸல்ய மார்த்தவ ஆர்ஜ்ஜவ ஸொஹார்த்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர்ய ஓளதார்ய சாதுர்ய ஸ்த்தைர்ய தைர்ய சொர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞாதி அஸங்கேய கல்யாண குண களொக மஹார்ணவ //
ஸ்வோசித விவித விசித்ராநந்த ஆச்சர்ய ப்ஹித்ய நிரவத்ய நிரதிசய ஸுகந்த நிரதிசய ஸுகஸ்பர்ச நிரதிசய ஓஓள்ஜ்வல்ய கிரீட மகுடசூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தா தாமோதர பந்தந பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண:/
ஸ்வாநுரூபா சிந்த்ய சக்தி சங்க்க சக்ர கதா அஸி சார்ங்காதி அஸங்க்யேய நித்ய நிரவத்ய கல்யாண திவ்யாயுத:/
ஸ்வாபிமத நித்ய நிரவத்ய அநுரூப வரூப ரூபமுண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிகாதிசய அஸங்யேய கல்யாண குணகண ஸ்ரீவல்லப : /
கண்ணா உன்னை காண எத்தனை ஜன்மங்கள் கழித்தேன். நான் செய்த பாபங்களுக்காக புழுவாய் பிறந்தேன். நாயாய் அலைந்தேன், பலபிறவிகள் கடந்து மாநிட பிறவி பெற்றேன், மறுபடியும் பிறவியில் விழப்போன என்னை ஆசார்யன் மூலம் சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக உன் முன்ணே நிற்க வைத்து கண்குளிர காண வைத்து உன் கல்யாண குணங்களான-
ஸொசீல்யம் = பெரியவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றர கலப்பது
வாத்ஸல்யம்= பசு எப்படி கன்றுடன் தாயன்பு காட்டுகிறதோ அப்படி
மார்த்வம் = தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்குவது
ஸொஹார்த்தம் = எப்போதும் நன்மையே சிந்திப்பது
ஸாம்யம் = ஜாதி மத பேதம் காட்டாது எல்லோருக்கும் ஆச்ரியனாக இருப்பது
காருண்யம் = துக்கமடைந்திருப்பவரை பார்த்து இரக்கப்படல்
மாதுர்யம் = தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருப்பது
காம்பீர்யம் = ஆச்ரிதற்கு செய்யும் பேருதவிகள் வெளியில் தெரியாமல் அருள் பாலிப்பது
ஓள்தார்யம் = கைமாறு கருதாது வேண்டியவற்றை அள்ளி கொடுப்பது.
சாதுர்யம் = ப்ரதிகூலரையும் அநுகூலராக்கும் சாமர்த்யம்
ஸ்தைர்யம் = அடியார்களை ஒருபோதும் கைவிடாதவன்
தைர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் வென்று தன் பக்கம் இழுத்தல்
சௌர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் தான் ஒருவனே சமாளிப்பது
பராகரமம் = போர்களத்தில் எதிரிகளை அழிப்பது
இப்படி அநந்த கோடி கல்யாண குணங்களை அடியவன் நேரில் காண வைத்து
கிரீடம் = ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, தொப்பாரம், துராய் ஆகிய மூன்று முடிகள் கொண்டது
மகர குண்டலம்= மகரவடிவான தோடுகள்
க்ரைவேயக = திருகழுத்தில் சாத்துபவை
ஹார = திருமார்பில் அணியும் முத்துவடங்கள்
கேயூர = தோள்வளைகள்
கடக் = முன் கையில் சாத்தும் வளையள்கள்
ஸ்ரீவத்ஸ = திருமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிப்பூண்
முக்தாதாம = ஏகாவளி த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள்
உதரப்ந்தந= - திருவாயிறுபட்டை
பீதாமபர = பட்டாடை
காஞ்சீகுண = மேல் ப்ட்டாடை
நூபுரம் = திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி
இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். உனது அருகில் த்வம், சௌலப்யம், உபாயத்வம், பிரயோஜனம், காருண்யம், பொறுமை, சாந்தம், அநுகூலமாயிருத்தல் போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மி அதி அத்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு. எம்பெருமானுக்கு ஏற்ற ஸ்வரூபம், திருமேனி, அவனோடு ஒத்து இருப்பது, அட்யார்களை ரக்ஷித்து காப்பவள்.
இப்படி பரமபதநாதனை ஸேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான். அவரிடம் அவர் திருவடிகளை யாஜிக்கிறான். பெருமாளும் அபார கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைத்து பூமாலை அணிவிக்கிறான். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வந்து அமரும் உகப்பில் இவனை தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறான்.
இந்த ஆனந்தத்தை அநுபவிக்கும் இவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறூபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அநுபவித்துக்கொண்டிருக்கிறான்.
என்னே! பரந்யாஸத்தின் சிறப்பு! என்னே! பகவான் காட்டிய சுலமான வழி.
வாருங்கள் நாம் ஆசாரியரிடம் செல்வோம், இனி கால தாமதம் வேண்டாம்.
ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே கோபால தேசிக மஹாதேசிகாய நம:
ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே //
மாடபூசி ஜகன்னாதன்.
Monday, April 23, 2012
ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3
Saturday, April 21, 2012
சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல் மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26. 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும். 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது. 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான். 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது. 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது. 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது. 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல். 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக. 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது. 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து. 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும். 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல். 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன். 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல். 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல். 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல். 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல். 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல். 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல். 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை. 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி- மாடபூசி ஜகந்நாதன்
சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல்
மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான்.
முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26.
1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும்.
2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது.
3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான்.
4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது.
5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது.
6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது.
7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல்.
8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக.
9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது.
10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல்.
11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து.
12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும்.
13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல்.
14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல்.
15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல்.
17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை.
18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன்.
19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல்.
20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல்.
21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல்.
22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல்.
23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல்.
24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல்.
25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை.
26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல்
( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் )
நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி-
மாடபூசி ஜகந்நாதன்

Tuesday, April 17, 2012
ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள் ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை
ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள்
ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை
சில காலங்ககளுக்கு முன்பு அடியேனுடைய பிளாக்கில் மரணத்திற்கு பிறகு ஜீவன் எங்கே போகிறது என்பதை விளக்கியிருந்தேன். அவை பொதுவானவை. அதற்கு பலர் பாராட்டி எனக்கு எழுதியிருந்தார்கள். 50-வயதை தாண்டிய பல பெரியவர்கள்- தனக்கு அடிக்கடி மரண பயம் வந்துகொண்டே இருக்கிறது- இதற்கு என்ன செய்யலாம் என்று எனக்கு எழுதி இருந்தார்கள். இதே நிலையில் தான் நானும் சில வருஷங்களுக்கு முன் இருந்தேன். ஆனால் நம் பௌண்டரீகபுரம் ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிக ஸ்வாமியிடம் பரந்யாஸம் செய்துகொண்ட பின் அந்த பயம் போய்விட்டது. இது எதனால் என்று சற்று பார்க்கலாம்.
சாதாரணமாக பெருமாள் கோயிலில் கர்பகிரஹத்திற்கு போகும் முன் நாம் 8-அல்லது 9- படிகளை தாண்டுகிறோம். பிறகு பெருமாளின் தெய்வ மங்கள அர்ச்சா மூர்த்தியை கண் குளிர சேவிக்கிறோம்.ஸ்வாமி தேசிகன் சில்லரை ரஹஸ்யங்கள் என்ற தலைப்பிலும் பரம பத சோபானம் என்ற ஸ்லோகங்களின் மூலம் நம்க்கு ஆசாரியன் மூலம் பகவானிடம் சரணாகதி செய்து கொண்ட ஜீவன் அடையும் உபகாரங்களை பற்றி விளக்கியிருக்கிறார்கள்.
அடியேனும் பல உபதேசங்களை கேட்டு இருக்கிறேன். அவைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை. மேற்படி 8- அல்லது 9- படிகள் மோக்ஷமாகிர உயர்ந்த ஸ்தானத்திற்கு பரந்யாஸம் செய்துகொண்ட ஜீவனுக்கு பகவான் செய்யும் உப்காரங்கள்.
படி-1
1. நமக்கு ஆசாரியரிடம் சென்று உபதேசம் செய்துகொள்ள எண்ணத்தை தோற்றுவித்தல்.
2. அதற்கு தகுதி பெற சிஷ்யன் செய்ய வேண்டிய கடமைகள்.
3. ஆசாரிய உபதேசத்தால் சிஷ்யன் பெறும் அறிவு.
4. சரணாகதியின் அங்கங்கள் திருமந்திர விளக்கம்
படி -2
ஆசாரியரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யன் இப்போது சிந்திக்க ஆரம்பித்தல்.
படி-3
சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்.
படி-4
பழைய நிலை கழிதல்
படி -5
ப்ரப்த்தியை பற்றி விவரமாக அறிந்துகொள்ளுதல். சம்ஸார பந்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுதல், ஜபம் செய்தல்.
படி-6.
இங்கிருக்கும் நாள்வரை சிஷ்யன் செய்யவேண்டியது.
படி-7
அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்.
படி-8
ஸ்ரீவைகுண்டத்தை அடைதல்.
படி- 9
பெருமாளை நேருக்கு நேராக காணுதல்.
இந்த 9- படிகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்
படி-1
ஆசாரியரிடம் உபதேசம்.
இந்த ஜீவன் தாயின் கர்ப்ப வாசத்தில் இருக்கும்போது அநுபவிக்கும் வேதனை சொல்லமுடியாது. உடலை சுருக்கிக்கொண்டு பல மாதம் அவஸ்தை படுகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாஸனை நன்றாக தெரியும். மல மூத்ராதிகளில் உழன்று நரக வேதனை அநுபவிக்கிறான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனை, தான் அநுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் பகவான் அப்போது மறக்கடித்துவிடுகிறான்.
பால்ய பருவம், கௌமார பருவம் இவைகளை முறையே இனிதாக கழிக்கிறான். அப்போது ஏற்படும் பாவ
புண்யங்களை பகவான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.யௌவனப்பருவம் ஆரம்பமாகிறது இந்த ஜீவனுக்கு. அப்போது அவனுக்கு உலகம் புறிய ஆரம்பிக்கிறது. கூடவே பகவான் காம, க்ரோத, மத, மாச்சர்யம், தமோ குணம், ரஜோகுணம்,சாத்வீகம், ஆசை, மோஹம், விருப்பு, வெறுப்பு, த்வேஷம் இவைகள் அனைத்தையும் அவனுக்கு காண்பிக்கிறார்.இதிலிருந்து தான் அவனது பாவ, புண்ய மூட்டைகள் தொடங்குகிறது.
இந்த வயதில் தான் அவனது சம்ஸார வாழ்க்கையும் தொடங்குகிறது. நல்ல வளமான நிலம்-பாவ பயிர்களை நடுவதற்கு. இது தொடர்ந்துகொண்டே அவனை 50-வயதுவரையில் இழுத்துக்கொண்டே செல்கிறது. அவன் சேர்க்கும் பாவங்கள் இரும்பு விலங்கு, சேர்க்கும் புண்யங்கள் தங்க விலங்கு. இதை இவன் அறியான். திருந்தி வர பல சந்தர்ப்பங்களை பகவான் ஏற்படுத்தி கொடுக்கிறான்- ஆனால் இந்த ஜீவன் மயக்கத்திலேயே இருப்பதால் அவைகளை பயன்படுத்திகொள்ள தவறுகிறான்.
அடிபட்டு, அடிபட்டு கடைசியில் பகவானிடம் சென்று இறைஞ்சுகிறான்.ஆனால் இன்னும் ஞானம் வரவில்லை. அவன் கேட்பதோ சில்லரை விஷயங்கள்- அழ்கான மனைவி, நல்ல உத்தியோகம், கை நிறைய காசு இப்படியாக் எல்லாமே லௌகீக விஷயங்கள். சந்தோஷம் வந்தால் ஆனந்தம், துக்கம் வந்தால் தளர்வு, உபாதைகள், வியாதிகள் இப்படியாக அநுபவிக்கிறான். அப்போது தான் அவன் பகவானை சிந்திக்க ஆரம்பிக்கிறான்-இப்படி மாற்றியும் சொல்லலாம்- பகவான் அவன் பேரில் இரக்கம் கொண்டு இந்த ஜீவனை கடைதேற்ற சங்கல்பித்துக்கொள்கிறான்.
முதலில் இவனுக்கு ஆகார்ய சம்பந்தம் கிடைக்க வழி செய்கிறான். தினம் அவன் கோயிலுக்கு செல்லும்போது பல பெரியவர்கள் சொல்லும் உபந்யாஸங்களை கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்க முயலுகிறான். தான் எந்த பரம்பரையிலிருந்து வந்தவன் என்று அறிகிறான். அதை சார்ந்த பரம்பரையின் குருவை தேடுகிறான். தயக்கதுடனேயே அவரை அணுகுகிறான். அவன் அதிர்ஷ்டம்- அவர் நல்ல ஆசாரியர்-வேதங்களை கற்றுணர்ந்த பெரியவர், ஆசார சீலர், நல்ல பண்டிதர், தாராள மனசு. தவறு செய்பவர்களை திருத்தி தன் வசம் இழுப்பவர்- இவரை காண்பித்ததே பகவான் இந்த ஜீவனுக்கு செய்த பேருபகாரம்.
படி-2
ஆசாரியரிடம் உபதேசம் பெற்று சிந்தித்தல்
அவரிடம் அடிக்கடி போகிறான்- அவர் உபதேசங்களை கேட்கிறான்.புராண, இதிஹாஸங்கள்
புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான்- ராம கிருஷ்ணாதி கதைகளை கேட்கிறான். ஆசாரம், அநுஷ்டானம் முதலியவைகளை கேட்டு தெரிந்து கடைபிடிக்க ஆரம்பிக்கிறான்- இதுவும் ப்கவத் சம்பந்த்தாலேயே- அவனுக்கு ஞானம் வளர ஆரம்பிக்கிறது. ஆனால் பக்குவம் வரவில்லை.
தன்னுடைய பழங்கால நடவடிக்கை எல்லாம் அவனுக்கு வருகிறது .செய்த பாபங்களோ அநேகம். செய்த புண்யங்களோ சிலவே. இவைகளை நினைத்து மனம் தளர்கிறான்.அதனால் அநுபவித்த கஷ்டங்கள் எத்தனையோ! நஷ்டங்கள் ஏராளம்.பல லக்ஷக்கணாக்கான மக்களோடு தானும் ஒருவனாகி ஒரு மூலையில் உட்கார்ந்து சிந்திக்கும்போது அவனுக்கு நல்ல காலம் வருவதை-பகவானின் கரூணை உள்ளம் இனி இவனை கரையேற்ற வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கிறான். ஆசார்ய சம்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறான்.
தனக்கு நாராயணனை தவிர வேறு கதியில்லை என்று தனக்குள்ளே சங்கல்பித்துக்கொள்கிறான். இனி தான் பழைய வழிக்கு திரும்பமாட்டேன்.ஹரி என்ற திரு நாமம் அவனுக்குள்ளே ரீங்காரம் இட ஆரம்பித்திருக்கிறது. இனி பழைய நிலையை மறந்து சத் சங்கம், தியானம், காலட்க்ஷேபம், பகவத் ஆராதனம் போன்றவற்றில் இறங்குகிறான். விவேகம் பிறக்கிறது. ரஜோ, தாமஸ குணங்கள் விலகி, ஸத்வ குணம் மேலோங்க ஆரம்பிக்கிறது. சாத்வீகம் வளர்கிறது. இவையெல்லாம் ஆசார்ய சம்பந்தத்தினாலும் பகவானின் கருணையாலும் என்று உணர்கிறான்.
படி-3
சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்
அவனுடைய் அசுர தன்மை விலக ஆரம்பித்திருக்கிறது. முன்பு வேகம், வேகம், பரபரப்பு, எதிலும் அவசரம் போன்ற குணங்கள் மாற தொடங்கி, நிதானம், பொறுமை மெதுவாக பேசும் தன்மை போன்ற சாத்வீக குணங்கள் வளர்கின்றன. அதிக சந்தோஷம், அதிக துக்கம் என்று இல்லாம்ல் பழைய நிலையை முழுதுமாக மறக்கிறான். பார்ப்பவர்கள் இவனுடைய மாறுதல்களை கண்கூடாக பார்க்கிறார்கள்.
பகவானிடமனது லயிக்க ஆரம்பிக்கிறது. சினிமா மோகம் மறைகிறது. ஆசையை தூண்டும் கதைகள்.நாவலகள் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டான். புராண இதிஹாஸங்களை படிக்க தொடங்குகிறான். ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு, ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகங்க்ள் என்று ஆழ்வார்களின் ஸூக்திகளும், ஆசார்யர்களின் அறிவுரைகளும் அவன் மனதில் ப்திய ஆரம்பிக்கிறது.
ஆசாரமே இன்னது என்று தெரியாத காலம் போய் 12- திருமண் விசேஷ காலங்களிலும், ஆசாரியரை தரிசிக்கும் போதும் தரிக்கிறான். வெளியே சென்று வந்ததும், அல்ப சங்கை சமயத்திலும் கை கால்களை அலம்பி உள்ளே நுழைகிறான். முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகி விட்டது. மேஜை சாப்பாடு போய் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறான்.
பித்ருக்களின் தர்ப்பணங்களை ஒழுங்காக செய்ய தொடங்குகிறான். அமாவாசை தர்ப்பணம் செய்யாதவன் தவறாமல் செய்ய தொடங்குகிறான். எதற்கும் எதிர்வாதம், குதற்க அர்த்தம் கண்டுபிடிப்பவன், அமைதியாக சொல்வதை காது கொடுத்து கேட்கிறான்.
இவனுடைய மாறுதல்களை மேலும் பார்ப்போம்.கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவை தவிர்கிறான். தன்னுடைய குருபரம்பரையை தெரிந்து கொண்டு அவர்கள் தனியங்களை தினமும் சொல்ல தொடங்குகிறான். தந்தம் சுகங்களே துக்கத்தில் கொண்டுபோய்விடுகின்றன என்று அறிகிறான். அது வெறுப்புக்குறியது என்று உணர்கிறான்
இதனால் மற்ற பலன்களில் ஆசையில்லாமல் மனதை பகவானிடம் திருப்புகிறான்.இவனுக்கு ஜீவாத்மா, பரமாத்மா, சரீரம் இவைகளைபற்றிய விவேகம் ஏற்பட்டு, பகவானுக்கு தான் அடிமை என்று உணர்கிறான், பழைய நிலையை உணர்ந்து பாபங்களை செய்யாமல் விலகி நிற்கிறான். ஸம்ஸார பந்தத்திலிருந்து மனதை திருப்பி பகவானிடம் லயிக்க ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் பகவான் ஆசார்ய சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொடுத்த நன்மையால் தான்.
R.Jagannathan.
</b>

Sunday, March 25, 2012
ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்
நம் ஸ்வாமிகள்
ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம்:
ஸ்ரீமதே கோபாலதேசிக மஹாதேசிகாய நம:
ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்
சமீபத்தில் நம் ஆசார்யன் ஸ்ரீமத் கோபாலதேசிக மஹா தேசிகஸ்வாமி திருநாட்டை அலங்கரித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனது மனது மிகவும் சஞ்சலப்பட்டது. என் மனம் பின்னோக்கி 1990 ம் வருஷம் நினைவுக்கு வந்தது. 1990 ம் வருஷம் மே மாதம் தான் நான் முதன் முதலில் ஸ்வாமியை தெண்ட்ன் சமர்ப்பிக்க சென்றேன். என் தாயார் தான் என்னை அழைத்து சென்றார்.கூடவே என் மனைவியும் என் தம்பி ஸ்ரீதானும் வந்தார்கள். என் சஷ்டி அப்த பூர்த்தி முடிந்த கையோடு அவரை தரிசிக்க சென்றோம்
அதுவரையில் நான் லௌகீக வாழ்க்கையில் கால்த்தை போக்கிவிட்டேன். வெளி நாடு, உள் நாடு என்று வேலக்காக முழு நேரத்தையும் செலவழித்து வந்தேன். எனக்கு அதுவரையில் ஆசாரம், அநுஷ்டானம் எதுவும் தெரியாது. என் மனைவி ஓரளவு அநுஷ்டித்து வந்தாள்- அது அவள் சிறுவயதிலிருந்தேகற்றுக்கொண்டது.
என் தாயாரை ஸ்வாமிக்கு நன்றாக தெரியும். திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிக்கு பூர்வாஸ்ரமத்தில் தமையன் முறையாகும் என் தாயார். என் தாயாரின் குடும்பம் நல்ல வைதிக குடும்பம் என்பதும் ஸ்வாமிக்கு நன்கு தெரியும். என் தம்பியையும் அவருக்கு நன்றாக தெரியும்-முசிரியில் பழக்கம்.
ஸ்வாமிகள் என் தாயாரை என்னைப்பற்றி கேட்டார். நான் மலேஷியாவில் வேலை பார்த்த முதல் எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள். ஸ்வாமிகள் என்னை பார்த்து- சந்தியாவந்தனம் மூன்று வேளையும் பண்ணுகிறாயா? என்றுகேட்டார். நான் சற்று தயங்கினேன். ஸ்வாமிகள் புரிந்து கொண்டு என் மனைவியை பார்த்து இனிமேல் காலையில் காபி கொடுக்கும்போது சந்தியாவந்தன்ம் பண்ணிவிட்டு வந்தால் தான் கொடு.
அன்று முதல் இன்று வரை முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகிவிட்டது எவ்வளவு சுலபமாக என்னை திருத்திவிட்டார். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. என்னை அறியாமலேயே அவரிடம் எனக்கு மரியாதை கலந்த பயம், ஒரு ஆகர்ஷண சக்தி அவர்பால் ஏற்ப்பட்டது.
அதன் பின் என் தாயார் காலமாகிவிட்டார், 1994-ல் என் தகப்பனாரும் காலமாகிவிட்டார். அதுவரையில் நான் முழு மூச்சில் வேலை பார்த்துவிட்டு இனி நாம் ஆன்மீகத்தில் மனதை செலுத்தவேண்டும். என்று சங்கல்பம் செய்துகொண்டேன். என் மனைவிக்கோ சிறு வயது முதல் அரங்க்ன் மீது தீராத பக்தி. கல்யாணம் ஆகும் வரை தினமும் ரங்கனை சேவிக்காமல் ஒரு நாளும் இருந்த்தில்லை. ஸ்லோகங்கள் எல்லாம் நன்றாக தெரியும்.தவறாமல் தினமும் சொல்லிவிட்டு தான் வேறு காரியம். அவளுக்கு சிலகாலம் ஸ்ரீரங்கத்தில் தங்கி ரங்கனை மறுபடியும் சேவிக்க வேண்டும் என்று ஆசை
இதற்கு தோதாக நான் ஸ்ரீரங்கத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு வைத்திருந்தேன். பந்துக்கள் எல்லோரும் திருச்சியில் இருப்பதால் கடைசியில் அங்கு போய்விடலாம் என்று ஒரு எண்ணம்.
அது வரையில் எனக்கு ஸ்ரீனிவாஸன் தான் கைகண்ட தெய்வம் வேறு எவரையும் பார்த்ததுமில்லை, ஈடுபாடும் இல்லை-என்னை மிக கஷ்டமான நிலையிலிருந்து கை தூக்கிவிட்டவர் திருப்பதி வெங்கடாஜலபதி. எனக்கு அவரிடம் ஆறாத பக்தி. ஆனால் என்னவோ தெரியவில்லை நான் ஸ்ரீரங்கத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்யவேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது. அதற்கு 1995-ல் தான் காலம் கை கூடி வந்தது.
எனக்கு ஸ்ரீனிவாசன் ஒரு விஷயத்தை நன்றாக விளக்கி காட்டினான். தான் வேறு அல்ல, அரங்கன் வேறு அல்ல, பேரருளாளன் வேறு அல்ல ஆகையால் தாரளமாக அரங்கனை சேவி அவன் அருள் உனக்கு கிட்டும் என்று விடை கொடுத்து என்னை ஸ்ரீரங்கத்திற்க்கு அநுப்பிவித்தான். இது 1994 - அக்டோபரில் நடந்தது. 2 வருட காலம் இருக்கலாம் என்று கிளம்பிய அடியேனை 14- வருஷ காலம் அரங்கன் தன்னிடம் இருத்திக்கொண்டுவிட்டான்.
இந்த 14- வருஷ காலம் என் வாழ்க்கையில் பொன்னான காலம். ஸ்வாமியை போய் முதலில் தெண்டன் சம்ர்ப்பித்தேன். விவரங்களை சொன்னேன். ஸ்வாமியும் அநுக்கிரகித்தாயிற்று. அடிகடி ஆச்ரமத்திற்கு வா- காலட்க்ஷேபங்களை கேள் என்று சொன்னார். அதுவரையில் லௌகிகத்தையே கண்ட எனக்கு இது ஒரு திருப்பு முனை.
ஸ்வாமியிடம் சொல்லிவிட்டேனே தவிர எனக்கு உள்ளூர ஒரு பயம்- ஆசாரம் ஒன்றும் அறியாததால் ஸ்வாமியை தெண்டன் சம்ர்பிக்கும் போது ஏதாவது அபசாரம் செய்துவிடிவேனோ என்ற பயம். ஸ்வாமியின் கருணா கடாட்சம், கணிந்த பார்வை, ச்கஜமாக பழகும் போக்கு எல்லாம் என்னுடைய பயத்தை போக்கியது.
அவரை தெண்டன் சமர்ப்பிக்கும் போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த திருமுகத்தில் தான் எத்தனை சாந்தம்-எளிமையான தோற்றம்-படோடாபம் இல்லாத அமரிக்கையான தோற்றம்-மனதில் உள்ள எல்லா கவலைகளும் அவரை பார்த்த மாத்திரத்தில் போய்விடும்-ப்ரிதி பலன் கருதாத அனுக்ரஹம். என் பிள்ளைகளை பற்றி விசாரிப்பார். பெரிய பையன் டாக்டர்- எல்லா வசதிகளும் அவன் ஆஸ்பத்திரியில் உண்டோ? என்று ஆர்வமாக கேட்பார். சின்ன பையனை பற்றி கேட்பார்-அவன் த்யாரிக்கும் கை கடியாரத்தை பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மக்ழ்ச்சி.
பெண்ணை பற்றி கேட்பார். அவள் அமெரிக்காவில் இருப்பதை கேட்டு அங்கு உள்ள விவரத்தை ஆர்வமுடன் கேட்பார். நீ அங்கு போனாயோ? ஆசார அநுஷ்டானத்தை எங்கு சென்றாலும் விடாதே என்றுசொல்வார்.
ஒரு தடவை அவர் ஆடியோ கேசட்டில் பதிவு செய்த-யதிராஜ சப்த்தையை- சி.டியில் பதிவு செய்து அவரிடம் சம்ர்பித்தேன். அவர் அநுக்ரஹம் எனக்கு கிட்டியது என் பாக்கியம். கடைசியாக நான் ஸ்ரீரங்கத்தை விட்டு பெங்களூருக்கு நிரந்தரமாக மாறப்போவதை அவரிடம் சென்று விடை பெற்று கொள்ள சென்றேன். ஒரு ஐந்து நிமிஷம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பெங்களூரில் நம் ஆச்ரமம் உருவாகிகொண்டிருக்கிறது. அங்கு போய்விட்டு வா என்று சொன்னார்.
நான் அவரிடம் 2007- பரந்யாசம் செய்து கொண்ட நாளை என்றும் மறக்கமுடியாது. முதலில் அவரிடம் சன்று என் அபிலாஷையை சொன்னேன். அடுத்த புதன் கிழமை வா அப்படியே உன் தம்பி. தம்பி ஆம்படையாளையும் அழைத்துவா என்று விடை கொடுத்தார். என் மனைவிக்கு தம்பி ஆம்படையாளிடம் ரொம்ப பாசம். அவள் உடம்பு சரியில்லை எப்படியாவது ஸ்வாமியிடம் பரந்யாசம் செய்துவித்துவிடவேண்டும் என்று அவளுக்கு ஆசை.
புதன் கிழமை- சங்கல்பம் செய்து கொண்டு கொள்ளிடத்திற்கு சென்று 27 முறை ஸ்நானம் செய்து அச்ரமத்திற்கு திரும்பும்போது என் ஸ்கூட்டர் கவிழ்ந்து எனக்கும் என் தம்பிக்கும் நல்ல அடி இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இது என்ன் சோதனை என்று ஸ்வாமிகளை மனதார வேண்டினோம். என்ன ஆச்சர்யம்-இரத்தம் நின்று விட்டது.
சுமார் 9.30 மணிக்கு ஸ்வாமிகள் எங்களை உள்ளே அழைத்தார். எங்கள் மனது ஒருமுகமாக ஸ்வாமியின் பால் ஈர்க்கப்பட்டது. அடுத்த 2-ம்ணி நேரம் நாங்கள் எங்களை மற்ந்தோம். ஸ்வாமிகளிடம் தெண்டன் சர்ப்பிவித்துவிட்டு கை கூப்பி நின்று கொண்டிருந்தோம். ஸ்வாமிகள் எங்களை அவர் நித்ய ஆராதனம் செய்யும் மணி மண்டபத்துக்கு அழைத்து சென்றார். எங்களை அதற்கு சற்று வெளியே இருக்க செய்து எங்களிடம் தான் பெருமாளிடம் ப்ரார்த்தனை செய்துவிட்டு வரும் வரை சாஷ்டாங்க நமஸ்காரம் ச்ய்துகொண்டே இருங்கள், அது முடியாதவர்கள் நாராயணாய நம்: என்று ப்ரார்த்திதுகொண்டே இருங்கள் என்று சொல்லிவிட்டு சாளக்கிராம மண்டபத்தை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டே இருந்தார். சுமார் 1- மணி நேரம் பகவானிடத்தில் எங்களுக்காக பரிந்து பேசி எங்கள் சரணாகதியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தார்.
அவர் வயது அப்போது 87 இருக்கும் அந்த வயதிலும் எவ்வளவு பரிவு-சிஷ்யர்களிடத்தில். எங்கள் பாப மூட்டைகளை தொலைப்பதற்காக எத்துனை ப்ரதக்ஷணம் பகவானை. எங்கள் சிந்தையெல்லாம் இப்படிப்ப்ட்ட ஒரு ஆசாரியரை எங்களுக்கு அளித்த பகவானுடைய கருணை, அளவிடமுடியாத்து-அசங்கேய கல்யாண குணங்கள் நிரம்பியவன், காருண்யன், பரம தயாளன். நாங்கள் ஸ்வாமியையே பார்த்துக்கொண்டிருந்தோம்-அவர் முகத்தில் ஒரு தனி தேஜஸ், ஒரு த்ருப்தி, சாந்தம்- எங்களை பகவானிடம் சரணாகதி அடைய செய்துவிட்ட ஆத்ம திருப்தி.
பிறகு எங்களை அவர் அறைக்கு அழைத்துபோய் ஒரு அரை மணி நேரம் -ப்ரபத்தியை பற்றியும் அதன் அங்கங்களை பற்றியும் விளக்கினார். இனி நாங்கள் செய்யவேண்டியதை பற்றி சொன்னார். தினமும் ஜபம் செய்யுங்கள் என்று ஜப புஸ்தகத்தை தந்தார். பூண்டு, வெங்காயம் இவைகளை சாப்பிடக்கூடாது, நாராயணனை தவிர வேறு தெய்வங்களை உபாஸிக்கக்கூடாது, ஆசார, அநுஷ்டானத்தை சிரத்தையாக் செய்துவரவேண்டும் என்று சொல்லிவிட்டு எங்களை சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று விடை கொடுத்தார்.
இந்த நாளை எங்களால் மறக்க முடியாது. எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. அன்று முதல் இன்று வரை நாங்கள் அவருடைய அறிவுரையை கடைபிடித்து வருகிறோம். அவருடைய ஆசியினால் வாழ்க்கை படகு இனிதே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பேற்ப்ப்ட்ட ஒரு ஆசாரியரை நம்க்கு அளித்த அரங்கன் திவ்ய தம்பதிகளுக்கு கோடாணு கோடி சாஷ்டாங்க நமஸ்காரம்.
சாந்தம் தவழும் அவர் திருமுகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். .பௌண்டரீகபுச்ர ஆஸ்ரமம் ஒரு சீல புருஷரை இழந்துவிட்டது. 30 வருஷம் அதை தாங்கி ஒரு மகத்தான நிலையில் நிறுத்திவைத்திருக்கிறார். அவருடையை சேவையை வார்த்தைகளால் அளவிடமுடியாத்து. அது ஒரு பொன்னால காலம். இம்மாதிரி ஆசார்யன் யுகத்திற்கு ஒரு தடவை தான் அவதரிப்பார் போலும்.
ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே கோபாலதேசிகாய மஹாதேசிகாயநம:
அடியேன் தாஸன் மாடபூசி ஜெகன்னாதன்.

Friday, March 16, 2012
ஸ்ரீரங்கமஹத்வம்
ஸ்ரீரங்கமஹத்வம்
சொல்லும் சுடலும் உலகமே சொல்லும், அல்லும் பகலும் அணி திருவரங்கம் என்ன, நல்லோர் என்று சொல்லும் பெரியவர் திருவடியே சேர்ந்தேன் நான், திருவடியில் ஏழு மதிள் அரங்கத்தம்மான், மச்சோடு மாளிகை மதிள் அரங்கருக்கு, அத்தர், சித்தர், பக்தர் வாழும், அந்த நீல அரங்கர், ஏல நீல அரங்கர், தேனார் திருவரங்கம், தேனே திருவரங்கம், மண்டலத்தை மதிள் சூழ்ந்த ரங்கம் ஆங்காரம் கெய்யாத, அமுதென்ன தென்னரங்கம், ஹரி ஹரி பெரிய கோவில், அணி திருவரங்கம் கோயில், சொல்லுவார் சொல்லும் கோயில், தூய்மதி உறையாத கோயில், மெல்லியார் உறையும் கோவில், வேந்தரடி பணியும் கோயில், அல்லியார் போற்றும் கோயில், ஆண்டாள் அரவணைமேல் அமரும் கோயில், காதத்தே மணி ஓசை கேட்கும் கோயில், கேட்டதே இரண்டு செவியும் களிக்கும் கோயில், தூரத்தே திருச்சின்னம் தோற்றும் கோயில், வேதத்தால் பெரிய கோயில், விபீஷணர் வணங்கும் கோயில், ஆதி பெருமாள் என்று அனைவருக்கும் பெரிய கோயில் தானே!
ஹரி, ஹரி பெரிய கோயில். அம்புஜதத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில், தோராத தனி வீரன் தொழுத கோயில், துணையாம் விபீஷணற்கு துணையான கோயில், சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில், செழுமறையின் முதலெழுத்தை சேர்ந்த கோயில், தீராத வினையெல்லாம் தீர்க்கும் கோயில், திருவரங்கம் பெரிய கோயிலிதுதானே! ப்ரம்மாவும் பெறும் தவத்தால் பெற்ற கோயில், பெற்று வைத்து பிள்ளையவர் பெராத கோயில், அயன் வந்து அறுபதாயிரம் பேரோடு அர்ச்சித்த கோயில், பலவினைகள் தீர்த்த கோயில், பரிதாபம் தீர்த்த கோயில், திருவரங்கம் பெரிய கோயில் என திகழும் கோயிலிதுதானே!
ஸப்த ப்ராகாரமும், சந்நிதியும் கண்டேன். ஸர்வேஸ்வரன் திருவடிகளை சாஷ்டாங்கமாக சேவிக்க கண்டேன். இருபுறமும் காவேரி இசைந்துவர கண்டேன். திருமஞ்சன காவேரி சேவிக்கவே கண்டேன். ஆயனார் கோயில் அடி மதிலை கண்டேன். திருகோயில் ஆயனார் திருவழகை கண்டேன். அடையவளைஞ்சான் அடிமதிலை கண்டேன். ஆண்டாள் சந்நதி அதிசயம் கண்டேன். தேர் கண்டேன். சித்திரை வீதி கண்டேன். உத்தர வீதி கண்டேன். நாடு கண்டேன். நகரம் கண்டேன். நாலுகால் மண்டபத்தில் திருவந்திப்பு காப்பு அழகை கண்டேன். ஆனையேத்தி மண்டபமும், ஆண்டாளுடைய சேவை அழகையும், அரங்கனுடைய சேவை அழகையும் கண்டேன். தொண்டரடிபொடி ஆழ்வாரை சேரவே சேவித்தேன்.
கூரத்தாழ்வாரை கூடவே சேவித்தேன். நாதமுனி ஆழ்வாரை நன்றாகவே சேவித்தேன். ஆளவந்தாரை அனுதினமும் சேவித்தேன். சூடிக்கொடுத்த ஆண்டாள் திருவழகை சேவித்தேன். பெரிய ஆழ்வாரை பிரியாமல் சேவித்தேன். கற்கருடக்கம்பத்தை கண்குளிரசேவித்தேன். திருப்பானார் ஆழ்வார் திருவழகை சேவித்தேன். சக்கரத்தாழ்வாரை சரணம் என்று சேவித்தேன். உக்ர நரஸிம் ஹரை உகந்து சேவித்தேன். கோதண்ட ராமரை கூடவே சேவித்தேன். குலசேகர ஆழ்வாரை கூடவே சேவித்தேன். சீதா பிராட்டியார் திருவழகை சேவித்தேன்.
பிள்ளைலோகாச்சாரியாரை பிரியாமல் சேவித்தேன். பார்த்தசாரதியை பணிந்து நான் சேவித்தேன். பாஷ்யகாரரை பணிந்து நான் சேவித்தேன். திருகச்சி நம்பியின் திருவழகை சேவித்தேன். நம்மாழ்வாரை நன்றாகவே சேவித்தேன். மதுரகவி ஆழ்வாரை வணங்கி நான் சேவித்தேன்.திருமங்கை ஆழ்வார் திருவழகை சேவித்தேன். கொட்டார நாச்சியாரை கூடவே நான் சேவித்தேன். மேல பட்டாபிராமரை அடி பணிந்து நான் சேவித்தேன். பொய்கை முனி, பூதத்தாழ்வர், பேயாழ்வார் பிரியாமலே சேவித்தேன்.
தீர்த்தங்கரை வாசுதேவர் திருவழகை சேவித்தேன். தந்வந்திரியை கூடவே சேவித்தேன். ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீளாதேவி, பெரிய பிராட்டியாரை பிரியாமல் சேவித்தேன். தசாவதாரரின் திருவழகை சேவித்தேன். திருமங்கை மன்னன் திருவழகை சேவித்தேன். தூப்புல் ஆசாரியர் திருவடியை அடி பணிந்து சேவித்தேன். ஹயக்ரீவர் வந்நிதியை அடி பணிந்து சேவித்தேன். மேட்டழகிய சிங்கரை முன்பாக சேவித்தேன். கண்ணன் திருவடிகளை கண் குளிர சேவித்தேன். வாசுதேவ பெருமாளை வணங்கி சேவித்தேன். ஐந்து குழி மூணுவாசல் அதிசயமும் கண்டேன். புன்னாக விருக்ஷத்தின் கீழ் வேதவ்யாசரையும், வேணபடியும் சேவித்தேன். கோதண்டராமரை கூடவே சேவித்தேன்.
சீதாபிராட்டியார் திருவழகை சேவித்தேன். பரமபத நாதரை பக்தியுடன் நான் சேவித்தேன். அலங்கார ராமரை அழகாக சேவித்தேன்.காட்டழகிய சிங்கரை கண்குளிர சேவித்தேன்.லக்ஷ்மிதேவியை நன்றாக சேவித்தேன். திருமழிசை ஆழ்வாரை சேவித்தேன். கருடாழ்வாரை கிட்ட நின்று சேவித்தேன். ஆழ்வார் அனைவரையும் அடி பணிந்து சேவித்தேன். அஞ்சனாதேவியின் புத்திரரையும் அடி பணிந்து சேவித்தேன்.
சீனிவாசன் சந்நதியில் பெருமாளை நன்றாக சேவித்தேன். பூவராஹ பெருமாள் பெருமையெல்லாம சேவித்தேன். கமலவல்லி தாயாரை கண் குளிர சேவித்தேன். விரஜா நதியை வேணபடி சேவித்தேன். பரம பதவாசலை பக்தியுடன் சேவித்தேன். திருநாரயணபுரம் செல்லைபிள்ளையையும் சேவித்தேன். மடப்பிள்ளை நாச்சியாரை மகிழ்ந்து நான் சேவித்தேன்.
பெரிய பெருமாள் திருவடிகளே சரணம். பொற்குடகம்பத்தை பொருந்தி நான் சேவித்தான். வெங்கல வாசற்படியை வேணும்படி சேவித்தேன்.
கருகூல நாச்சியரை கண்குளிர சேவித்தேன். விமானசேவையை வேணுபடி சேவித்தேன். செங்கமல நாச்சியாரின் திருவழகை சேவித்தேன். துலுக்க பிராட்டியாரை சேரவே சேவித்தேன். சேரவல்லி தாயாரை சேரவே சேவித்தேன். கிளி மண்டபத்தை கிட்ட வந்து சேவித்தேன். சேனை முதலியாரை சேரவே சேவித்தேன்.பரவாசுதேவரை பக்தியுடன் சேவித்தேன். கண்ணன் திருவடியை கண்டு சேவித்தேன்.
ஸ்ரீனிவாசன் திருவுருவத்தை கண்டு நான் சேவித்தேன். அர்ஜுனமண்டபத்தை அழகாகவே சேவித்தேன். சந்தன மண்டபத்தை சதுராகவே சேவித்தேன்.ஜய,விஜயாள் இருபுறமும் சென்று நான் சேவித்தேன். 108-பெருமாள் திருவடிகளே சரணம். பெரிய பெருமாளை பிரியாமல் சேவித்தேன். கஸ்தூரி ரங்கனாரை கண்குளிர சேவித்தேன். அண்டை நாச்சியாரை அழகாக சேவித்தேன்.
பக்கத்து நாச்சியாரைபாங்காக சேவித்தேன். சின்ன பெருமாள் செல்வரை சேவித்தேன். திருவரங்கமாளிகையாரை சென்று நான் சேவித்தேன். பாம்பின்மேல் பள்ளிகொண்டிருக்கும் பரிமள ரங்கரை சேவித்தேன்.கருமுகிலார் அரவவணையின் மேல் கண் வளர கண்டேன். திரு கண்டேன். பொன்மேனி கண்டேன். திருமதிலும் மணி மரமும் கண்டேன். திருவடிமேல் வளரும் சிலம்பையும் கண்டேன். பீதாம்பரமும், பிராட்டி திருமார்பில், மார்கண்ட பூணலும், மதிநிறைந்த ஆபரணமும், கார்முகிலார் வண்ணனை கண்டாயோ நெஞ்சமே, கஸ்தூரி ரெங்கனை கண்டாயோ நெஞ்சமே, அஞ்சனை வண்ணனை அடிபணிந்து கண்டீரோ, பெருமாள் மஹத்துவததையும், வைரகடுக்கனும், பெருமாள் பிராட்டியார் அழகன்னோ! பார் உலகம் ஆண்ட பூங்கிளியை தோற்றுமே பார்வை அழகன்னோ!
பாருலகம் ஆண்டுவந்த ஆண்மை உண்மை அருள் படைத்த பார்வை அன்னோ! தூண்டாத மணிவிளக்கை சுடலெரித்த பார்வை அன்னோ1 இரும்புபோல் ஹ்ருதய நெஞ்சம், இதயம் உருகும் வண்ணம் மரங்கள்போல் வலிய நெஞ்சம், வாழை நார் போல் வசப்படுத்தி, பூதங்கள் என்னும் தழையை கிள்ளி, பொல்லாத குணங்களை வேரறுத்து புண்ணிய குணங்களுக்கு விளக்கேற்றி, மோகனா, மோகினி மாயை விலக்கி, பேரார் தன்னில் பெருகவே கண் வளர்ந்தேன் கோதை முகில் வண்ணன், உகந்து கலந்ததுபோல், உஷாக்காலத்தில் எழுந்திருந்து, ஹரி ஹரி என்னும் அக்னியை கிளப்பி, திருவரங்கம் என்னும் திருவிளக்கேற்றி, ஆராதனம் என்னும் ஆபரணச்செல்லமெடுத்து, சிற்றம் சிறுகாலே என்னும் திறவு கோலாலே, திருக்காப்பு திறந்து,
முத்து, வைரம், வைடூர்யம், வேதம், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மந்திரங்களையும் கூடவே சேர்த்து, சரணாகதியை நினைத்து, மரணாகதியை மறந்து, துரிதம், துரிதம் என்று தூய விகக்கேற்றி, பரம பதம் என்று பல்லாண்டு பாடுவதுமே. உம்பவரும், செம்பனைமேல், மாளிகைமேல், தாளகமாம், செம்பொன் படிகையாம், நாகத்தலையணியாம், படுக்கையில் வாழும் குருமணி தேசத்தில் ஹரியே! ஹரியே கதியாகி, பர்வதங்களை விருக்ஷங்களாக்கி, விருக்ஷத்தின் கீழ் அவதாரமாகி, சப்த சமுத்திரம் ஆறாகி, தசபலி திட்டம் திருமதிலாகி மந்தார புஷ்பத்தில் மாலை தாழ, ஏகசக்கிறாள் பல்லாண்டு பாட
அஷ்டவசுக்கள் வாக்காள் விளக்க, தும்புரு நாரதர் கீதங்கள் இசைக்க, சுக்கில வசுக்கள் சோபனை சொல்ல, சப்த சமுத்திரம் திருப்பள்ளிக்கட்டிலின் கீழ், தச சமுத்திரம் திருப்பால் பரிமாறி, அனந்தன் என்னும் தலைகணை போட்டு, அச்சுதன் என்னும் கால் கோட்டை நாட்டி, ஸ்ரீ கோவிந்தன் என்னும் முத்துகால் நாட்டி ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளாதேவியோடு யோக நித்திரை செய்யும்போது பிரும்மாவும் கமலத்தை காணாமல் ஓடி எங்கும் தேடி தாமரை நானத்தோகையிலே தமையன் கைகொண்ட முதல் ஏது சேவகம், ஏது சேவகம் என்னும் தசரதர் ச்ய்த தபஸினாலே, கௌசலை செய்த பாக்கியத்தினாலே, சீதை மணவாளர் தசரதருக்கே புத்திரராய், மூர்த்தி நால்வராம், திருவயோத்தியில் அவதாரம் செய்து எழுந்தருளினார்.
கைகேயி தந்த வரத்தாலே கானகத்திற்கு சென்று இலங்கையை அழித்து, இராவணனை
ஸம் ஹரித்து விபீஷணருக்கு லங்கா நகர பட்டாபிஷேகம் செய்து வைத்து, சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு எழுந்தருளி, ஆறில் ஒன்று கடமை வாங்கி, அனைவரையும் த்ருப்தி செய்து, இப்படி கற்ப காலத்தின் நடுவே அரசாண்டிருக்கும்போது, விபீஷணருக்கு திவ்ய விமானத்தை தந்தருளினாய்.
விபீஷணனும்-தான் இந்த பாக்கியம் பெற்றோம் என்று, அடிமேல் பெற்று, முடிமேல் கை கொண்டு இலங்கை நோக்கி எடுக்கபோனதளவு, எடுக்கபோகாதளவு, காவேரியின் நடுவில் சந்திர புஷ்கரணி தென்கரை மேல் புன்னாக விருக்ஷத்தின் கீழே எழுந்தருளினார். விபீஷணர் பாதம் விளக்கி, பரிசுத்தம் பண்ணி அந்தி தொழுது அனுஷ்டானம் பண்ணி பாதிரி பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, பாரிஜாத பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, மகிழம்பூவில் மூவாயிரம் கொண்டுவந்து, திருத்துழாய் தளத்தை ஏராளம் கொண்டுவந்து, அன்று மலர்ந்த செந்தாமரை புஷ்பத்தில் இரண்டாயிரம் கொண்டுவந்து, கஸ்தூரி அரணியின் கணக்கில்லாமல் கொண்டுவந்து, இரு திருவடியில் சமர்ப்பிவித்து,
இக்ஷ்வாகு வம்சத்து ராஜாவானவர் தம்மை தாமே எழுந்தருளிசெய்துவந்த பெருமாளே, மாதவரும் நீரே, மதுசூதனரும் நீரே, ஸ்ரீதரரும் நீரே, செந்தாமரை கண்ணனும் நீரே, ஒரு சப்த சாகரரே, சதுர்புஜரே, மங்கை மணவாளரே, மதுரை மன்னவரே, அம்புவிகரசரே, புண்டரீகாக்ஷரே இப்படி அரண்டும், புரண்டும் பரிதாபம் பண்ணினார். அப்போது பெருமாள், யாம் அந்த ராக்ஷஸ பூமிக்கு வரவல்லோமென்றார். ஸ்ரீராமருள்ளமட்டும் இங்கேயே கண் என்றார்.
ஒருபுறம் வலிய நாடு, இருபுறம் காவேரி, இருபுறம் ரெங்கவிலாஸம், இருபுறம் வலிய நாடு, உறையூர் வல்லி தாயார்,, ஒரு புறம் நானிங்கு மானிடரை ஈடேற்ற வந்தேன், வருஷத்திற்கு ஒரு முறை வந்து நீ போவாயென்று, வருஷத்திற்கு ஒரு முறை நீ வந்து ஆராதனம் செய்வாய் என்றும், திருவடியும், மலரும் விடையும் தந்து அருளி அனுப்பினார். விபீஷணர் தாம் மோக்ஷம் பெற்றதால் இந்த பாக்கியம் பெற்றோமென்று , சிரசால் வகுத்து, தெளிநீர்சார்த்தி, முன்கால் பணிகள் சார்த்தி, முழங்கால் பணிகள் சார்த்தி, திருவிரல் ஆழி சார்த்தி, திருக்கணைக்கால் தண்டை சார்த்தி, ஒரு முத்தோடு ஒரு முத்து ஒரு கோடி விலை பெற்ற திரு முத்து ஹாரத்தை திருமார்பில் திகழவே சார்த்தி,
முத்து, முத்தோடு மாணிக்கம் அறுபதினாயிரம் கோடி விலை பெற்ற திரு நீலநாயக பதக்கத்தை திருமார்பில் திகழவே சார்த்தி, வாகனம் நல்ல வளையள் சார்த்தி, மாணிக்க தோடும் சார்த்தி, கண்டத்தில் காரையும் சார்த்தி, கட்டி முத்து மாலையும் சார்த்தி, ஏழுலகம் ஆண்டவருக்கு யக்ஞோபவீதம் சார்த்தி, பாருலகம் ஆண்டவருக்கு பாண்டியன் கொண்டையும் சார்த்தி ஸர்வேஸ்வரனுக்கு தகுட்டு பீதாம்பரம் சார்த்தி, அழகிய மணவாளனுக்கு அரைநூண்மாலையும் சார்த்தி, அரைவடகிங்கிணியும் சார்த்தி, கண்ணன் உகந்தமாலை, சடகோபன் அளித்த மாலை, சூடிகொடுத்த மாலை, திருமார்பில் திகழவே சார்த்தி,
பொன்னு திருவடியில் புஷ்பம் சமர்ப்பித்து, தங்க திருவடியில் தண்டையும், சியம்பும் சமர்ப்பித்து, பூலோக வாசிக்கு பொங்கல் தளிகை சமர்ப்பிவித்து,பாரளர்ந்த நாதனுக்கு பால் மாங்காய் சமர்ப்பிவித்து, மலைபோல் வளர்ந்தால்போல் வடகடலும், தெங்கடலும் வளர்ந்தால்போல் முகத்தில் கருண்ட கேசமும், முகத்தில் உருண்டைமுடியும், அண்டம் கயிறாக, ஆற்கடல் பாம்பாக, யக்ஞசித்தன் திருமதிலாகி, எழில்ரங்கத்தம்மான், ஹனுமன் படையும், கருடக்கொடையும், பரிமளமான உடையவரும், வடதிருவாசல் தேசிகரும், கோமகளார் எடுத்தக்கொற்றக்குடையும், திருமகளார் எடுத்த திருவந்திகாப்பழகும் இப்பேற்கொண்டு ஸ்ரீரெங்காவதாரத்தை கற்றவரும் கேட்டவரும், கற்றுகொடுத்தவருக்கும், காதுகுளிர கேட்டவருக்கும், சொல்லு, சொல்லு என்று செவிகுளிர கேட்டவருக்கும்,
இன்னும் சொல்லு என்று இருந்திருந்து கேட்டவருக்கும், பின்னும் சொல்லு என்று பிரியமாய் கேட்டவருக்கும், எட்டாத பரமபதம் இமைபொழுதில் கிடைக்கும், தட்டாத பரமபதம் தானே கிடைத்துவிடும், மன்னு திருவோண துவாதசியில் சொல்லி துதிப்பார், சுத்தராகி, பக்தராகி உள்ளும் , புறமும் ஜோதி உடனாய் சேர்ந்திருப்பார், என் எம்பெருமாள் திருவடிகளே சரணம்.
--------------------------------------
மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் யார் எழுதி வைத்தார் என்று தெரியாது. ஆனால் ஸ்ரீரெங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் அழகு, ஸ்ரீரெங்கத்தில் அமைந்திருக்கும் சந்நதிகள், பகவானின் சிறப்பு, ஆழ்வார்களின் பெருமை இவை அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. படிப்பவர்கள் அதோடு ஸ்ரீரெங்க உலா வருவதுபோல் காட்சியையும் காணலாம்.
மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் என்னுடைய மனைவிக்கு அவள் சிநேகிதி-குண்டு கண்ணம்மா என்பவள் சொல்ல கேட்டு எழுதிகொண்ட குறிப்பு. இதை படிப்பவர்களுக்கு நிச்சியம் மோட்சம் கிட்டும் என்பது திண்ணம்.
-------------------------------------------------

தேரோடும் வீதி
தேரோடும் வீதி
சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். 10-நாள் அரங்கனுக்கு பவித்ரோத்ஸவம் உத்ஸவம். ஆரம்ப நாளே பெருமாளுடைய புறப்பாடை சேவிக்க ஆவலுடன் திருமாமணி மண்டப வாயிலில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று சரியாக இரவு 7- மணிக்கு புறப்பாடு.
நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ ஸ்ரீமாந்தாங்கிகளை ( பெருமாளை ஏலபண்ணுபவர்கள் ) அழைத்துவரும் அழகே தனி. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தானது. நாதஸ்வரத்துடன் அவர்கள் மண்டபத்தின் வாயிலில் வரிசையாக நிற்பார்கள்.
அவர்கள் உடை அழகே தனி. எல்லொரும் ஒரே மாதி பஞ்சககச்சம் அணிந்து தலையில் ஆரஞ்சு சிவப்பு தலைப்பாகையுடன் பணிவன்புடன் பெருமாளின் உத்தரவுக்காக காத்திருப்பார்கள். உத்தரவு கிடைத்தவுடன் உள்ளே சென்று பெருமாளை ஏலப்பண்ணிகொண்டு கிளம்புவார்கள். பெருமாள் ராஜ நடையுடன் நுழை வாயிலை தாண்டும்போது-சாத்தாதர் கட்டியம் கூறுவார். சிம்மம் போல் நடந்து வந்து சற்று வினாடி கருடனை பார்த்துவிட்டு கம்பீரமாக திரும்பி மேற்கு வாயிலின் அருகே நிற்பார்.
அவர் வெளியே வரும் சமயம் ஜீயரும் மற்றவர்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு தீர்த்தம், சடாரி பெற்றுக்கொண்டு விடை பெறுவார்கள். பெருமாள் படியைவிட்டு இரங்கி சற்று நேரம் எதிரே உள்ள கண்ணாடி அரை முன் நின்று விட்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை நோக்கி புறப்படுவார்.
ஒரே ஓட்டம் தான்-பெருமாள் 10-நிமிடத்தில் துவஜஸ்தம்பத்தை தாண்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை அடைவார். அங்கே திருவந்திகாப்பு கண்டருளி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்காக காட்சி கொடுப்பார். இது 10- நாளிலும் நடைபெறும்.
பவித்ரோத்ஸவம் எதற்காக நடைபெறுகிறது?
பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம், ஆராதனமும், அமுதுபடியும் ஆகம முறைப்படி நடைபெறவேண்டும். சுழல் முறையில் பட்டர்கள் இதை மேற்கொள்வார்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் ஏற்படலாம். அதே போல அலங்காரத்திலும், ஆடைகளிலும் குறைபாடுகள் ஏற்படலாம். அதற்கு பரிகாரம் தான் இந்த பவித்ரோத்ஸவம்.
பவித்ரமான புணூலை அணிவித்து ஹோமம் முதலான விதிகளை இந்த 10-நாட்களிலும் அனுசந்தித்து வெகு ஜாக்கிரதையாக பவித்ரோத்ஸவ மண்டபத்தில் பெருமாளை தினம் எழுந்தருளப்பண்ணி பக்தர்களுக்கு அநுக்ரஹம் செய்ய இந்த விழா. இது முடிந்தவுடன் பவித்ரங்களை கலைந்துவிட்டு பழைய படி தினம் பூஜாகாலம் தொடரும்.
இந்த 10-நாளில் ஒரு நாள் நான் தேரோடும் சித்திரை தெருவில் வீதி ப்ரதக்ஷிணம் செய்ய சென்றேன். முக்கியமாக பலவருஷங்களுக்கு பிறகு இந்த வீதிகள் எப்படி மாறி இருக்கின்றன, பழைய சம்பிரதாயம் தொடருகிறதா என்று அறிய ஆவல்.
எனக்கு நான் சற்றும் எதிபாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பழைய வீதிகள் முழுவதும் மாறிவிட்டது. ஸ்ரீரங்கம் தன் புராதண சரித்திரத்தை இழந்துகொண்டிருப்பது கண்கூடாக காண முடிகிறது.
அந்தகாலத்தில் வீடுகள் வாசலில் திண்ணையுடன் அழகாக இருக்கும். முக்கியமாக யாத்ரீகர்கள் ஒரு நாள் அல்லது 2- நாட்கள் தங்க இந்த திண்ணைகள் பயன்பட்டு வந்தன. வெய்யல் காலங்களில் வீட்டு சொந்தக்காரர்கள் வெளியில் படுத்து உறங்கவும், பயணிகள் சற்று இளைப்பாரவும் பயன்பட்டுவந்தன.
அநேகமாக இந்த வீடுகள் 10-15 அடி அகலம், 100 அடி நீளமாக இருந்தன. ஒரே ஒரு அறை தான் வாசலை நோக்கி இருக்கும். புதிதாக கல்யாணமான சிறுசுகளைத்தான் இங்கு படுக்க சொல்வார்கள். மற்றபடி எல்லோரும் சேர்ந்தே வாழ்வார்கள். ( JOINT FAMILY ). துன்பத்திலும் இன்பத்திலும் சம பங்கு. கல்யாணம் என்று வந்தால் கோலாகலம் தான். அதுமாதிரி வீதியில் பெருமாள் ஏளினால் கல்யாண களைதான். விதம் விதமான கோலங்கள்-போட்டி போட்டுக்கொண்டு இளம் பெண்கள் அழகாக பாவாடை தாவனியுடன் கோலம் போடுவார்கள்.
வருஷம் 300 நாளும் பண்டிகை நாள் தான் ஸ்ரீரங்கத்தில்-ரங்கன் வீதியில் வலம் வரும் காட்சியே தனி காட்சி தான்.யானையும், குதிரையும் முன்னே செல்ல நாதஸ்வரம் வாசிக்க நம் பெருமாள் தேரோடும் சித்திரை, உத்திர வீதிகளில் பவனி வரும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். பெருமாளுக்கு இன்றும் எண்ணை விளக்கு தான்-கேஸ் லைட் கிடையாது.
நடந்து கொண்டே வலம் வரும்போது மேற்படி காட்சிகள் என் மனதில் அலையோடின. ஆனால் இன்று வீதிகள் முழுக்க மாறிவிட்டது. பழைய வீடுகளை இடித்து புதிதாக வீடுகள். திண்ணை எல்லாம் போய்விட்டது. அதற்கு பதிலாக கேட் போட்ட காம்பவுண்ட்-வாகனங்கள் நிறுத்த. பெருமாள் வரும் சமயம் அவசர அவசரமாக ஒரு சிறு கோலம். இளம் பெண்களை காணவில்லை.சூரிதாரும்,சால்வார் கமீஸும் தான்.
அந்த நாளில் வீசிய தெய்வீக மணம் குறைந்துவிட்டது. இருந்தாலும் பலர் பழைய சம்பிரதாயங்களை கட்டி காக்க போராடுகிறார்கள். அரங்கனுக்கு நடக்கும் திருவிழா தொடர்ந்து பழைய பாணியிலேயே நடந்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். புதுமை வேண்டும் . ஆனால் அது பழமையின் மேன்மையை தழுவி அமையவேண்டும்.
10-நாள் உத்ஸவத்தை கண்குளிர கண்டு அரங்கனோடு இணைந்துவிட்டு பிரிய மனமில்லாமல் எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்கின்றது. மீண்டும் அரங்கனை காண எப்போது? தெரியவில்லை.
-------------------------------------

Subscribe to:
Posts (Atom)