Tuesday, October 5, 2010

அரங்கம், அரங்கனின் சிறப்பு-3

அரங்கம், அரங்கனின் சிறப்பு-3


திருவரங்கம். திருஅரங்கன் சிறப்புகளை ஆழ்வார்கள் அனுபவித்ததை உங்களுக்கு அளித்துவருகிறாம். 12-ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் அரங்கனை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள் . அவைகள் தேனூறும் பக்தி ததும்பும் பாசுரங்கள். சொல்ல சொல்ல, படிக்க, படிக்க திகட்டாதவைகள்.

வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
  பாதியும் உறங்கிபோகும்; நின்றதிற் பதினையாண்டு
பேதைபா லகன தாகும்; பிணிபசி மூப்புத்துன்பம்
  ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!
                                             தொண்டரடிபொடி ஆழ்வார்-திருமாலை


வேதங்கள் சொல்படி மனிதர்கள் நூறு ஆண்டு ஆயுள் காலத்தை பெற்றாலும், அதில் பாதி பாழாய் போன தூக்கத்தில் போய்விடுகிறது.மீதி பாதியில் அறியாத  குழந்தை பருவத்திலு, பாலக பருவத்திலும், சிற்றின்பத்திலேயே கழியும் இளைஞர் பருவத்திலும் போய்விடுகிறது. மிகுதி நோய், பசி, மூப்பு இப்படியாக போய்விடுகிறது-ஆதலால்   ரெங்கா! இப்பிறவியை நான் ஒருபோதும் வேண்டமாட்டேன்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
  வடதிசை பின்பு காட்டி தெந்திசை இலங்கை நோக்கி
கடல்- நிற கடவுள்  எந்தை அரவணைத்தியிலுமாகண்டு
  உடல் எனக்கு உருகுமாலோ! என்செய்கேன் உலகத்தீரே!
                                                                                திருமாலை

               
ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற் ரொருவர் இல்லை;
  பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன்;
ஆரு உளர் களைகண்? அம்மா! அரங்கமா நக ருளானே!
                                                                             திருமாலை

பெருமாளே! நீர் உகந்திருக்கும் ஊர்களில் நான் பிறக்கவில்லை-திருப்பல்லாண்டு போன்ற கைங்கர்யங்கள் செய்ய தகுதியும் இல்லை; முகம் பார்த்து பழகிய உறவினர்களோ, நண்பர்களோ கூட இல்லை, துன்பமே நிறைந்த இவ்வுலகத்தில் தங்கள் திருவடியையும் நான் பற்றவில்லை-காரொளி வண்ணனே! மேகம் போன்ற காந்தியுடைய கண்ணனே, தென் அரங்கனே வேறு புகலற்று உன்னையே கதறி அழைக்கிறேன்-உன்னை தவிர என்னை காப்பாற்றுபவர் வேறு யார் இருக்கிறார்? ஒருவரும் இல்லையே?

மனதில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை
  சினத்தினால்செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலை யானே! பொன்னிசூழ் திருவரங்கா!
  எனக்கு இனிக் கதியென் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!
                                                                                         திருமாலை

என் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை. என் மனத்திலிருந்து காமம். கோபம், மதம், மாச்சர்யம் போன்ற தீய குணங்கள் நிறந்து இருக்கிறது-அதனால் தூய்மை இல்லை. இப்பேற்ப்பட்ட தீய குணங்கள் நிறைந்த எனக்கு-காவரி மாலையாக சூழப்பெற்ற, அழகிய திருதுளாய் மாலையை அணிந்து திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள   அரங்கனே-எனக்கு நீதான் கதி !

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்;
  களையிருள் அகன்றது காலையம் பொழுதாய்;
மதுவிருந்து ஒழுகின மாமலர் எல்லாம்
  வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
  அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே.

                                             
கொஸல்யா சுப்ரஜா ராமா! என்று விச்வாமித்திரர் ராமனை காட்டில் துயில் எழுப்புவதை போல்
ஆழ்வார் அரங்கணை துயில் எழுப்புகிறார்.
கதிரவன் கிழக்கே எழுந்துவிட்டான். இருளும் விலகிவிட்டன. அழகிய காலை பொழுது ஆரம்பாகிவிட்டன. சிறந்த மலர்கள் எல்லாம் விரிந்து தேனை சிந்துகின்றன. தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் ஒருங்கே கூடி உன்னுடைய வாசற் கட்டிலின் கிழே உன் திருக்கண் படவேண்டும் என்று நிற்கின்றனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்கள், முரசு வாத்தியம் இவைகளின் ஓசை எங்கும் பரவுகின்றது. எனவே நீ துயிலுணர்ந்து எழுவாயாக

( to be continued )

R.Jagannathan.

No comments:

Post a Comment